எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, November 17, 2010

கலியுகம் பற்றி ....

கலியுகம் பற்றி  - காரைச் சித்தர்


யுகமாறிப் போச் சுதடா கலியுகத்தில்
      யோகியவன் நிலைமாறிப் புரண்டு போவான்
சகமாறிப் போச் சுதடா சகத்தி லுள் ளோர்  
     தமைமறைந் தார் பொருள் நினைத்தே தவிக்க லுற்றார்
அகமாறிப்
போச் சுதடா காமம் கோபம் 
      அறுவகையாம் பேய்க்குனங்க ளதிக மாச்சே
புக
ழ்மாறிப் போச் சுதடா மனிதற் குள் ளே
      பூரணர்கள் மறைந்துள்ள ரவரைக் காணே .

காலநெறி யாதுரைப்பேன் கேளாய் கேளாய் 
     காணவரு மாயிரம வருடத் துள்
ளே
பாலமடா வானத்துக கேற்ப பாதை
      பகனவெடி சுகனவெடி பண்ணு வார்கள்
சீலமுறும் வர் ணதர் மம் சிதைந்து போகும் 
      சீச் சீச்சீ வரன் முறைகள் மாறிப்
போகும்
கோலமுறிங் குவலயமே சட்ட திட்டம்
      கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம்



 தீராத புயல் கயெல்லாம் தினமுண்டாகும்
          தீக் கங்கு எரிமலைகள் சிரிப்புக் கூடும் 
தேராத நோய்க ளெலாம் தின முண்டாகும் 
         திசை கலங்கும் பூகம்பத் திறமே சாடும் 
நேரான நெறியெல்லாம்  நடுங்கி யோடும் 
         நெறியில்லா நெறியெல்லாம் நிறைந் தூ டாடும் 
போராகக்  குருதிகொப் பளித்துப் பொ ங்கும்   
         புகையாகப்  புவனவளம் புதைந்து போகும் 



தெய்வமெலாம் விண் ணாடிப் போகும் போகும்
      தீ மையெலாம் மண் ணகத்தின் தெருக்கூத் தாகும்
உய்யுமுண் மை யுளத் துண் மை யோடிப்  போகும்
       உலகவுண் மை விஞ் ஞானம் கூடி வேகும்
ஐயமில் லை யெனவகங்கா ரந்தான் துள்ளும்
         ஐயையோ அகிலமெலாம் கள்ளம் கள்ளம்
 துய்யநெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர்
         தூ லநெறி காட்டுகின் றா ரெத்தர்  ரெத்தர்.

   வெத் துலக விதியெல்லாம் வெப்பம் தட்பம்
             விஞ் ஞான விதியெல் லாம் சேர்ப்பும் கூரப்பும்
   செத் துலக விதியெல் லாம் யாதம் கூதம்
             சீ வனுடல்  விதியெல் லாம் காமம் கோபம்
   சத் துலக விதியெல் லாம் சகசம் சாந்தம்
             தா ன் தா னா த் தான் மயமா த் தழைவே தாந்தம்
   சித் துலக விதிசத் தி னோடு சித் தா ய் ச்    
              சேரனந் தத் தா னந் தச் சீராம் வேராம    !!!!!   





இப்படிக்கு ,

புலிப்பாணி சித்தர் அடிமை
சித்தர் பைத்தியம்

No comments:

Post a Comment