எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

உலக ஜீவன்களின் எண்ணிக்கை

ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில்யிருந்து......

**மகாமக தேவதா மூர்த்திகளின் மேற்பார்வையில் உலக ஜீவன்களின் எண்ணிக்கை**

***ஒவ்வோரு தமிழ் ஆண்டின் சிருஷ்டிகா மூகூர்த்தம் அமைகின்ற நாட்களின் லக்ன துருவங்களைக் கூட்டிக் கழித்தும் ,ஜீவங்களின் எண்ணிக்கையை அறிகின்றோம் . சூரிய கதியை ஓட்டி நட்சத்திராதி பலன்களைத் தருகின்ற நேத்திர ஜீவன் அம்சங்களை பஞ்சாங்கத்தில் 0,1 கால் ,அரை ஆகிய பஞ்சாதி அம்சங்களை எனக் குறித்து இவற்றின் மூலமும் ,காக்கை ,குருவி ,கால்னடை போன்ற ஜீவன்களின் எண்ணிக்கையையும் நன்கு அறிந்திடலாம் ,கிழமை, திதி,நட்சத்திரம் ,யோகம்,கரணம், ஆகிய பஞ்ச அங்கங்களில் (பஞ்சாங்கம்) கரணமானது திதியில் பாதி காலமாக இருப்பினும் , பவம் ,பாலவம், கௌலவம், தைதுலை,கரம், வணிஜை, பத்திரம் ஆகிய ஏழு கரண்ங்களும் திரும்ப திரும்ப வந்து இதன் பிறகு தான் சகுனி , சதுஷ்பாதம், நாகவம்,கிமஸ்துக்னம் ஆகிய ஸ்திர கரணங்களும் வரும் ..




***இந்த நான்கு நாட்களின் அம்சங்களை வைத்தும் இத்தனை குருவிகள் இத்தனை ஓட்டகங்கள் ,இத்தனை தாமரைக் கொடிகள் ., இத்தனை மனிதர்கள் என்று துல்லியமாக ஜீவ எண்ணிக்கையைக் கண்டிடலாம் .எனவே இவற்றின் மூலமாக ஜீவன்களின் எண்ணிகை அதாவது மக்கள் தொகை மகாமகதேவதைகள் வழிப்படும் காலபைரவ லோகத்தில் பார்த்திப பிரம்ம மூத்தியால் நிர்ணயிக்கபடுகின்றது..

*** சித்தர்களுடைய ஆதி கிரந்தங்களில் . சிருஷ்டியின் எண்ணிக்கை முறை பற்றி நன்கு விளக்கப்பட்டுள்ளது .பஞ்சாங்கத்தில் இதனை சூக்குமமாக உணர்த்துபவைதாம் கந்தாயக் கணக்குள் , கிரக பீடாதிபத்யம் எனப்படும் ராஜா ,மந்திரி ,சேனாதிபதி, , அர்க்யாதிபதி, தான்யாதிபதி, சஸ்யாதிபதி ,ரசாதிபதி,மேகாதிபதி , நீரஸாதிபதி போன்ற கிரக அதிபதித்துவங்கள் ஆகும் .மேலும் மகர சங்கராந்திப் பலன்களில் மகர சங்கரமணத்தின் அம்சங்களும் ஜீவங்களின் எண்ணிக்கையக் குறிக்க வல்லன ., மேலும் மத்யம, நிஜ ,ராகு ,கேது கிரகங்களின் ஸ்புட விஷியங்களும் ஜீவன்களின் எண்ணிக்கையைக் குறிப்பனவாகும்.

----[மார்ச் 2004 ] ஸ்ரீஅகஸ்தியர் விஜயம் இதழில்யிருந்து தொகுத்தது...,
===============================================
***குறிப்பு :- ஆதலால் தாம் நேற்றைய பதிவில்.. பஞ்சாங்க வழிபாட்டை துவங்க சொன்னோம் ..., மெல்ல மெல்ல நமக்குள்ளும் சிருஷ்டி அறிவு துலங்குமல்லவா அன்பர்களே..., 

***மேலும் மஹாமக “மாத மக” நட்சத்திர வழிபாட்டை பற்றி இந்த இனைப்பில் பார்க்கவும் http://pulipanisithar.blogspot.in/2013/07/2.html

***இந்த இணைப்பில் காலம் பற்றி அறிவியல் புத்தகத்தில் இருந்து சில வரிகளை பதிந்திருக்கிறேன் . படித்துப்பாருங்கள் .http://pulipanisithar.blogspot.in/2013/08/1.html

No comments:

Post a Comment