தெய்வீக விஞ்ஞானி டாக்டர் சாது .சு ஸ்ரீநிவாஸ் அவர்களது "உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள், " என்னும் புத்தகத்தில் இருந்து சில வரிகள் :-
இந்த பூமியின் மீது நாம் வசித்துக் கொண்டிருக்கிற ஜம்பூ த்வீபம் என்னும் முதலாவது உலகம் ..,நாம் வசிக்கும் இந்த உலகமும் நாம் காணும் உப்பு நீர்க்கடலும் எப்படி உண்மையோ அதேபோலவே இந்த ஏழு உலகங்களும் , ஏழு கடல்களும் உண்மையானவையே ஆகும் .
1. நாம் வசிக்கும் இந்த உலகமும் -- உப்பு நீர்க் கடலும்
2.பிலட்சத்தீவு என்னும் 2வது உலகமும் - கரும்புச்சாறு கடலும்
3. சால்மலித்தீவு என்னும் 3வது உலகமும் - தேன் கடலும்
4. குசத்தீவு என்னும் 4வது உலகமும் - நெய்க் கடலும்
5. கிரௌஞ்சத்தீவு என்னும் 5வது உலகமும் - பால் கடலும்
6. சாகத்தீவு என்னும் 6வது உலகமும் - தயிர்க் கடலும்
7. புஷ்கரத்தீவு என்னும் 7வது உலகமும் - இளநீர்க் கடலும் உள்ளது .
இந்த நாம் வாழும் உப்பு நீர்கடலின் மீது தெற்கு நோக்கி வான வெளிக் கப்பல்கள் மூலம் சுமார் பத்து லட்சம் கிலோ மீட்டர்கள் தூரம் பரந்து சென்றால் இக்கடலுக்கு எதிர்புறமாக மறுகரையாக உள்ள பில்ட்சத்தீவு என்னும் இரண்டாவது உலகத்தை அடையலாம் . இந்த இரண்டாவது உலகத்தில் பில்ட்சம் என்னும் மரங்கள் அதிகமாக இருப்பதால் இதற்குப் பிலட்சத்தீவு என்று பெயர் ஏற்பட்டிருகிறது . இவ்வுலகம் சீலம் , வசயம் , சுபத்திரம் , சாந்தம் ,ஷேமம் , அபயம் ,ரிதம் , என்னும் ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது . இந்த ஏழு கண்டங்களிலும் மணிகூடம் , வச்சிரக் கூடம் , இந்திர சேனம் , சோதிடமா , தூம்ப்பர வர்ணம் , இரணிய கிரிவலம் , மேகமாலம் என்னும் ஏழு பெயர்களை உடைய ஏழு பெரிய மலைகள் உள்ளன .இவைகளில்லிருந்து அருணா , ரமணா , ஆங்கீரஸீ , சாவித்திரி , சுப்ரபாதா , ருதம்ப்ரா , சத்தியம் பாரா என்னும் ஏழு நதிகள் உற்பத்தியாகி ஓடுகின்றன . நமது கடவுளின் பேரன்மார்களில் ஒருவரான "இந்துமசிக்குவன்" என்பவர் தனது மனைவியுடன் முதன் முதன்முதலாக இங்கு குடியேறி ஆராசாட்சி செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் .., அவருடைய வம்ச பரம்பரையினர் அம்சர் , பதங்கர் , ஊர்துவாயனர் ,சத்தியாகர் என்னும் நான்கு பரிவினராக வாழ்ந்து வருகிறார்கள் ...
அமெரிக்க் ரஷ்ய விஞ்ஞானிகள் . , மற்ற உலக விஞ்ஞானிகள் சந்திரன் , செவ்வாய் , சுக்ரன் , சனி , வியாழன் முதலிய கிரஹ மண்டலங்களை ஆராய்ந்து அவைகளுக்குப் போக்குவரத்து சாதனங்களை அமைக்க முயற்ச்சி செய்வது போல் , இந்த இந்த ஏழு உலகங்களையும் , ஏழு கடல்களையும் ஆராய்ச்சி செய்து இவைகளுக்குப் போக்குவரவு சாதனங்களை அமைக்க முயற்சிக்க வேண்டும் ., இது மிகவும் அவசியம் .
செயற்கைச் சந்திரன் வான வெளிக் கப்பல்கள் ராக்கெட்டுகள் மூலம் இந்த முதலாவது உலகத்தை கிழக்கு மேற்காகவே சுற்றி வந்திருக்கிறார்கள் ., தெற்கு வடக்காக சுற்றவில்லை .அதனால் , முன் சொன்னபடி தென் துருவத்திலிருந்து தெற்கு நோக்கி சுமார் பத்து லட்சம் கிலோ மீட்டர்கள் தூரம் சென்றால் நிச்சியமாக இந்த இரண்டாவது உலகை அடையலாம் . .[ இப்படி தொடர்ந்து ., ஏழு உலகங்கள் ,கடல்கள் பற்றி இந்த "உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள், " என்னும் புத்தகத்தில் கூறியுள்ளார் .] ..,
--------------------------------------------------------------------------------------------------------
இஃதோடு ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் [2001] புத்தத்தில் [அகஸ்தியர் விஜயம் இதழ் வெறும் புத்தகங்கள் அல்ல .. சித்தர்களின் ஞானப் பத்திர கிரந்தங்கள் ] இருந்து சில வரிகள் :--
பூலோகத்தின் கடலைப் போல் ,வைகுண்டத்தின் பாரற்க்கடலைப் போன்று , கரும்புச்சாறு கடல் ஒன்று உண்டு ., இதில் சுயம்புவாக தோன்றியவரரே "கற்ககடகேஸ்வரர்ராகிய சிவலிங்க மூர்த்தியாவார் .., அருமருந்தம்மை ஈஸ்வரியே இறைவனிடம் வேண்டிக் கரும்புச் சாறு தீர்த்தத்தில் தோன்றிய கற்ககடகேஸ்வர சுயம்பு மூர்த்தியை பூமியிலும் சுயம்புபாகத் தோன்ற வேண்டும் என்று அருந்தவம் பூண்டு வரம் வேண்டி நமக்காகப் பூலோகத்தில் இன்று திருந்துதேவன்குடியில் கற்ககடகேஸ்வர சுயம்பு மூர்த்தி வழிபாட்டை நமக்கு அளித்துள்ளாள் . அதே சமயம் கரும்புச் சாறு தீர்த்தத் கடலில் தவம் பூண்ட கற்கடர் இறையருளால் பூமியில் இறை தரிசனம் வேண்டிட , திருந்துதேவன்குடியில் சுயம்புலிங்கத் மூர்த்தியாகத் தோன்றிட அதே நண்டு வடிவில் அவர் பூலோகத்தில் தவத்தை தொடர்ந்தார் . வரும் கலியுகத்தில் கோடிக் கணக்கான மக்கள் சர்க்கரை வியாதி எனப்படும் நோயாள் அவதியுறுவர் என்பதைக் தீர்க்க தரிசனமாக உணர்ந்து கலியுகத்தில் சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான கர்ம வினைகளை பகுத்தறிந்து அவர்ற்றிகான அறவழித் தீர்வுகளையும் பரிகார , பிராயசித்த முறைகளையும் பெறுவதற்காகவும் இங்கு கற்கட நண்டாய் மகரிஷி அருந்தவைதை தொடர்ந்தார் .!!
இப்பூவுலகில் நம் பாரத நாட்டில் - அதுவும் நம் தமிழ்த் திரு நாட்டில் தான் இறைவன் பல்லாயிரம் சுயம்பு லிங்க முர்த்திகளாய் ஆங்காங்கே தன் இறைமையை நிரவிக் கொள்ளக் காரணமே ., இப்பூவுலகின் ஒவ்வொரு அணுத்துளிக்கும் உரிய படைப்பு ரகசியத்தை ஊட்டி உணர்விக்கவே ! காரண ,காரியமின்றி எவ்வித அசையும் , இயக்கமும் ஏற்படுவதில்லை என்பதை மனிதன் தன்னைத்தானே ஆத்ம விசாரம் செய்வதன் மூலமாக அறிந்து கொள்ளவே இறைவன் தன்னை மலை ரூபமாகவும் ,கல் வடிவிலும் , உலோக வடிவிலும் ,புனித விருட்சங்களையாகவும் , அக்னியாகவும் ,காற்றாகவும்,ஆறாகவும் , தம்மைப் படைத்துக் கொண்டுள்ளான் .
-- ஜனவரி 2001 பக்கம் - 29 to 35. [ ஸ்ரீ அகஸ்திய விஜயம் ]
[ இந்த கோவில் கடக ராசி "ஆயில்யம்" நட்சத்திர கோவில் என்பதும் குறிப்பிடத்தக்கது ] .
இதே ஏழு கடலும் ., தீவுகளும் பற்றி இங்கு சப்தகாண்டத்தில் போகரும் ., கூறுகிறார்
அடவர்க வஷ்டதிசை சுத்திவந்தேன்
அப்பனே மற்றசாகரமும் கண்டேன்
திடலான நெய்க்கடலும் நானும்கண்டேன்
தீர்க்கமுடன் வுவர்கடலுங் கண்டேன்நானே - பாடல் எண் ( 4006)
கண்டேனே யுவர்கடலை கடந்தபின்பு
கடிதான தயிர்க்கடலை யானுங்கண்டேன்
விண்டேனே மதுபானக் கடலுங்கண்டேன்
விரிவான கறுப்பன் சாகரமும் கண்டேன்
அண்டமெலாம்புகழும் நன்னீரான
வழகான சாகரமும் கண்ணிற்கண்டேன் - பாடல் எண் ( 4007)
இட்டேனே சத்தசாகரமுங்கண்டேன் எழிலான
சத்ததீவுகளுங்கண்டேன்
திட்டமுடன் சம்புவென்ற தீவதனைக் கண்டேன்
திகழான இலட்சமார் தீவுகண்டேன்
சட்டமுடன் செத்தீவு யானுங்கண்டேன்
சார்பான கிரவுஞ்சத்தீவு கண்டேன்
வட்டமாஞ் சாகரத்தின் தீவுகண்டேன்
மளமான சான்மலியுங் கண்டேன்பாரே - பாடல் எண் ( 4009)
பாரேதான் சான்மலிவு தீவுகண்டேன்
பாங்கான புஷ்கரத் தீவுகண்டேன்
நேரேதான் சத்ததீவுகளுங்கண்டேன்
நேரான குளிகையது பூண்டுகொண்டு
சீரேதான் காலாங்கி புஜபலத்தால் சிறப்புடனே
லோகமெலாம் சுத்திவந்தேன் -- பாடல் எண் ( 4010)
இலட்சமார் தீவு - பிலட்சத்தீவு , செத்தீவு - குசத்தீவு
கிரவுஞ்சத்தீவு - கிரௌஞ்சத்தீவு , புஷ்கரத் தீவு - புஷ்கரத்தீவு
சான்மலிவு தீவு - சால்மலித்தீவு , சாகரத்தின் தீவு - சாகத்தீவு
"உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள், " புத்தகத்திலும் இந்த அமைப்புக்கள் "பாகவத புராணத்தில் பஞ்சமஸ்கந்தம் பகுதியில் ஐந்தாவது ., இருபதாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுளதாக விவரிக்கப்டிருக்கிறது .
இதை நாம் பதிவிட்டால் "இப்படி பார்த்தால் பாகவத புராணத்தில் இருப்பதையே போகர் பெருமான் பாடலாக கூறியிருக்கிலாமே .., போகர் . அங்கு சென்றார் .., இல்லை அப்படி கடல்களும் ., தீவுகளும் இருப்பதற்கு என்ன ஆதாரம் என்று படிப்பவர்கள் கேட்பார்கள் " இது படிப்பவர்கள் பார்வையில் நியாயம் தான் .., என்று யாம் சற்று யோசித்து விட்டு போகர் 7000த்தை புரட்டுகையில் . அங்கு தான் குரு லீலை . பேரானந்தம் எமக்கு .., ஏனோ போகர் பெருமான் அடுத்த பாடலிலேயே அசத்திவிடுகிறார் .,
பாலமுடன் சீனபதி கடலோரத்தில்
பண்பான மலையொன்று குகைதானுண்டு
வானர்முதல் வந்திறங்கும் பொய்கையுண்டு
வளமான மண்டபந்தான் அங்கொன்றுண்டு
தோணவே குளிகையது பூண்டுகொண்டு
தொல்லுலகை யான்மறந்து சென்றேன்பாரே -பாடல் எண் ( 4011)
இந்த பாடலுக்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா ? சீனா -திபேத் எல்லையில் "பையன் கரா உலா " என்றொரு இடம் உள்ளது . 1938 -ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த "சி.பு.டை " என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் இங்கிருந்து 716 கருங்கல் பலகைகளைக் கண்டுபிடித்தார் .., இந்தப் பலகைகளில் ஏராளமான கோபால்ட்டும் உலோகமும் கலந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் ., அதுமட்டுமல்ல , இந்தப் பலகைகள் உயர்ந்த அதிர்வுத் தன்மையைக் கொண்டவை என்றும் அவர்கள் கண்டறிந்தனர் . ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் . வியாச்செஸ்லாவ் செயசெவ் என்பவர் இந்தக் கற்பலகைகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து செய்தி வெளியிட்டார் : "12,000" ஆண்டுகளுக்கு முன்னால் விண்வெளியிலிருந்து வந்த சிலர் மூன்றாவது கிரகத்தில் வந்து இறங்குவதற்கும் அவர்களது உலகிற்குச் செல்வதற்கும் அவர்களது வாகனத்திற்குச் சக்தி இல்லாமல் பொய்விட்டது .." என்று அந்தக் கற்பலகைகள் சொல்கின்றன ." -- இந்த தகவல் "தேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் புத்தகத்தில்" "சீனாவிலும்கூட கடவுள் சின்னங்கள் உண்டு " எனும் பகுதியிலில் 36,37,38 ஆம் பக்கத்தில் இருந்த செய்தி. ...
இப்பொழுது போகர் பாடலை மறுபடியும் படியுங்கள் "சீனபதி கடலோரத்தில் ..... வானர்முதல் வந்திறங்கும் பொய்கையுண்டு ........குளிகையது பூண்டுகொண்டு .,தொல்லுலகை யான்மறந்து சென்றேன்பாரே - பாடல் எண் ( 4011)
ஆக . அந்த விஞ்ஞானி கண்டுபித்ததும் .., போகர் சொன்னதும் .., சென்றதும் .., சிவ சிவா ...!! இதற்கும் மேலுமா இந்த உலகில் சித்தர்கள் உன்மைதானா .., அவர்கள் குளிகைகொண்டு பறந்ததும் .., கோடியுகம் . வாழ்ந்து .. இன்னும் வாழ்ந்து .. என்றும் வாழ்வார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும் ??? ,,,
மேலும் ..., இந்த ஒப்பிடுகள் இவற்றையெல்லாம் ரசிக்கலாம் .., ஆனால் சர்வ கோடி சித்தர்களின் பீடாதிபதியாம் அகஸ்தியரின் .,கிரந்த வாக்கியங்களை குருவாய் மொழியாக தாங்கி வரும் ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மூலமாக .., நாம் அணுபவிக்கலாம் ., கர்மாவை குறைக்கலாம் . இதையும் ஏன் கூறுகிறோம் என்றால் .., யாம் ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து . சில குறிப்புகளை கொடுத்து .., சிலருக்கு வாய்பிருந்து ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழை படிக்க நேர்ந்தால் .., பல பல தெய்வ ., தேவ ., சித்த ரகசியங்களையும் ..,அனுபுதிகளையும் .., படித்து இதெல்லாம் இருக்குமோ . என்று யோசித்தால் . அறியாமை படிப்பவருக்கு தான் .., அறியாமை என்று சொல்வதை விட .., கர்மா அவ்வுளவுதான் .., ஏனெனில் ...,
"விட்டகுறை வந்ததென்றால் தானே எய்தும்
விதியிலார்க்கு எத்தனைதான் உரைத்தாலும்
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்றில்லை
பக்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே.'
குருவே சரணம் !!!! குருவே சரணம் !!!! குருவே சரணம் !!!
பிறவாழி உயிர்வாழி அறவாழி பதம்வாழ
இறைவாழி குருவே துணை
இப்படிக்கு ,
ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழின் கடை நிலை வாசகன்
புலிப்பாணி சித்தர் அடிமை
சித்தர் பைத்தியம்
No comments:
Post a Comment