எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

அக்னீஸ்வரர் ஆலயம்

***அக்னீஸ்வரர் ஆலயம் பற்றிய நான்கு பதிவுகள் சென்ற வாரம் பகிர்ந்திருந்தோம் .நேற்று [உதயகுமார் காங்கேசந்துறை] என்ற ஒருஅன்பர் “அக்னீஸ்வரர் ஆலயம் பற்றிய“ தனது அனுபவத்தை ” Message “ செய்து அதை பகிறும்படி கூறியிருந்தார்.., பகிர்கிறோம்..,

***”இப்போதைக்கு அப்போதே சொல்லிவைத்திருக்கிறேன் என சூக்குமமாக சொல்லிவைத்திருக்கிறார் போலும அக்னீஸ்வரர்”. யாரரிவார் சிவபராபமே உம் சிவதிருலீலையை 
===============================================
Conversation started today
உதயகுமார் காங்கேசந்துறை
10:39pm

ஓம் அக்னீஸ்வராய நம ! (அக்னீஸ்வரர் அற்புதங்கள் ) 2013

உலகத்துக்கு இதுகாறும் மறைத்த உண்மையில் ஒன்றை அவன் அருளால் சொல்வதற்கு சித்தம் கைகூடியதால் சொல்கிறேன் கேள்.கடந்த பத்து வருடங்களாக இந்தியாவில் இருக்கும் தலங்களை சுற்றி வருகிறேன்.ஆனால் தனிமையில் தான் அதிகமாக வழிபாடு செய்வேன்.யாரையும் சேர்த்துக்கொள்வது கிடையாது.இப்படிதான் இந்த வருடம் 2013 ம் ஆண்டு எனது கார் சாரதியுடன் ஈரோடு சென்று கொண்டிருந்தேன்.

இந்த கார் சாரதி பெயர் நந்தகுமார் கூட எனக்கு முன் பின் பழக்கமில்லாதவர்.இருந்தும் சித்திரை மாத வெய்யிலின் கடுமை தாக்காது வாகனம் நெய்வேலி வீதியில் சென்றுகொண்டிருந்தது. புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் எப்பொழுதும் காமரா ஒன்று என்னிடம் இருக்கும்.அப்படித்தான் அன்றும் மதிய வேளையில் அக்னீஸ்வரர் ஆலயம் தாண்டி கார் செல்லும் போது வயது முதிர்ந்த பெண்மணி அக்கினி நட்சத்திர வெய்யிலில் நடு ரோட்டில் சில ஆடுகளுடன் குறுக்கே சென்றுகொண்டிருந்தார்.

அட சில படங்கள் எடுத்துவிடலாமே என்று நந்தாவிடம் சொல்லி காரை நிற்பாட்டி அம்மணி பின்னே கமராவோடு ஓடி சில படங்களை எடுத்தேன்.எடுத்து கார் திரும்புகையில் நந்தா சொன்னார்.அட இங்கே ஒரு கோவில் இருக்கிறது சென்று வருவோமா என்றார். நானும் அதுக்கென்ன போய்வரலாம் என்ற எண்ணத்துடன் காரை திருப்பி கோவில் வாசலில் விட்டு விட்டு செருப்பில்லாமெல் நடந்து,கோவில் வாசலில் கோவிலின் திருப்பணிகளுக்காக சிற்பம் செய்யும் கொட்டிலைப் பார்த்து விட்டு கோவிலின் உள்ளே நடந்தேன்.

இறைவனுக்கு எதையாவது முடிந்தால் எடுத்துச்செல்வது என் வழக்கம்.அன்றும் அப்படிதான் அட இறைவனைப் பார்க்க வெறுங்கையோடு போவதா என்று எண்ணிக் கொண்டே அருகே இருந்த குழாயில் கால் கை கழுவி விட்டு நிமிர்ந்தேன்.

என் வருகைக்காக காத்திருந்ததுபோல ஒரே ஒரு பூ மட்டும் மரத்தில் இருந்தது .வேறு எங்கேயும் எந்த செடியிலும் அன்று எந்தப் பூவும் இல்லை.அட இதுயென்ன ஆச்சரியம் என்றே எண்ணியவாறு அதை பறித்துக் கொண்டு கோவில் படியேறினேன்.

கோவில் திருப்பணி வேலைகள் சித்திரை மாதத்தில் நடந்த படியால் எல்லா சுவாமி விக்கிரகங்களையும் கோவிலுக்குள்ளே உள்ள நடை பாதையில் வைத்திருந்தனர்.கையில் உள்ள அந்த ஒரு பூவை பொத்தியபடியே இப்படியோர் தரிசனம் எவனுக்கும் கிடைக்காதே என்று எல்லா விக்கிரகங்களையும் தொட்டு வணங்கினேன்.

இக்கோவிலில் மூலவர் எங்கே என்று தேடியபோது மூலவர் சந்நிதானத்துக்கு முன் வாசலில் யாரோ இருவர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.நான் அங்கே நிற்பதையும் அவர்கள் பார்த்தபடியே தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

அட இதுயென்னடா சங்கடமா போச்சு. இறைவனுக்கு கொண்டுவந்ததை அவரிடம் எப்படிக் கொடுப்பது. கையிலுல்ள பூவை கர்ப்பக்கிரகம் நோக்கி வீசலாமா இல்லையே , அட வேலையாட்கள் வேறு என்னை கண்காணிக்கிறார்களே என்ற எண்ணம் வந்தாலும் நடப்பது நடக்கட்டும் என்று கருவறைக்குள் நுழைந்து கையில் பொத்தியிருந்த பூவை அக்கினீஸ்வரர் மேலே வைத்து விட்டு அவரை வணங்கி நின்ற சமயம் கோவில் பூசாரி திடீரென கோவிலில் அந்த மதிய வேளையில் நுழைந்தார்.

என்னை கருவறை தாண்டி கண்டவர் ஆச்சரிய கண்களுடன் ஒன்றும் பேசாது ஏதோ மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்துவிட்டு விபூதி தந்தார்.

அக்கினீஸ்வரரை கண்டதும் கண்களில் பெருகிய நீரை துடைத்து விட்டு திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டேன்.அப்பொழுதுதான் அர்ச்சகர் என்னை யார் என்றார். நான் சொன்னால் உங்களுக்கு தெரிந்துவிடவா போகிறது என்று எண்ணினேன் அதையே அவரிடம் சொன்னேன்.

எந்த நம்பிக்கையில் அவர் அர்ச்சகர் ஆனாரோ தெரியாது. எனக்கே தெரியாமெல் எனக்கு நடந்த சிவனுடைய அற்புதங்களை அந்த மூலவர் சந்நிதியில் சொல்ல ஆரம்பித்தேன் அதை அந்த அர்ச்சகரும் குந்தி இருந்து கேட்டுக்கொண்டிருந்தார்.



திருவண்ணா மலையில் அருணாசலரின் அற்புதத்தில் ஆரம்பித்து நெரூர் ஸ்ரீ சதா சிவ பிரமேந்திரால் வரை சொன்னேன். இதையெல்லாம் சொல்ல சொல்லி தன் அற்புதங்களையே கேட்டுக் கொண்டிருந்த மூலவர் அக்னீஸ்வரர் அந்த அர்ச்சகருக்கு தன்னை யார் என்று என் வாயால் கூற செய்துவிட்டார்.

தெருவால் சென்றவனை இழுத்து ஒரு மலர் காட்டி இரு கரம் குவிக்கச்செய்து மூன்று பேர் கேட்ட அற்புதம். அக்னீஸ்வரர்,அர்ச்சகர்,நான்.

(இந்த அக்னீஸ்வரரைப் பற்றி பாடிய என் பாடல்களை என் முகநூலில் பதிந்துள்ளேன் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம் )

ஓம் அக்னீஸ்வராய நம !

எழுத்தாக்கம். உதயகுமார் காங்கேசன்துறை.
https://www.facebook.com/kumargermany

No comments:

Post a Comment