கற்பம் பற்றி இந்த பதிவில் ,
முறையாகக் கற்பத்தைச் சொல்லக் கேளு
மூதண்ட லேகியமும் அயக்காந்தந்தான்
துறையாக அறுசுவையும் கழற்று முன்பே
தூரிதமாய்க் கொண்டுவிடு மண்டலந்தான்
நிறையாக வல்லாரை வருடம் ஒன்று
நேயமாய்க் கொண்டபின்பு கடுக்காய் கொள்ளு
அறையாமல் அதன்பிறகு மிளகு கொள்ளு
அதன்பிறகு கொங்கணர் சொல்முறையைக் கொள்ளே
--- அகத்தியர்
அதன் தொடர்ச்சியாக ...., பட்டியல் நீள்கிறது ...,,
வல்லாரை விபரம் ..,
காடி வைப்பு ...,
காடி மருத்துவம் ...,
அடக்கம் ..,
கற்பம் உண்ணும் காலத்தில் தூங்கும் முறை ....,
கற்பத்துக்கு பத்திய பாகம் ...,
கடுக்காய் கற்பம் ...,
நயனக்குறி ...,
கபசுத்தி , மூலசுத்தி ..,
குறி மிளகு கற்பம் ..,
சுண்ணவகை களட்ட ...,
மிளகு சுத்தி மூதண்டம் .., மூதண்ட மருத்துவம் ..,
மறுகற்பம் ..,
கற்பம் உண்ணும் பக்குவம் ..,
கற்பம் உண்ணக் காலம் ..,
பதியம் உண்ணும் காலம் - கலை
கற்பம் உண்ண (காந்த) பாத்திரம் ..,
கற்பம் உண்ட பிறகு அதன் உஷ்ணத்தை கழட்டுதல்...,,
இவையெல்லாவற்றிக்கும் முன்
கறபம் உண்ண அறிவு .
பற்றி அகத்தியர் .,
உண்ணுவது சாதகமாய்த் தள்ள வேணும்
......... .., பண்ணுவது சிவயோகம் பண்ண வேணும்
பார்வதியுஞ் சிவனுடைய தீட்சை வேணும்
ஆக முதலில் சிவயோகம் செய்வோம் , பார்வதியுஞ் சிவனுடைய தீட்சை பெருவோம் .., !! பெற்றுவிட்டால் தானாக சித்தர்கள் நம்மிடம் வந்து அவர்கள்கையால் கற்பம் தருவார்கள் .!! பிறகென்ன
....குத்தினால் காயத்தில் தைத்திடாது
கள்ளவே கருங்கல்லாஞ் சடலந்தானும்
கற்பாந்த காலந்தான் மசகமாச்சு
துள்ளவே நித்திரைதான் கொள்ளோட்டாது
சோபமில்லை சாபமில்லை துற்பசியும்போச்சு
விள்ளவே சுக்கிலந்தான் கீழோடாது
வேண்டியதோர் பெண்ணோட மருவலாமே ..!!!
ஆக அன்பர்களே .,, கற்பம் உண்பது வேறும் உலகியலில் அலையமட்டும் அல்ல! அல்ல!!..,அல்லவேஅல்ல!!! அண்டங்களையும் பேரண்டங்களையும் ., 48 வகைச் சித்தர்களையும் | 33,000 கோடி தேவர்கள் | 48,000 கோடி இருடிகள் | 108,000 கோடி முனிவர்கள் ,அனைவரையும் தூல உடலோடு தரிச்கலாம் .., யுகங்கள் கடந்த காலங்களையும் கூட ..,!!!
ஆக இறுதியாக ,
பூசையிலே வைத்தேய்டுத்துக் கற்பம் உண்ணு
புகழாகச் சித்திக்கும் பேறு உண்டாகும்
ஆசையிலே பேரின்பம் அடுத்தாயானால்
அற்ப்மனத் தின்மாய்கை நீக்கிப் போடும்
வேசியைப்போ ல் ஆசைகொண்டால் எல்லாம் போச்சு
வேதாந்தம் நீயென்றால் ஒருமன தாய் நில்லு காசில்லை என்றுசொல்லி விட்டிடாதே
கற்பமுண்டால் வாதசித்தீ கைக்குள்ளாமே .. !!!
--- அகத்தியர் !!!
இப்படிக்கு
புலிப்பாணி சித்தர் அடிமை ,
சித்தர் பைத்தியம்
திரு புலிப்பாணி அவர்களே,
ReplyDeleteதங்கள் வலைப்பூ இணப்பின் மூலம் தங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்.அருமை,மிக அருமை.இந்த இணைப்பு என்னுடைய வலைத் தளத்திற்கு வருபவர்களை தங்கள் வலைப்பூவிற்கும் வர வைக்கும்.இது நேற்றுத்தான் கூகுள் பார்வையில் வலைப்பூக்கள் என்ற பதிவினைப் படித்தேன்.ஒருவர் வலைப்பூவில் இருந்து ஒரு வலைப்பூவிற்கு இணப்பு ஏற்படுத்தப்பட்டால் தேடு பொறி இந்த இரு வலைப்பூவில் எந்த சொல்லைத் தேடினாலும் இரு வலைப்பூத் தளங்களையும் காட்டும்.எனவே ஒவ்வொரு வலைப் பூவிற்கு வரும் பார்வையாளர்கள் இரு வலைப்பூவிற்கும் வரும் பார்வையாளர்களின் கூட்டுத் தொகையே ஆகும்.புரிகிறதா!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம்
ReplyDeleteகாரை சித்தரின் கனக வைப்பு நூல் எனக்கு வேண்டும் தங்கலிடம் இருந்தால் எனது மினஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
tmahesh_raj@yahoo.com
ஐயா மச்ச முனி அவர்களே,
ReplyDeleteதங்களின் பதிவுகளைப்பர்த்து மிரண்டு போனேன். அருமையான விளக்கங்கள் ,
தங்களின் சித்தர் பணி என்றும் தொடர வாழ்த்துகள் .
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
அன்பு நண்பரே புலிப்பாணி
ReplyDeleteதொடர்ந்து பதிவிடுங்கள்
மச்சமுனி தளத்திற்கும் வந்து
உங்களது கருத்துகளை தாருங்கள்
சித்தர்களின் பாடல்களின் உண்மைகள், நாம் சாதனை செய்து உண்டாகும் சிவக்கனல் மூலம் புரியவரும் என்று பல ஞானிகள் உரைத்துள்ளனர். உங்கள் பதிவு கற்பம் என்பது நம்முள்ளே இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது.
ReplyDeleteசிவதரிசனம் கண்ட தவயோகி ஞான தேவ பாரதி சுவாமிகளின் அருளுரைகளை கீழ்கண்ட வலைத்தளத்தில் படித்து ஆன்மலாபம் அடைய வேண்டுகிறோம்.
http://thavayogi.blogspot.com/
kaarai siddhar kanaga vaippu book pls send my email id sir thanks for your support and service my mail maskumareshraja@gmail.com
ReplyDeleteகரைசித்தர் கனக வைப்பு புத்தகம் இருந்தால் தயவுசெய்து எனது மின்அஞ்சல்லுக்கு அனுப்பவும் நன்றி நன்றி
ReplyDeleteSend mail to Manojsukran@gmail.com will send pdf
ReplyDelete