எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

தியானம் என்பது.....,


••• தியானம் என்பது மகிழ்வோடு இருப்பதன் வெளிப்பாடு. ஒரு மகிழ்வாக இருக்கும் மனிதனை தியானம் நிழல் போல தொடரும். அவன் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் அவன் தியானத்தில் இருக்கிறான். அவன் ஆழ்ந்து நிலைகொள்கிறான்.

••• ஓஷோ உன்னுடைய தியானபாதை சரியானதா என்பதை கவனிக்க ஒரு எளிய வழி சொல்கிறார். அது உன்னுடைய தியானம் அன்பையும் புத்துணர்வையும் உற்சாகத்தையும் எழுச்சியையும் கொடுத்தால் நீ சரியான பாதையில் பயணிக்கிறாய். 

••• சோர்வையும் சோம்பேறி தனத்தையும் பதுங்குதலையும் பயத்தையும் மதிப்பீட்டையும் குறை சொல்வதையும் கொடுத்தால் நீ செல்லும் பாதையும், புரிந்து கொண்ட விதமும், செய்யும் முறையும் சரியல்ல. 

••• ஏனெனில் இது எதைக் காட்டுகிறது என்றால் உனது மனம் தியான யுக்தியைப் பயன்படுத்திக் கொள்வதையே காட்டுகிறது. சிலர் ஏதோ அற்புதமும், ஆற்றலும், அதிசியமும் தியானத்தில் அடைவதாக பெருமை அடைந்தாலோ எந்த ஒரு அனுபவத்தையும் பிடித்துக் கொண்டு அதிலேயே நின்று விட்டாலோ அதுவும் மனதின் பிடியில் தியானயுக்தி சிக்கிவிட்டதன் அடையாளம்தான்.

••• தியானத்தின் விளைவு விழிப்புணர்வு அதிகரித்தலாய் இருந்தால் மட்டுமே அது சரி. தியானயுக்தி என்பது மனம் கடந்த நிலை அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு கருவி, ஒரு சூழலை ஏற்படுத்துதல் அவ்வளவே. அந்த அனுபவங்கள் விழிப்புணர்வாய் வளர்ந்து வாழ்வில் மலர வேண்டும், 



••• வாழ்வை ஆனந்த நடனமாக்க வேண்டும், அப்படி இல்லாமல் தியானம் செய்வது தனியாகவும், நடைமுறை வாழ்வு தனியாகவும் நடத்தி வந்தால் அது மெய்ஞ்ஞானப் பாதையில் செல்வதாகாது. மாறாக அது தியானத்தை மனம் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரமாகவே அமையும். 


••• ஆனால் ஓஷோ வாழ்வை தியானத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவே சொல்கிறார். தியானத்தை உள் அகங்கார வாழ்வின் வளர்ச்சிக்கும், ஆறுதலுக்கும், மனம் ஓய்வு எடுத்துக் கொள்வதற்க்குமாக பயன்படுத்திக் கொள்ளச் சொல்வதில்லை. 

••• ஏனெனில் அது ஆங்கில மருந்துபோல இடைக்கால நிவாரணம் தரும், அதே சமயம் உணர்ச்சிகளை அடக்கி உன்னை புரையோடிய நோயாளியே ஆக்கும். ஆகவேதான் ஓஷோ விழிப்புணர்வும், அன்பும் நேசமும், ஆனந்தமும், கொண்டாட்டமும், அமைதியும் வெளிப்படுவதை நமது தியானத்தின் அளவுகோலாக வைத்துள்ளார். 

No comments:

Post a Comment