===============================================
குறிப்பு : ஜீவநாடி என்பது வேறு பெறு விரல் ரேகை வைத்து நாடி பார்ப்பது வேறு ..., ஜீவநாடி பற்றி முழுமையான முகவுரை பற்றி அறிய "சுகர் ஜீவ நாடி அற்புதங்கள் " புத்தகத்தில் வரும் முதல் 26 பக்கங்களை படித்திடல் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் ... மேலும் சுகர் ஜீவ நாடி அற்புதங்கள் " புத்தகத்தில் இருந்து ஒரு ஆச்சரிய பதிவை முன்பே பதிவிட்டிருந்தோம் ., படிக்காதவர்கள் august 30th timelineல் பார்க்கவும் ..நன்றி
அகத்தடியாள் மெய் நோவ, அடிமை சாக,
மா ஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட,
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சா வோலை கொண்டு ஒருவன் எதிரே செல்லத்
தள்ள ஒண்ணா விருந்துவரச், சர்ப்பம் தீண்டக்
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்,
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே "
*பொருள்* : "ஆவென்று மழை கொட்ட, வசிக்கும் வீடு இடிந்து விழ, வீட்டில் மனைவி உடல் வலியால் துடிக்க, அடிமை என்னும் மாடு சாக, விதை மட்டுமே வீட்டில் இருந்ததால் அதை விற்க ஓட, வழியில் கடன் கொடுத்தவன் வழி மறித்து நிற்க, அந்த நேரம் பார்த்து நெருங்கியவர் மரண செய்தி வர, இந்நிலையில் காலில் பாம்பு தீண்ட , முக்கியமான விருந்து வர , அரசன் நிலத்தை உழுது உண்டதுற்கு வரி கிஸ்தி கேட்க, குருவும் எதிரே தோன்றி தட்சணை தாவேன்றாரே"இப்படி பட்ட துயரமான நிலையில் குரு வசிஷ்டர் தட்சணை கேட்க, அந்த குடியானவன் கையிலிருந்த விதையை வேறு எதுவும் செய்யாது குருவின் கையில் குடுத்து "அய்யனே, குருவே நீ தான் என்று சரணாகதி அடைந்தான்". அவ்வாறு செய்தவுடன் அவன் எல்லா துன்பமும் உடனே காணமல் போனது என்று கிராம வழி கதை உள்ளது.
எத்தனை துன்பம் வந்தாலும் குருவின் வழி நிற்கவேண்டும். ஞான வழி காட்டும் குரு நம்மிடம் எதிர்பார்ப்பது காசு பணம் இல்லை. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது வைராகியம், ஒழுக்கம் மற்றும் அசையாத நம்பிக்கை தான். இந்த மார்கத்திற்கு தடையாய் உள்ள நம் பழக்கங்களை விடுவதே அவர்களுக்கு செலுத்தும் சிறந்த குரு காணிக்கையாகும் .
-- (ஒரு வலைத்தளத்தில் படித்தது ....,)
No comments:
Post a Comment