எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, March 18, 2014

போகர் ஏழாயிரம்


காணவே பிரபஞ்ச வாழ்க்கையற்று 
காசினியிலிருந்தாலும் வொன்றுமில்லை
பூணவே நவகோடி திரவியங்கள் பூவுலகில் 
தேடியென்ன லாபமில்லை
நாணமுடன் வுலகுதனில் வாழ்ந்துமென்ன 
நாதாந்தப் பேரொளியைக் கண்டுமென்ன
வேணபடி யுலகமெலாம் ஒருகுடைக்கீழ் வுத்தமனே 
யாண்டாலும் ஒன்றுங்காணே

ஒன்றான தேகமது பொய்யேவாழ்வு ஓகோகோ 
நாதாக்கள் யாரிருந்தார்
குன்றான கல்லதுபோல் தேகந்தானும் குவலயத்தி 
லிருந்தாலும் ஒன்றுமில்லை
தன்றான தேகமது இரும்பானாலும் தாரிணியில் 
நில்லாது மெய்யேயாகும்
சென்றாலுங் காயமது போவதுண்மை சடலமழிந்து 
போகுவதும் வண்மைதானே


காணவே காயாதிக்கொண்டுமென்ன கலியுகத்தில் 
கோடிவரை யிருந்துமென்ன
வேணபடி வேதநூல் செய்துமென்ன விட்டகுறை 
யிருந்தென்ன போயுமென்ன
பூணவே சமுசார வாழ்க்கையற்று பூவுலகி 
லிருந்தென்ன மடிந்துமென்ன
தோணவே சின்மயத்தை கடந்துமென்ன 
தொல்லையெல்லா மற்றாலும் ஒன்றுங்காணே

ஒன்றான தேகமது பொய்யேவாழ்வு 
வுத்தமனே லோகத்திலொன்றுமில்லை
பன்றான பொய்களவு யாவுமுண்டு பாரினில் 
விசுவாசம் அருளுமில்லை
குன்றான விசுவாச மருள்கொண்டாலும் 
குவலயத்தி லொன்றுமில்லை பாழுபாழே
தன்றான வையகத்து வாழ்க்கையெல்லாம் தாரிணியில்
இப்படியே மேவலாச்சே
                                                                              --- போகர் ஏழாயிரம்

No comments:

Post a Comment