எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

காவி அணியக் கூடாது ஐயா கூடாது.

 ஐயப்ப விரதம் ., கோயிலுக்கு செல்லும் போது காவி அணிதல் பின்புகளைதல் இவையெல்லாம் ஒவ்வாத செயல்கள் .


தற்காலத்தில் ஸ்ரீ ஐயப்ப விரதம் மற்றும் பலவிதமான விரத காலங்களில் காவியை உடுத்திப் பிறகு களைந்து விடுகின்றார்கள், இனியெனும் இந்தத் தவறை செய்யாதீர்கள் .

எவ்வாறாக ஒரு துறவியின் காவி உடையானது தயாரிக்கப்பட வேண்டும் என்ற நியதிகளை முறைகளை நம்முடைய சாஸ்திரங்களிலும், சித்தர்களுடைய அருள் முறைகளிலும் மிகவும் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன .., இயற்க்கை சாயப் பூச்சு ,மட்டுமே காவி உடைக்கு ஏற்புடையது . எக்காலத்தும் இரசாயனக் காவி கலவையில் ஒரு பயனும் கிடையாது. இதில் எவ்வித தெய்வீக சக்தியும் ஏறபடாது ..,

மேலும் காவி உடை அணிந்து பலரும் பிச்சை எடுக்கின்ற அவல நிலையையும் இன்று நாம் காண்கிறோம் . எந்தக் காவி உடை உடுத்தியவரை நாம் மதித்து , போற்றி , புனிதமான முறையில் வணங்கினோமோ , அந்த தெய்வ அம்சங்கள் மறைந்து போய் காவி அணிந்து மன்னிக்கவும் ., காவி என்ற பெயரால் ஏதோ வண்ண உடைகளை அணிந்து , பிச்சை எடுக்கின்ற பெரும் பாவச் செயல் தற்போது பெருகியுள்ளது .
*** ஏழைகளுக்குத் தான , தர்மம் செய்வது சிற்ப்புடையது தான் . ஆனால் காவி உடை அணிந்து பிச்சை எடுப்பது பெருந்தவறே .!!

அன்னதனம் , வஸ்த்திரதானம் போன்றவை வேத சக்திகளுக்கு ஈடான ஹோமம் மற்றும் பலவிதமான உத்தம வழிபாடுகளுக்கு நிகரான பலன்களைத் பெற்றுத் தரக்கூடியவைதாம்.., காவி உடை அணிந்து போலித் துறவியாக வேடம் பூண்டு பிச்சை எடுப்பவர்களுக்கு பிச்சை அளிப்பதும் தவறே! காவியின் பெயரால் எந்தவிதக் குற்றங்களுக்கும் நாம் இடம் அளிக்க கூடாது . நாமும் அதற்குப் பாத்திரமாகக் கூடாது.

காவியுடை மிகவும் பவித்ரமானது ! காவியுடையணிந்து தீச் செயல்களில் ஈடுபடில் ( தாம்பூலம் தரித்தல் , பீடி ,சிகரெட் ,மது ,காமச் செயல்கள் ...) பாவங்கள் பல கோடி மடங்காய்ப் பெருகும் .

உடலால் மட்டுமன்றி மனதாலும் ஒரு தீங்கும் , ஒரு தீயெண்ணமும் எழாதோரே காவியத் தரித்திடலாம் .

ஒரு முறை காவியை அணிந்திடில் பின்பு வாழ்க்கையில் ஒரு போதும் அதனைக் களைந்திடலாகாது !! ஏனெனில் காவித்துணியை எரித்தல்லோ , புதைத்தலோ , எரிதலோ கூடாது . "காவி பஸ்மம் " என்ற முறைப்படி காவித்துணியை "பூமியில் அடக்கும் " முறையை தக்க சற்குருவை நாடி அறிக ,,

--- செப்டம்பர் 1999 & ஆகஸ்ட் 1997 ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து தொகுத்தவை…,


===============================================

“இறைவனை மட்டும் வணங்குங்கள் அதுவே சாலச் சிறந்ததது என்றென்றும்

 மானசீகமாக அவரவர்களுக்கு பிடித்த ஒரு மஹானையோ . சித்தரையோ . குருவாக எண்ணி சத்குருவாக ஏற்று வணங்குகள் .., அவர்கள் தோன்றாத்துனையாக இருந்து தக்க வழி காட்டி நடத்துவார்கள் ..ஏனெனில் “குரு” என்பதெல்லாம் மிக மிக உயர்வான நிலை…,தற்போது பலரும் பலரையும் “குருஜி , சாமிஜி” என்று அர்த்தம் தெரியாமல் அழைக்கிறார்கள் மிக மிக வேதனையாக உள்ளது .

No comments:

Post a Comment