எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

தேனீ பாதுகாத்த மரகத லிங்கம்


தேனீ பாதுகாத்த மரகத லிங்கம் 

*** முருக்கம்பட்டு சின்னஞ்சிறு கிராமம். இங்கு முருகனின் திருவடி பட்டதால், முருகன் பட்டு என்ற பெயர் உருவாகி, அதுவே முருக்கம்பட்டு என்று மருவிவிட்டது. பழமை வாய்ந்த இந்த கிராமத்தில் சிவாலயம் ஒன்று புராணத் தொன்மையைப் பறைசாற்றியபடி நின்றிருக்கிறது. பச்சைக்கல் என்று அழைக்கப்படும் மரகதக் கல்லினால் செய்யப்பட்ட, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த அபூர்வ லிங்கம் இந்த கோயிலில் அருளாட்சி புரிந்து வந்திருக்கிறது.ஏரிக்கரையின் ஓரமுள்ள அரச மரத்தடியில் சிவலிங்கமும் நந்தியும் இருந்தன. கோயில் மண்ணோடு மண்ணாக புதைந்தாலும், காற்று, தட்ப வெப்ப நிலைகள், மழை, வெள்ளம், புயல், புழுதி போன்ற இயற்கையின் சீற்றத்தினாலும் இந்த சிவலிங்கம் பழுதுபடாமல் இருந்தது .




*** மிகப்பெரிய காட்டுத் தேனீயின் பராமரிப்பில், பாதுகாப்பாக இருந்திருக்கிறது இந்த சிவலிங்கம். பிரமரம் என்றால் காட்டுத்தேனீ என்று பொருள். அதனால் அம்பாளுக்கு பிரமராம்பிகா என்ற பெயரும், ஈசனுக்கு சத்திய விரதேஸ்வரர் எனும் பெயரையும் சூட்டினார்கள்.சத்திய விரதேஸ்வரருக்கு நாக விமானம். அவருக்கெதிராக நந்திகேஸ்வரர். பிறகு கணேச மூர்த்தி, வள்ளி-தெய்வானையுடன் முருக்கம்பட்டு முருகன் மற்றும் கோஷ்ட தெய்வங்கள், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நதிகள் கொண்டுள்ளனர். அன்னை பிரமராம்பிகா தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

*** இங்கு பாலமுருகனின் கமலபாதம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. மாம்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்த முருகனை பரமேஸ்வரனும் பார்வதியும் சமாதானப்படுத்த இங்கு வந்தனர். கணபதிக்கு ஞானம் ஏற்பட்டதால் தம்பியாகிய உன்னை வெற்றி கண்டார் என்று கூறினாலும் முருகப்பெருமான் சமாதானமடையவில்லை. ஈசனும், அம்பாளும் இங்கேயே தங்கி விட்டனர். பிறகு முருகன் கோபம் தணிந்து திருத்தணிக்குச் சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.

*** அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு 5 கி.மீ. அருகில் உள்ளது இக்கிராமம். info taken from
[ papersblue.blogspot.com ]

No comments:

Post a Comment