அடியேன் கருத்து :- " மக்கள் செய்வது ,மன்னன் தலையில் ,மன்னன் செய்வது மாமறையோர் தலையில் " எனும் முன்னோர் மொழி பாபாஜியின் இந்த இரண்டு வரிகளில் தெளிவாகின்றது அன்றோ .., நம் ஒவ்வொருவரிடமும் வாழ்க்கை நெறியும் , தனி மனித ஒழுக்கமும் .இல்லாவிடில் ., ஏன் மனதில் ஒரு அவல எண்ணம் ஏற்பட்டால் கூட அதுவும் நமக்கும் , சமுதாயத்திற்கும் தீங்கு செய்வதாம் .சித்தர்கள் ., மகான்களின் தவச் சுமையை கூட்டுவதாம் . பூபாரத்தின் சுமையை கூட்டுவதாம் ., பரவெளியை அசுத்தபடுத்துவதாம் ., அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் எனும்போது ., பிண்டத்தில் உள்ள அசுத்தமும் அண்டத்தில் நிறையும்மன்றோ ....,
----------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் (ஆகஸ்ட் மாத இதழ் 2013) :- சில வரிகள்
*** அவரவர் திருந்தி வாழ்ந்தால் தான் சமுதாயத்தில் பொது தீர்வு கிட்டும் . "நீ முதலில் உன்னைத் திருத்திக் கொள் "என்பதே ஆன்மீகத்தின் முதல் சட்டம் .சமுதாயத்தை நன்னெறியில் கட்டிக் காத்திட - சட்டம் ,காவல் துறை என்றிருந்தாலும் ,ஆன்மீக ரீதியாக மட்டுமே பரிபூரணமான , முழுமையானச் சமுதாயத் தீர்வுகள் உலகில் எங்கும் இதில் சாத்தியமாகும் . அவரவர் ஊரில் உள்ள பழமையான ஆலய உத்சவங்களைப் புனரமைத்து ,பிரதோசப் பூஜை ,பௌர்ணமியில் ஆலயக்குளத் தீர்த்த வலம் போன்றவற்றைச் சத்சங்கப் பூர்வமாய்ப் பலரும் ஒன்று சேர்ந்து அவரவர் ஊரில் புனரமைத்து நடத்தி வந்தாலே ,சமுதாயச் சீரழிவுகளுக்கான அருமாமருந்து கிட்டும் தான் .பிரதோஷம் என்றால் தோஷங்கள் அற்ற நேரகாலம் ஆதலால் ,பிரதோஷ நேரத்தில் ஆற்றும் பூஜையில் தீராத தோஷங்களே கிடையாது .
** மேலும் வாழ்வில் வெறுமனே பரிகாரம் ,பிராயசித்தங்களைச் செய்து கொண்டே இராது ,முழுமையாய்த் திருந்தி வாழ முயற்ச்சிக்க வேண்டும் . அப்போது தான் எந்தப் பரிகாரமும் வேலை செய்யும் .
*** ஒரு புறம் பாவச் செயல்கள் ,மறுபுறம் பரிகாரம் என்பது சத்தியமாய்ச் சாத்தியமில்லை . இவ்வாறு செய்து வந்தால் , இருக்கின்ற பரிகாரமும் தன் வலிமையை இழந்து விடும் . எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பரிகாரத்திற்கே வழியில்லை என்றும் ஆகி விடும் . எனவே தீய வினைகளை ஏனைய ஜென்மங்களுக்கு விரியும் வகையில் முற்ற விடக் கூடாது .
--- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் (ஆகஸ்ட் மாத இதழ் 2013)இருந்து தொகுத்தது .
No comments:
Post a Comment