எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, January 27, 2023

அஷ்டாஷ்ட பைரவர்கள்!

 ருத்ரயாமள தந்திர நூலின் 64 பைரவர்கள்

காலத்தின் தத்துவத்தை உணர்ந்த பண்டைய ரிஷிகள் காலத்திற்கு பலவகையான ரூபப்பேதத்தையளித்தார்கள் . காலபைரவம் என்ற பரசிவத்திலிருந்து எட்டு அங்கங்களாய் அஷ்ட மஹா பைரவர்கள் உருவானார்கள். அந்த அஷ்ட மஹா பைரவர்களே அஷ்ட வித்யேஸ்வரர்கள் எனப்பட்டனர். மஹாமர்த்தனபைரவர், பஞ்சவக்தபைரவர், ரவிபர்கபைரவர்ஏகாநந்தபைரவர், மஹாசண்டபைரவர், நமோநிர்மலபைரவர், டமருபா!கரபைரவர், பட்காரபைரவர் என்ற எண்மார்களே அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரஹாம்யம், ஈசத்துவம், வசித்துவம் போன்ற எண்வகை சித்திகளை தன்னை வேண்டும் உயிர்களுக்கு வழங்குகின்றார்கள். அந்த எண்வகை சித்திகளும், எண்வகை தீயகுணங்கள் விலகினால் மட்டுமே உயிர்களுக்கு கிட்டுகின்றது. எண்வகை விகாரகுணங்களான காமம், குரோதம், மதம், மாச்சர்யம், உலோபம், மோகம், இடும்பு போன்றவற்றை விலக்கவே அஷ்ட பைரவ மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.

1)அசிதாங்க பைரவம், 2) ருரு பைரவம், 3) சண்ட பைரவம், 4) குரோத பைரவம், 5) உன்மத்த பைரவம், 6) கபால பைரவம், 7) பீஷண பைரவம், 8) சம்ஹார பைரவம் என்ற எட்டு பைரவர்களே அஷ்ட மண்டல பைரவங்கள் என்று அழைக்கப்படுகின்றனர். எண்வகை தீயகுணங்களை உலக ஜீவன்களுக்கு ஒழித்து பிறவி கடைத்தேறுதல் செய்வதே இவர்களின் பணியாகும். இந்த அஷ்ட பைரவ மண்டலங்களிருந்தும், அவைகளின் கலாகுணங்களாக எட்டெட்டாக 64 பைரவங்கள் உருவாகி, அவர்கள் அஷ்டாஷ்ட பைரவர்கள் எனப்படுகின்றன. இந்த 64 பைரவர்களும் 64 ஞானங்களை வழங்கியும், தம்மை வேண்டும் ஜீவன்களுக்கு எல்லா சிறப்புகளையும் செய்கின்றனர். அஷ்ட பைரவர்களுக்கும்அவை சார்ந்த 64பைரவர்களுக்கும் துணைசக்தி யோகினிகள் உண்டு.

அசிதாங்கம் முதல் சம்ஹாரம் வரை பைரவரூபங்கள் காலப்பைரவத்திலிருந்து எட்டாக பிரிந்து அவை ஒவ்வொரு மண்டலங்களாக ஒவ்வொரு தொகுதிக்கும் எட்டு 64 பைரவர்காளாகி மொத்தம் 64 பைரவர்களாய் அஷ்டாஷ்ட பைரவர்கள் என்றை அஷ்டாஷ்ட பைரவர்களும் என்றழைக்கப்படுகின்றனர். அவர்களது துணை சக்திகளாம் தேவிகள் சதுசஷ்டி யோகினிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த 64 பேரும் 64 கலைக்ஞானங்களையும், 64 சித்திகளாகவும், 64 தந்திரகலைகளாகவும், வீரம், கருணை, ஞானம் என்ற பைரவ அம்சத்தோடு உலக உயிர்களுக்கு அருள்கின்றார்கள்.

சிவாகமங்கள் 28ல் பைரவரைப்பற்றி குறிப்பிடும் ஆகமங்களில், 64 பைரவர்களை பற்றி குறிப்புகள் இருந்தாலும், அவருடைய நாமங்கள் ஒவ்வொரு ஆகமங்களிலும் பேதப்படுத்தபட்டிருக்கும். ருத்ரயாமளம் என்ற தந்திரநூலின்படி 64 பைரவர்களும், அவர்தம் யோகினிகளும் அன்பர்கள் அறிந்து தெளிந்து கொள்ளும் முறையில் திருஆலவாய் பைரவ மண்டலம் இங்கே வழங்கின்றது. 64 பைரவர்களையும், அவர்தம் யோகினிகளையும் முறையே தியானிப்பதால்

முதற்கணம் (அசிதாங்கபைரவர்) -மூலாதாரம்

பொன்னிறமேனியுடன், அழகுடைய உருவமைப்பு, முத்தலைச் சூலம், உடுக்கை, பாசம், வாள் ஏந்தும் கரங்கள், இவர்களின் தலைவர் 1)அசிதாங்க பைரவர் , இவருடன் 2) விசாலாட்சர் 3) மார்த்தாண்டர் 4) மோதகப்பிரியர் 5) ஸ்வச்சந்தர், 6) விக்கின சந்துஷ்டர், 7) கேசரர், 8) ஸசராசாரர் என எண்மராவர். இவர்களின் தொகுதி அசிதாங்கபைரவ மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.


இரண்டாம் கணம் (ருரு பைரவர்) - மணிபூரகம்

வெண்ணிறமேனியுடன், பல அணிகள் அணித்தோர், அர்மாலை, அங்குசம், ஏடு(புத்தகம்), குழல் ஆகியவற்றை ஏந்தியவர்கள். இவர்களின் தலைவர் 1)ருருபைரவர் . இவருடன் 2)குரோத தம்ஷடரர், 3) ஜடாதரர், 4) விஸ்ரூபர், 5)வஜ்ரஹஸ்தர், 6) மஹாகாயர், 7) வீருபார்ர் 8) க்ரீடனர் என எண்மராவர்இவர்களின் தொகுதி ருரு பைரவர் மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.


மூன்றாம்கணம் (சண்ட பைரவர்) -மணிபூரகம்

நீலநிறமேனியுடன் மிக்க அழகுடயவராய் நான்கு கரங்களிலும், அழல், கதை, குண்டிகை, சக்தி ஆகிய படைக்கலன்களை தாங்கியோராவர். இவர்களின் தலைவர் 1)சண்டபைரவர், இவருடன் 2)பிரளயாந்தகர், 3)பூமிகம்பர், 4)நீலகண்டர், 5)விஷ்ணு, 6)குலபாலகர், 7) முண்டபாலர், 8) காமபாலர் என்னும் எண்மராவர். இவர்களின் தொகுதி சண்டபைரவர் மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.


நான்காம்கணம் (குரோதபைரவம்) -அநாகதம்

இந்த தொகுதியினர் சாம்பல்நிற மேனியர்,நான்குகரங்களில் வாள், கேடயம், ஈட்டி, கோடாரி போன்ற படைக்கலன்களை தாங்குபவர்கள். இவர்களின் தலைவர் 1) குரோதபைரவர் இவருடன் 2)பிங்கலேர்ணர், 3)அப்பிரரூபர் 4)தராபாலர், 5)குடிலர் 6) மந்திரநாயகர், 7)உருத்திரர், 8)பிதாமகர் என்னும் எண்மராவர். இவர்களின் தொகுதி குரோதபைரவ மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.


ஐந்தாம்கணம் (உன்மத்தபைரவர்) -விசுத்தி

இந்த தொகுதியினர் வெண்ணிறத்தினர், நான்குகரங்களில் குண்டிகை, கேடயம், பரிகம், பிண்டிபாலம் போன்ற படைக்கலன்களை தாங்குபவர்கள். இவர்களின் தலைவர் 1) உன்மத்தபைரவர் இவருடன் 2)வடுகநாதர், 3)சங்கரர், 4) பூதவேதாளர், 5)திரிநேத்திரர், 6)திரிபுராந்தகர், 7)வரதர், 8)பர்வதவாசர் என்னும் எண்மராவர். இவர்களின் தொகுதி உன்மத்தபைரவர்மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.


ஆறாம்கணம் (கபாலபைரவம்) - சிரசு மத்தியில்

இந்த தொகுதியினர் மஞ்சள்நிற மேனியர், நான்குகரங்களிலும் குண்டிகை, பலகை, கதை, பிண்டிபாலம் போன்ற படைக்கலன்களை தாங்குபவர்கள். இவர்களின் தலைவர் 1)கபாலபைரவர் இவருடன் 2)சசிபூஷணர், 3) ஹஸ்தி சர்மாம்பரதரர், 4)யோகீஸர், 5)பிரம்மரார்ஸர், 6)சர்வக்ஞர் , 7)சர்வதேவேஷர், 8)சர்வபூத ஹ்ருதிஸ்திதர், என்னும் எண்மராவர். இவர்களின் தொகுதி கபாலபைரவர்மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.


ஏழாம்கணம் (பீஷணபைரவர்) - லலாடம்

இந்த தொகுதியினர் செந்நிறமேனியராக, ஆறாம்கணத்தவரை போலவே குண்டிகை, பலகை, கதை, பிண்டிபாலம் போன்ற படைக்கலன்களை தாங்குபவர்கள். இவர்களின் தலைவர் 1) பீஷண பைரவர் இவருடன் 2)பயஹரர், 3) சர்வக்ஞர், 4)காலாக்னிருத்ரர் 5)தரிணாமுகர், 6)அஸ்த்திரர்7)சசிபைரவர், 8)பிரம்மபைரவர் ஆகியோருடன் எண்மராவர். இவர்களின் தொகுதி பீஷணபைரவர்மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.


எட்டாம்கணம் (சம்ஹாரபைரவர்) - சிரசு மத்தியில்

இந்த தொகுதியினர் மின்னலையொத்த நிறமுடையவர்கள், இவர்களும் ஏழாம்கணத்தவரைப்போலவே குண்டிகை, பலகை, கதை, பிண்டிபாலம் போன்ற படைக்கலன்களை தாங்குபவர்கள். இவர்களின் தலைவர் 1) சம்ஹார பைரவர் இவருடன் 2)அதிரக்கதாங்கர், 3)காலாக்னி, 4)பிரியங்கர், 5)கோரநாதர், 6)மஹா ரௌத்ரர், 7)யோகீசர், 8) தட்சம்ஸ்திதர் ஆகியோருடன் எண்மாகின்றார். இவர்களின் தொகுதி சம்ஹார பைரவர்மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.

இந்த எட்டு மண்டலங்களும் சேர்ந்து காலபைரவ மண்டலமாகின்றது. உலக ஜீவன்களின் தேகங்களில் எண்வித மண்டலங்களாக 64பைரவர்களும் தத்தம் துணைசக்தியான யோகினிகளோடு அருள்புரிகின்றனர். இந்த மண்டலங்களை முன்கூறிய சக்கரங்களோடு, சிறந்த யோகாநிலையில் தியானம் செய்பவர்களுக்கு அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ராப்தி, பிரஹாம்யம், ஈஸத்துவம், வஸித்துவம் என்ற எண்வகை சித்த்திகளும் அதன் உள்வகையான 64 சித்திகளும் சிறப்புற உண்டாகி காலவியூகரான காலபைரவரின் திருநிழலை அடைவர்.

சித்திகளை வழங்குவது பைரவர்களுடன் உறையும் யோகினிகளே! என்று பல தந்திர நூல்கள் கூறுகின்றன. 64 யோகினிகளும் அஷ்டமாதர் எனப்படும் பிராஹ்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி,வாராஹி, இந்திராணி, சாமுண்டி, சண்டி எனப்படும் எண்மரே மண்டலத் தலைவிகளாவர்.