••• எத்தனையோ சதுர்கோடி யுகங்களில் எண்ணற்ற பல மாமுனிகளுக்கும் தவஞானமானது , திருமெய்ஞ்ஞானமாய்க் கனியும் தலமிது .,
••• இந்த காசித் தீர்த்தத்தை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் , எண்ணற்ற நம்முடைய முன்னோர்களை உயரிய நிலையில் ஒவ்வொரு படியாய் முன்னேற்றுவதாம் ..,
••• நம் உடலில் படும் திருமெய்ஞ்ஞானக் காசித் தீர்த்தத்தின் ஒவ்வொரு துளியும் , எண்ணற்றக் கர்மவினைகளைப் போக்கி பரிசுத்தம் வார்ப்பதாகும் .,
••• இல்லையெனில், ஒவ்வொரு பாவவினையும் , கழிந்திடவே , எண்ணற்ற பிறவிகளில் நற்காரியங்களை ஆற்றி வர வேண்டும் .,
••• பிள்ளைகளுக்கு நல்லொழுக்கம் திறம்பட்ட நல்விதமான நினைவாற்றல் , நல்புத்தியைச் சித்திக்கச் செய்யும் தீர்த்த ஸ்பரிச நன்னாள் ! வல்வினைப் பெருக்கத்தைத் தீர்த்த சக்தியால் தீர்த்து அமைதியான இல்லற்த்தை இனிய வரமாய் வார்க்கும் ...,
••• வருடம் முழுவதும் திருக்கடவூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் மற்றும் ஸ்ரீ அபிராமி தேவிக்கு இந்தக் கூபத்தில் இருந்து எடுக்கப் பெறும் தீர்த்தத்தில் இருந்து மட்டும் தான் தினசரி அபிஷேகம் நிகழும்.
••• இந்த திருமெய்ஞ்ஞானம் காசித் தீர்த்தம் தவிர , வேறு எந்தத் தீர்த்தத்தாலும் திருக்கடவூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் மற்றும் ஸ்ரீ அபிராமி தேவிக்கு அபிஷேகம் நிகழ்த்தப் பெறுவது கிடையாது என்பது இத்தீர்த்தத்தின் மகத்துவத்தைச் சிற்ப்பிபதாகும் .
••• தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தான தீர்த்தத்தில் நாமும் நீராடுவது எனில் என்னே பெரும் பேறு!
••• திருமெய்ஞ்ஞானம் காசித்தீர்த்த கூபத்தில் நீராடுகையில் ஓத வேண்டிய அரிய அகஸ்திய வாரண நீராடல் துதியிது ., அறிந்தோர் அகமர்ஷணத் துதியையும் சேர்த்து ஓதிடுக ..,
••• "கடவூர் மயானச் செறிவாள பைந்தீர்த்தம்
கண்டில விண்டில தாருமே
மடமை அஞ்ஞானம் மதியற்ற நிலை போக்கும்
மந்திரச் சுடராக்கம் பாருமே
விடையன் கண்டோங்கி விண்ணாரப் பதிகொண்ட
தண்சுடர் தந்ததிரு வாகுமே
குடமாய்க் காசிவழி பந்தவழி வளவாரம் பெய்திடும் வேதமாய்ப் பேணுவீர் !"
••• பிரதி தமிழ் ஆண்டின் பங்குனி மாதத்தின் அஸ்வினி நட்சத்திரம் வரும் ஒரே நாளில் மட்டுமே திருமெய்ஞ்ஞானம் , காசித்தீர்த்தத்தை ,பூலோக மக்கள் பெற்று , நீராடி , பூஜித்து , அருந்தி , காசித்தீர்த்தம் போல் சேகரித்து வைத்துக் கொள்ளலாம் என்ற நியதி உள்ளது . இத் திருநாளில் பெறும் தீர்த்தத்தை இல்லத்திலும் , எங்கும் வைத்திருந்து வருடம் முழுவதும் எந்நாளிலும் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்...,
••• பங்குனி மாதத்தின் அஸ்வினி நட்சத்திர தினத்தில் இங்கு பெறப்படும் காசித் தீர்த்த்தை , எத்தனை மாதங்களுக்கு பத்திரமாய் வைத்திருந்தாலும் தீர்த்த பலாபல சக்தி சற்றும் மாறாது , பாசி பிடிக்காது , கெடாது இருக்கும் மகத்துவத்துடன் இத் தீர்த்த சக்தி துலங்குகின்றது..,
--- மேலும் பரிபூரண திவ்ய விளக்கங்களுக்கு கடந்த வருட 2013மார்ச் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க...,
••• செல்லும் வழி : மயிலாடுதுறையில் இருந்து 18கி.மீ – திருக்கடையூர் 2கி.மீ – திருமெய்ஞ்ஞானம் .
••• பிரசித்தி பெற்ற திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி கோயில் இருந்து 2கி.மீ தொலைவில் உள்ளது. திருமயானம் [திருமெய்ஞ்ஞானம்] ..,
===============================================
••• மேலும் சில முக்கியக் குறிப்புகள் :--
••• திருக்கடையூர் அபிராமி கோயிலுக்கு மிக அருகில் இரண்டு வீதிகள் தள்ளி சிறு கோட்டகைக்குள் தற்போது அருள்கின்றனர் :- அமிர்தவல்லித் தாயார் சமேத அமிர்த் நாராயணப் பெருமாள் ..,
••• திருமணங்களை “திருக்கடவூர் அமிர்தவல்லித் தாயார் சன்னதியில்” நிகழ்த்துவதை விடப் பெரும் பாக்கியம் வாழ்வில் வேறெதுவுமில்லை !” என்று தேவலோகங்களிலே போற்றும் அளவிற்குப் பல சித்தர்களின் , மஹரிஷிகளின் திருமண வைபங்களும் நிகழ்ந்த திவ்யாமிர்த தலம்.
••• மார்கண்டேய மஹரிஷி பிரபஞ்சத்தில் எங்கு இருப்பினும் நித்திய “அமிர்த நேரத்தில்” தினமும் திருக்கடையூர் அமிர்த நாராயணப் பெருமாளின் திருச்ச்சன்னதியில் வழிபாட்டிற்காக வந்து சேர்ந்து விடுகின்றார் என்பதும் அன்றும் , இன்றும் , என்றுமாய் நிகழ்ந்து வரும் “தெய்வ நடைமுறை” ஆகும் .!
••• பாக்யம் உள்ளோர்க்கு , தினமுமே அந்தந்த நாளின் அமிர்த நேரத்தில் , திருக்கடையூர் அமிர்த நாராயணப் பெருமாள் ஆலயத்தில் மார்கண்டேயரின் தரிசனம் – பசு ,மானுட வடிவு , தேவ வடிவு , எறும்பு , தேனீ , - என எவ்வகையிலும் கிட்டிடும் .
••• திருக்கடையூரில் அருளும் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலய தரிசனப் பலன்களைப் பரிபூரணம் அடையச் செய்வதும் , ஸ்ரீஅமிர்த நாராயணப் பெருமாள் கோயில் வழிபாடுதான்!
••• அதாவது ,இங்கு ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரை வழிபட்ட பின் ஸ்ரீஅமிர்தவல்லி சமேத ஸ்ரீஅமிர்த நாராயணப் பெருமாளை வழிபட்ட பின்னரே, திருக்கடையூர்த் தல ,தரிசன வழிபாட்டுப் பலன்கள் முழுமையாகும் என்பது சித்தர்களின் வேதவாக்காகும்..!
••• மேலும் அமிர்தமய விளக்கங்களை மே2007 ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் காண்க ..,
===============================================
••• மேலும் திருக்கடையூர் அருகில் .,
••• தில்லையம்பதிக்கும் வீசம் பெரிதான அதிமஹா புன்ய ஷேத்திரம் தில்லையாடி .. உள்ளது...,
••• முருகப் பெருமான் உலாவிய குரா மரத்தடி இருக்கும் திருவிடைக்கழி [ஒரு முறை திருவிடைக்கழி முருகனை தரிசனம் செய்து பாருங்கள் வாழ் நாள் முழுதும் அத் திருவுருவம் நெஞ்சை விட் அகழாது ].., முருகப் பெருமான் பின் புறம் சிவலிங்கமிருக்கும் அபூர்வத் தலம் ...,
••• ஆக்கூர் - எத்தனையோ சித்தர்கள் , மஹான்களோட கால் பட்ட புண்ணிய பூமி ..,சர்வேஸ்வரனே சாப்பிடறதுக்குன்னு தரையில இலை போட்டு வந்து உட்காந்த ஆக்கூர் சிவத்தலம்...., பக்தருக்காய் பகவானே , தானா இங்க சுயம்பாய் வந்ததுனால தான்தோன்றீஸ்வரர் ஆனாரு..., [ “அடிமை கண்ட ஆனந்தம்”-- ஜுன்2013 ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ். ]
===============================================
அனனத்து தலங்களும் அருகருகே உள்ளன..., ஒரே நாளில் நிதானமாக ...காலையில் திருமெய்ஞ்ஞானம் காசித் தீர்தததில் நீராடி .., பிரம்மபுரிஸ்வரரை வழிபட்டு .., திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி ஆலயத்தில் வழிபட்டு .., அமிர்த நாராயணப் பெருமாளை சேவித்துவிட்டு .., தில்லையாடில் தரிசனம் செய்து .., திருவிடைக்கழி முருகனின் அருளைப் பெற்று ..., ஆக்கூர் தான்தோன்றீஸ்வரரை..., வழிபடலாம்...,
No comments:
Post a Comment