எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

சித்தர் முனியாண்டி சுவாமிகள்

••• பறந்து சென்றே சதுரகிரியிலும் கதிர்காமத்திலும் சுவாமி தரிசனம் செய்த ••• சித்தர் முனியாண்டி சுவாமிகள் •••

Chellappan Humour என்ற அன்பர் பகிர்ந்து கொண்ட தகவல்..,

••• மதுரை திருமங்கலம் அருகே கே.ரங்கபாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சித்துவிளையாட்டுக்களில் கை தேர்ந்தவர் இவர் .இவர் சதுரகிரிமலைக்கு அடிக்கடி சென்று வருவார்.அங்குள்ள சுந்தரமகாலிங்கம் சன்னதியில் தனியாக சுவாமியுடன் பேசுவதில் வல்லமை பெற்ற சக்தி வாய்ந்த மகான் இவர்.இவர் சதுரகிரிக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்க்கும் வடநாட்டில் உள்ள மதுராவிற்க்கும் ஆகாய பயணம் மேற்கொள்பவர்
இவரின் பக்தர் ஓய்வுபெற்ற டெப்டிகலெக்டர் விஸ்வநாதன் என்பவர் இவருடன் இருந்தஅனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

••• ஒருமுறை நானும் சுவாமிகளும் திருமங்கலம் அருகேயுள்ள ரங்கபாளையம் கிராமத்தில் அமர்ந்து இருந்தோம்.அப்போது மணி 9மணி இருக்கும் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இந்நேரத்தில் அங்கு செல்வது மிகச்சிரமமான விஷயம் இங்கிருந்து கிருஷ்ணன் கோவில் சென்று அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று அங்கிருந்து தாணிப்பாறை அடிவாரத்திற்க்கு சென்று அங்கிருந்து மலை ஏறுவதற்க்கு எப்படியும் ஏழெட்டு மணிநேரம் ஆகிவிடும் பஸ்வசதியில்லாத காலம் வேறு .சுவாமிகள் சற்று நேரம் என்னை பார்த்தார் என் கையை பிடித்துகொள்ளுங்கள் சதுரகிரிக்கு 5 நிமிடத்தில் கொண்டுபோய் சேர்க்கிறேன் என்றார்.நானும் அரைநம்பிக்கையோடு அவர் கையைபிடித்தேன் ஏதோ மயக்கநிலையில் இருப்பதைபோல் உணர்ந்தேன்.அடுத்த 5 நிமிடத்தில் சுந்தரமகாலிங்கம் சன்னதியில் உட்கார்ந்து இருந்தேன் என்னால் அந்த சிலிர்ப்பான அனுபவத்தை இன்று வரை மறக்க முடியவில்லை என்று கூறுகிறார் இந்த விஸ்வநாதன்

••• ஒருமுறை சித்தர் முனியாண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ...., 



••• நின்று மீனாட்சி அம்மனை தொழுதுகொண்டிருந்த போது ,ஒரு பித்தனை போன்ற நிலையிலிருந்த சித்தரை பார்த்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்ய அவர் திமிறினாராம். உடனே அவர் கையில் விலங்கிட்டார்கள்.

••• சித்தர் முனியாண்டி அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே “இந்த உலகத்தில் எனக்கு பூட்டா….,முடியாது …? என சொல்லிக்கொண்டே சட்டென மறைந்து போனார்.அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய அவர்கள் முன் கைவிலங்கு வந்து விழுந்ததாம்.

••• அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பாக சித்தர் முனியாண்டி நிற்க, உள்ளிருந்த சிப்பந்திகள் “அந்த பரதேசியை கடைக்குள் விடாதீர்கள்.., அப்படியே விரட்டுவிடுங்கள்.. “ என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினர்.ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் சித்தர் முனியாண்டியை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என் மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் தோன்றி மறைந்தது.அடுத்த நொடி அவர்கள் கண் திறந்த போது எதிரே பரதேசி கோலத்திலிருந்த சித்தர் முனியாண்டி இப்போது பெரிய செல்வந்தர் போன்று கோட், சூட் சகிதமாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும் சுற்றி இருந்தவர்களும் சித்தர்

••• முனியாண்டி ஆச்சரியமாக பார்க்க அவர் “ என்ன பண்றது பரதேசி கோலத்திலிருந்ததால் கடைக்குள்ளே விடாம துரத்தப்பார்த்தார்கள், அதான் இப்படி மாறிவிட்டேன். இனிமேல்

••• உடையை மட்டும் பார்க்காதீர்கள், மனிதனை பாருங்க,. மனசைப் பாருங்க..” என்று சொல்லிவிட்டு ஓட்டலுக்கு செல்லாமலே நகர்ந்துவிட்டார்.சித்தர் முனியாண்டி இவரைப் போன்றே பலருக்கும் பலவித அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.

••• அவரது சமாதிக்கு சென்று மனதார தொழுதால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள் அவரின் பக்தர்கள்.

••• முனியாண்டி சுவாமிகள் மற்றும் அவரது குரு கமலானந்தர் பற்றி முழுமையான விஷயங்களை இந்த இனணப்பில் தரைவிற்க்கம் செய்து பார்க்கவும் ...,


முனியாண்டி சுவாமிகளின் சமாதி மதுரை , திருமங்கலம் அருகில் உள்ள T.குன்னத்தூர் சென்று அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கே.ரங்க்ம்பாளையத்தில் உள்ளது ..

and from 18Siddhar-and-techniques [yahoo groups ]

No comments:

Post a Comment