எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, February 1, 2012

திரும்ப திரும்ப படியுங்கள் ..!!!!



வித்தென்ன தத்துவந்தான் தொண்ணூற்றாறும்
   மேவியதோர் வித்தாச்சு ரவிமதியாந்தீயால்
வித்தான வித்துள்ளே பதிபாசங்கள்
விளங்குமென்ற பொருளப்பா மெய்வேதமாச்சு
வித்தான விந்துவினா லாகாசந்தோன்றி
       மீ றுமிதில் கால்தோன்றி அதில் தீதோன்றி
வித்தான மகாரமதில் நீர்மண்ணாச்சு
        விளங்குபுவி யாலாத்துமா பின்னேயாச்சே.,


ஆச்சப்பா பிள்ளையாண் பெண்ணுமாகி
         அளவற்ற விடையற்றார் பிறப்புக்கோடி
   வாச்சப்பா கதலிகுலை சாய்ந்தபின்பு
          மகவாகக் கனிவெடுத்துப் பிறப்பேயாச்சு
 மாச்சப்பா மனக்குரங்கு கொம்பிற்றாவி
          வளர்ந்துதே ஜெனனங்கள் கோடாகோடி
    ஓச்சப்பா தோற்றமொடு யோனிநாலு
       ஓங்காரப் பிரணவங்கள் அளவில்லாதே...,


  அளவேது கரைகண்டோர் யாருமில்லை
 ஆசைஎன்ற பொரிக்குரங்கால் அனந்தசென்மம்
அளவேது தாபரங்கள் சங்கந்தொட்டு 
அந்தந்த வித்தால் அண்டம்எல்லாமாச்சு
      அளவேது தன்மாத்திரை பத்தினாலே
  ஆதியந்த அடிமுடியும் தெரியாதுஜென்மம்
அளவேது பசுபதிபா சத்தினாட்டு
    ஆரறுப்பார் பாசக்கயிற்றை சித்தர்காணே.!


                                                  காணப்பா பிறவியது ஏதுமில்லை
         கரையில்லாப் பிறப்பிறப்பு இதுதானென்ன 
ஊணப்பா மவுனத்தை உபதேசித்தால்
           உரைக்கமன மாவதற்கு உண்மைசொல்லு
வீணப்பா சித்தாந்தம் பாராதேயென்னும்
      வேதாந்த மெந்நாளும் விடாதேயென்னும்
பூணப்பா சிவயோக மவுனமூட்டி
           பூட்டியே பிறப்பறுக்க வகையைச்சொல்லே???


                      

சொல்லியே மனந்தேறி உரைத்தாயானால்
 தூலம்விட்டு சூட்சமதில் நிராதாரத்தில்
வில்லைநா ணேற்றிகனண தொட்டாப்போல
  மேவியே இருவிழியும் கழினனநோக்கு
அல்லியே படர்ந்தாப்போல் காலைத்தாக்கி
 அண்டத்தின் அக்கினியால் சுட்டுநீற்றி
மெல்லவே இந்திரிய விடையம்எல்லாம்
   வெட்டவெளி ஆக்கியே விண்ணில்ஏறே ...!!!
                                          -- அகத்தியர்

இப்படிக்கு
புலிப்பாணி சித்தர் அடிமை
சித்தர் பைத்தியம்

1 comment:

  1. உலகத்திலே எல்லாரு பைத்தியம்தா,
    இதை உணர்ந்தவன் மட்டுமே ஞானி;

    ReplyDelete