எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, August 14, 2013

அடிப்படை ஆன்மிகம் - 3


ஆரோக்யத்தை உணர்த்தும் சித்த வைத்ய 
 "அட்சர ஆழிப்பா " !!!



.E.C.G எனப்படும் மருத்துவ டெஸ்டிலே , வரைபடத்தில் கீழிருக்கும் வளைவை இருதயத்தின் ஆரோக்கியக் குறைவாக எடுத்துக் கொள்கிறார்கள் அல்லவா ! உண்மையில் E.C.G என்பது  அவரவருடைய கையெழுத்து நிர்ணய சக்திகளாகும் .

அக்காலத்தில் இருதய நாள நாடிகளை அறிந்திட , ஒரு ஓலைச் சுவடியிலே மயில் தோய்த்துத் தந்து "அட்சர ஆழிப்பா " எனும் ஆரோக்கியப் பரிபாஷைச் சூத்திரத் துதியை எழுத வைத்து , இதில் ஏற்படும் நெளிவு , சுழிவுகளை வைத்து இருதயத்தின் நிலையை அறிவார்கள் ..

அட்சர ஆழிப்பா ( அ முதல் ஃ வரை , க முதல் ன் வரையிலான அனைத்து உயிரெழுத்துக்களும் , உயிர்மெய் எழுத்துகளும் அடங்கிய ஆழிமொழிப்பா )

 உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் , மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் இந்த அட்சர ஆழிப்பாவில்  (தியானத்தில் ) அடங்கி (ஆரோக்கிய ) யோகத்தில் ஒடுங்கி இருப்பதைக் காணலாம் .. உயிரும் , மெய்யும் , சேர்வது தானே ஜீவ சக்தி !

முற்காலத்து நாட்டு வைத்தியர்களும் , சித்த வைத்தியர்களும் இத்தகைய அட்சர ஆழிப்பாக்களை  எழுத வைத்தும் , ஓத வைத்தும் , நோயுற்றோரின் இருதய நாடிகளைத் துல்லியமாகப் பகுத்தறிந்து நல்மருந்துகளை அளித்தனர் .., விரல் நுனிகளுக்கும் ,இருதயத்திற்கும் ,மனிகட்டிற்கும் நிறைய தொடர்புகள் உண்டு என்பது இதன் மூலம் புனலாகும். 
(மேலும் விளகங்களை "அட்சர ஆழிப்பாவை"  ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜனவரி 2007இதழிலில்காணக ) (தெய்வத் தமிழ் பற்றிய ஆன்மீக விளக்கங்களை ( ஸ்ரீ அகஸ்திய விஜயம் அக்டோம்பேர் & டிசம்பர்  2007 இதழிலில் காணக )

------------------------------------------------------------------------------------------------------------
அடியேனின் கருத்து :-

***தெய்வத் தமிழ் மாமறைகளை ஓதுவதை விட .., மிகப் பெரிய வாசி யோகம் ஏதும் இல்லை., என்பதை  (.அட்சர ஆழிப்பா மூலம் ஒரளவு  உணர முடிகிறது அல்லவா ).., அப்படியெனில் திருவாசகத்தை சிவபெருமானே மாணிக்க வாசகர் சொல்ல கைப்பட எழுதினார் . திருப்புகழை முருகப்பெருமானே அடியெடுதுக் கொடுத்தார் ...,இப்படியே ஏனைய அனனத்து தேவாரங்களும் .,திருப்பாவை ., திருஅருட்பாக்கள் ., ஏனைய தமிழ் மறைகள் இவற்றில்யெல்லாம்  எத்துனை புனிதம் இருக்கும் .(ஆனால் உண்மை பக்தியோடு , பண்பாட்டோடு  ., தான ,தர்ம நெறியொடு  தினமும் ஓதினால் தானே உணர முடியும் ..,) 


***தெய்வத் தமிழ் மாமறைகளை ஓதுதலை விட பெரிய வாசி யோகம் ஏதுமில்லை என்று ..., மாமறைகளை மட்டும் ஓதினால் போதுமா .., தெய்வத் தமிழ் பண்பாடு .., நாகரிகம் ., நல்லொழுக்கம் ., மனத்தால் ., எண்ணத்தால் தூய்மையாக இருத்தல் வேண்டும் .., இதுவே தெய்வத் தமிழ் திருநாட்டில் வாழ்ந்து ., தெய்வத் தமிழ் பேசும் பெரும் பேறு பெற்றோர் அனைவரின் கடமையாம் .., 


***ஆகவே  தினமும் குறைந்தபட்சம் 3 முன்று பதிகங்களையேனும் ஓதுதலே . .., முறையான .., ஆன்மீக பாதைக்கு வித்திடும் ..., கோடி கோடி ஆண்டு தவம் ., யோகம் , யாகம் செய்தோரை விட ..., நெக்குருகி நெஞ்சுருகி இறைவனை பாடி .,தான , தர்ம நெறியோடு வாழ்ந்தவர்களுக்குகாக தான் இறைவன் ஏழு திரைகளை நீக்கி ஓடோடி வந்ததை அறிகின்றோம் .,தெய்வத் தமிழ் மாமாறைகளை ஓதுதலே . யோகம் , ஞானம் , தவம் ., பரிபுரன இறையருள் அனைத்தையும் சுயம்பாய் பெற்றுத் தரும் .,  அதோடு பசிதொருக்கும் ., உதவி வேண்டுவோர்க்கும் ., முடிந்த உதவி செய்வதும் ,,அஃதோடு தர்ம நெறி தவறாது நடத்தல் .., இவை முன்றும் தான் அடிப்படை அனைத்திருக்கும் ...,
-----------------------------------------------------------------------------------------------

அகஸ்தியரின் அறவுரைகள்..!

கடமையை செய்வது என்பது வேறு, பற்று என்பது வேறு. இரண்டையும் தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளக் கூடாது. அதாவது, ஒரு வாகனத்தை வாங்காதே என்று நாங்கள் கூறமாட்டோம். ஒரு வாகனம் இருக்க இன்னொரு வாகனம் எதற்கு ? அந்த தனத்தை, தக்க ஏழைக்கு கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக்கொள் என்றுதான் கூறுகிறோம். அந்த வாகனம் தொலைந்து போனாலும் கவலைப்படாத மனதை வளர்த்துக்கொள் என்று கூறுகிறோம். பாவங்கள் குறைய, குறையத்தான் நீ எண்ணக்கூடிய அமைதியும், பற்றற்ற தன்மையும் வளரும். ‘ பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், பெண்ணிற்கு நல்ல இடத்திலே திருமணம் ஆக வேண்டும் ‘ இவையெல்லாம் முதலில் மனிதனின் ஆசையாக இருந்து பிறகு கவலையாக மாறிவிடுகிறது. எண்ணவேண்டும், “ அதுவும் ஒரு ஆத்மா. ஈன்றோர்களும் ஆத்மா. எப்படி கர்ம வினைக்கேற்ப அந்த ஆத்மா பிறவி எடுத்திருக்கிறதோ, பிள்ளைகளும் அவ்வாறு பிறவி எடுத்திருக்கிறார்கள். அதனதன் கர்மவினைப்படி அதனதன் வாழ்க்கை சம்பவங்கள் நடந்துபோகும். இதையெண்ணி கவலையோ, கலக்கமோ கொள்ளக்கூடாது. கடமைகளை மட்டும் செய்யவேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

இறைவன் அருளைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப ஒரு மனிதன் செய்கின்ற எத்தனையோ தவறுகளும், பாவங்களும் கூட பின்னால் இறைவனால் மன்னிக்கப்படலாம். மனிதன் அறியாமையில் செய்யும் தவறுகள் மன்னிக்கப்படும். அறிந்தே ஆணவத்தாலோ, தன்முனைப்பாலோ, வேண்டுமென்றோ அல்லது காழ்ப்புணர்ச்சியினாலோ அவன் செய்யக்கூடிய தவறுகளும், பாவங்களும் பெரும்பாலும் மன்னிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தராது.


இதை உணர்ந்து எந்த வழியிலும் தவறுகள் செய்யாமல் எம்மை நாடுகின்ற மனிதர்கள் வாழ பழக வேண்டும். அஃதொப்ப சூது, வாது இல்லாத மனிதனை வருத்தாமலும், வேதனைபடுத்தாமலும் இருக்க வேண்டும்.  அறியாமையோடு ஆணவமும் சேர்ந்துகொள்ள மனிதன் பாவத்தை விடுவதாக இல்லை. எனவே மனிதனானவன் இறைவனின் பெருங்கருணையை எண்ணி, ஒரு மனிதன் செய்கின்ற தவறுகளை எப்படி இறைவன் பொறுத்து மன்னித்து அருள்கிறாரோ அதுபோல் சக மனிதர்கள் செய்கின்ற குற்றங்களை எல்லாம், குறிப்பாக, தன் மீது கூறப்படும் பழிசொற்களையெல்லாம் பொறுமையோடு சகித்துக்கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் அருளால் உலகியலே பிரச்சினை எனும்பொழுது உலகியல் பிரச்சினைகளுக்கு வழி கூறினால் என்ன ? கூறாவிட்டால் என்ன ? ஒரு மனிதனுடைய தேவைகள் அனைத்தும் உடல் சார்ந்து இருப்பதால் அதை வைத்துதான் வாழ்வில் நிறைவு, சந்தோஷம் என்ற முடிவிற்கு வருகிறான். நாங்கள் என்ன கூறுகிறோம் ? உன் தேவைகள் எது வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். கூடுமானவரை நேர்மையாக வாழ்க்கையை நடத்து, தர்மங்களை செய், உன் கடமைகளை தெளிவாக செய், உன் பூர்வ ஜென்ம பாவங்கள் குறைந்தாலே நீ விரும்பியது உனக்கு கிடைக்கும். இதைதான் நாங்கள் மறைமுகமாகவும், நேர்முகமாகவும் சுட்டிக்காட்டுகிறோம். எனவே ஒரு பிரச்சினைக்கு நேரடியாக இதை செய், அதை செய் எனக் கூறுவது ஒரு வாக்கு. ஒட்டுமொத்தமாக ஒரு மனிதன் பிரச்சினைகளே இல்லாமல் வாழ வேண்டுமென்றால் இந்த உலகில் அது சாத்தியமில்லை. அவன் மன நிலையைதான் மாற்ற வேண்டும். அதற்கு தெய்வீக வழி ஒன்றுதான் சிறந்த வழி. அவன் மனம் பக்குவம் அடைந்தாலொழிய இதிலிருந்து அவன் விடுபடவே முடியாது.

அனுபூதி என்றால் என்ன ஐயனே ?

அனுபவம் என்றால் என்ன ? ( வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் ). நிகழ்வுகள் என்றால் என்ன ? இந்த நிகழ்வுகள் எதனால் ஏற்படுகிறது ? இதற்கு துவக்கம் எது ? ( கர்மவினை ). அந்த கர்மவினை எங்கிருந்து துவங்குகிறது ? ( பாவங்கள் செய்வதினால் ). பாவங்களை ஒரு மனிதன் ஏன் செய்கிறான் ? ( ஆசை, அறியாமையினால் ). அறிந்த பிறகு  பாவங்களை ஏன் தொடர்கிறான் ?. ( இச்சையினால் ). இச்சை எங்கிருந்து துவங்குகிறது ?  ( மனதிலிருந்து ). மனம் எங்கிருந்து துவங்குகிறது ? ( எண்ணங்களில் இருந்து ). எண்ணங்கள் என்றால் என்ன ? ( தெரியவில்லை ஐயனே, நீங்களே சொல்லிவிடுங்கள். எங்களையே கேள்வி கேட்கிறீர்களே ). எம்மை நோக்கி எத்தனையோ வினாக்களை விடுக்கிறீர்களே ? யாம் வினா விடுக்கக் கூடாதா ? ( உங்களுக்கு பதில் சொல்லும் அளவிற்கு எங்களுக்கு தகுதி இல்லை ஐயனே ) இப்படியெல்லாம் மனதிற்குள் வினவிக் கொண்டே போனால் ஒன்று கிட்டுமல்லவா ? அதுதான் அனுபூதி.
                     -ஜீவ அருள் நாடி

No comments:

Post a Comment