
பிணமாகிப் பிறக்கமட்டும் மாய்கையாலே
திறக்குமிது மேல்வாசல் சங்குமூச்சு
செல்லயிலே விந்துள்ளாய் ஆத்துமாச்செல்லும்!!!
மறக்குமிது வரைகளிலே செனிப்பதில்லை
மனஞ்சென்ற இடங்களிலே பிறப்புஉண்டாமே!!!
பற்றான கிரியையொடு சரியைக்கெல்லாம்
பரிசுகெட்ட நினைவாலே நிறைத்துதானும்
கொண்டாடித் தற்பனங்கள் செய்வோம்என்பார்
குரும்பரப்பா எள்ளோடு தண்ணீர்வார்ப்பார்
தெண்டனிடு வார்கோயில் தோறுஞ்சென்று
தெளிவற்றே தெளியார்கள் அலைவார்தானே!!!
அமாவாசை விரதமென்பார் திதிகள் செய்வார்!
உலைவார்கள் வேதியற்கு அன்னம்ஈய்ந்து !!!
உறுதியாய்ப் பிண்டமிட்டு பிதிர்க்குப்பூஜை!
மலையாமற் கொடுப்பார்கள் எள்ளுந்தண்ணீர் !!
வார்ப்பார்கள் வேதமுறை வளப்பமாக!
நிலையான விந்துகெட்டுப் பிணமாய்ப்போனால்!!
நீயார்க்குத் தற்பனங்கள் செய்யும்வாரே.!
தேறாத பசுக்களப்பா மாய்கைக்குள்ளே !
சிக்கினாற் பிறப்பிறப்பிற் சிக்கினாரே.!!!

தேசத்தோ டொத்துணியாய் வாழாதப்பா
சொக்காதே யிருந்தல்லோ சாக்கிரத்திற்
சுருதியந்த ஆக்கினையி லகாரந்தொட்டு
மக்காத கீழ்படியில் மகாரந்தொட்டு
வாசமா மிடகலையில் வகாரந்தொட்டு
புக்காதே பின்கலையிற் சிகரந்தொட்டு
பூட்டப்பா ரிதுவல்லோ அமாவாசையெண்ணே.

ஆகாகா விந்துநா தத்துட்பாரு
நமவசி விந்துவிலே நாட்டமூணு
நாலான பூரணத்தை மேலேதாக்கு
சமராகி விந்துவோடு நாதம்ரெண்டுஞ்
சமரசமாம் அமாவாசைக் குள்ளேதாக்கி
யிமையோடு விழியூட்டு சோமசூர்யன்
யிகபரமாய் ஒளிவீசும் திதியிதாச்சே.
திருபுலிப்பாணி அவர்களே,
ReplyDeleteதங்கள் வலைப்பூ மிக்க திறனுடைய ஒரு கணினி வல்லுனரால் திறம்பட உருவாக்கப்பட்டது போல், இருக்கிறது.தங்களது சமயோசித புத்தியால் ,படங்களை சரியான இடங்களில் கோர்த்துள்ளீர்கள்.மிகவும் ரசிக்கத் தக்கதாயுள்ளது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யன் அகத்தியர் பாடல்கள் அருமை.
ReplyDeleteபதிந்த உங்களுக்கு நன்றி.