எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, March 18, 2014

பூத உடலுக்குப் பூ இடலாமா ??


பூத உடலுக்குப் பூ இடலாமா ??

மனிதன் இறந்தபின் செய்யும் இறுதிக் கடன்களில் சவத்திற்கு மாலைகளையும் , மலர்களையும் அணிவித்து வழியெங்கும் மலர்களைத் தெருவில் இறைத்துக் கொண்டே செல்வதைப் பார்க்கிறோம் . இது தவறான வழக்கமாகும் .



மக்கள் சேவையாம் இறைசேவைகாகத் தியாக வாழ்க்கை கொண்ட மகான்களுக்கு மலர் சூட்டுவது சிறப்புடையதே . ஆனால் மகான்கள் கூட பூக்களைச் சூடத் தயங்குவர் .

இறைவழிபாட்டிற்காகவே தங்களைத் தியாகம் செய்யப் பிறந்தவையே மலர்கள் . சவத்திற்கு மலர்களைச் சூட்டினால் மலர்களில் வசிக்கும் தேவதைகள் சாபமிடுகின்றன . இறந்த மனிதருக்கும் , மாலை அணிவிதவருக்கும் துன்பமே விளையும்..,

                                              -- மார்ச் 1997 [ ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் ]

*** முக்தி ,மோட்சம் என்பதெல்லாம் புனிதமான குருவருள் ,பக்தியின்றி எளிதில் பெறுவதல்ல , பத்திரிகைகளில் போடுவது போல இறந்தோர் எல்லாம் சிவலோக அல்லது வைகுண்ட பதவி அடைவதில்லை .மேலும் ஒருவர் இறந்தால் அதனைக் கறுப்பு நோட்டீஸ் அடித்து ஊரெங்கும் ஓட்டக் கூடாது பல தீய ஆவிகள் இதனால் பிரேதம் அருகே கூடி இழிவுகள் செய்து பலத்த பிரேத தோஷங்களைக் குடும்பத்திற்கு அளித்து விடும் . --- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் அக்டோம்பேர் 2004 .பக்கம் 49 .

--------------------------------------------------------------------------------------

குறிப்பு [ அடியேன் கருத்து ] : எல்லாம் சரிதான் நடைமுறையில் சாத்தியமா அது இறந்த வீட்டில் இதையெல்லாம் சொல்லிகொண்டிருக்க முடியுமா ஏன் நம் வீட்டில் கூட இதையெல்லாம் சொல்லிகொண்டிருக்க முடியுமா ?? அந்த நேரத்தில் பின்பற்றவேண்டுமே ... அவ்வுளவு எளிதில் கடைபிடிப்பது சிரமம் தர்மசங்கடம் தான் . இருந்தாலும் நம் கடைசி ஆசை போல் .. நம் இறப்பிற்கு பிறகு நமக்காவது இப்படி இப்படி தான் என்பதை சொல்லிவிடவேண்டும் .., ஏனெனில் பூ மிதி தோஷங்கள் மிக மிக கடுமையானவை சாபங்களையே தரும் .. ,

அப்பொழுது கோயில் மாலையிட்டு கொள்வோரை என் சொல்வது .. அர்ச்சகர்கள் மரியாதை என்ற பெயரில் மாலையிடுவது அனைத்தும் தவறே .... வண்டிக்கும் கூட பூஜை செய்யும் பொதும் மாலை அணிவித்தலை கூட தவறு தான் .பூஜை செய்த மாலையை வேண்டுமாயின் வண்டியுள் வைத்துகொள்ளலாம் பிறகு விசர்ஜனம் செய்து விடலாம் ... 

No comments:

Post a Comment