எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

குரு பூஜை

••• குருபூஜை •••

••• குரு வடிவம் என்பது மனதில் கொள்வது 

••• குரு உருவம் என்பது கண்களுக்குள் நிறைப்பது 

••• குருஸ்புடம் என்பது உள்ளத்துள் புஷ்பித்து தானே கிட்டும் குரு ஜோதி தரிசனத்துக்கு இட்டுச் செல்வதாகும் ..

••• நிறைவில் வரும் குருஜோதியானது தானாகத் தோன்றிச் சுயம்பாய் ஒளிர்வது ! இது தான் (மனித முயற்ச்சி ) திருவினயாதல் .அதாவது சத்குருவே திருவினை செய்து தாமாகவே குருஜோதியாய் தரிசனம் தருதல் !

••• இது போல் குரு காட்டித் தந்த நல்வழி முறைகளில் தினமும் ஒன்றையேனும் நிச்சியமாகச் செய்து வந்தால் ,சந்ததிகளுக்கும் பழக்கி வந்தால் இந்த குருவழிச் சேவையில் தினசரி சிந்தனையானது கீழ் கண்ட வகையில் மனதில் ,உள்ளத்தில் , துளிர் விடும் .இதுவே ஆழ்ந்த நம்பிக்கை மரமாகும் .

* 1 . இந்த சேவை குரு கற்றுத் தந்தது .

**2. குரு கற்றுத் தந்ததை செய்கிறோம் .

***3. குரு கற்றுத் தந்ததை அவரே நினைவு படுத்துகிறார் 

***4.குரு கற்றுத் தந்ததை அவரே நினைவுபடுத்துவதாலேயே செய்கிறோம் .

***5. குரு கற்றுத் தந்ததை அவரே நினைவுறுத்தி செய்யச் சொல்வதாலேயே செய்கிறோம் .

***6. குரு கற்றுத் தந்ததை அவரே நினைவுறுத்தி செய்யச் சொல்லிச் செய்தமையால் குருவிற்கே இது அர்ப்பணம் .

***7. குரு கற்றுத் தந்ததை அவரே நினைவுறுத்தி செய்யச் சொல்லிச் செய்தமையால் குருவிற்கே அர்ப்பணமான இதுவே உண்மையான குருபூஜையின் அம்சமாகும் .

••• என்றவாராய் சொல்லி ,எண்ணி சிந்தித்து வாருங்கள் ., மேற்கண்ட எழு அர்ப்பணிப்புச் ., சிந்தனா வாக்கியங்களும் உத்தம குரு சேவையில் பிறப்பதால் ., 

குரு உருவமும் ,குரு வடிவமும் , குருஸ்புடமாக உள்ளத்தில் நாளடைவில் தீர்கமாய் ஸ்புரிக்கும் . இது தான் ஆழ்ந்த நம்பிக்கை பரிமளிக்கும் வகையிலான "குரு பூஜை ".

••• குரு காட்டிய அருட்பணிகளையே குருபூஜையாய் செய்யும் பொது தான் குருவின் உருவமும் ,குரு வடிவமும் , குருஸ்புடமாக ஸ்புரித்து ஆழ்ந்த நம்பிக்கைக்கு வித்திடும் . இதற்கான வித்தக சாதக ,சாதனமே "குரு பூஜை "

••• (குருவின்) உருவத்தைப் (புகைப்படமாய்ப்) பிடிக்காதே, (அன்பு) வடிவத்தை உள்ளத்தில் பிடி !

••• பிறவாழியும் , உயிர்வாழியும் ஒவ்வோரு பிறவியிலும் சேர்த்துக்கொண்ட செல்வமும் , கல்வியும் ,அறிவும், சொத்து பத்தும் , ஐஸ்வர்யமும் ஏனைய பிறவியில் தொடராது .
குருஸ்புடம் பதிந்த தூய உள்ளம் மட்டுமே பிறவி தோறும் ஜீவபிந்து வாய்த் தொடரும்., இப்படித்தான் குருபூஜையை சாசுவதமாக நிகழ்த்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிறவி தோறும் வரும் ஜீவ பிந்து உள்ளத்தில் தான் ஏனைய பிறவிகளில் குருவின் மேல் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கைச் சுடர்களும் பரிணமித்து வரும் .

••• அதெப்படி உள்ளத்தில் பிடித்தால் மீண்டும் ‘பிறவி இருக்குமா என்ன ??? இது (நம்பிக்கைப்) ‘ பிடிப்பு’ நிலையைப் பொறுத்தது . சிக்கெனப் பிடித்தால் பாக்கி இருக்காது . சுய நலக் கொக்கெனப் பிடித்தால் (!) (?) பக்கென்று .,திக்கென்று (வினை) பாக்கி தான் சிக்கும்.. ~!~

– இதுதானே குருபூஜையின் ஆத்ம சங்கல்பம் ., ! இதற்காகத்தானே குருபூஜை ! குருவின் வடிவம் பூமியில் இருந்து மறைகையில் என்ன தான் நிகழ்கிறது ? என்ற கேள்விக்கான பரிசுத்தமான ஆன்மவிடை இதில் தான் புஷ்பித்து ஜ்வலிக்கும் ......!!!

••• (...............) இதற்கான ஆன்மவிடையை விடைக்கான விளக்கத்தைhttp://agnisiksha.org/ வலைத்தளத்தில் காண்க…,



••• இவ்வாறு 1,200ருக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளிலும் .., 
ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழில் மூலம் 1993 இருந்து இன்று வரை அகஸ்தியர் கிரந்த வாக்கியங்களிலிருந்து அருட் பெரும் எண்ணற்ற தெய்வீக விளக்கங்களை அமிர்த மழையாய் வர்ஷித்து அளித்(த)து வரும்....,

என்றென்றும் வாழும் ஏகாந்த ஜோதி
"அருணாச்சல ஜோதி " "அலங்கார பீடாதிபதி "
திருக்கயிலாய பொதியமுனிப் பரம்பரை
1001வது குரு மஹா சன்னிதானம்
சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை
"குரு மங்கள கந்தர்வா"
ஸ்ரீலஸ்ரீ சத்குரு வேங்கடராம சுவாமிகளின் மஹாசிவபத அருணாசல ஜோதி ஐக்யத் திருமந்திரப் படல 
அனுபூதி திருநாள் குருபூஜை நாளை : 23-1-2008 
[தை மாதம் , தேய்பிறை சப்த்மி திதி ]

••• கோவையில் உள்ள அன்பர்கள் முடிந்தால் நாளை கோவை அகஸ்திய விஜய கேந்திரால்யாவிற்கு வந்து குருபூஜையில் கலந்து கொள்ளலாம் காலை 11மணிக்குமேல்...,

Sri Agasthia Vijaya Kendralaya Branch
Big Bell Complex
Shop Number 49, First Floor
Diwan Bahadur Road
(opp Sri Ratna Vinayaka Temple) near pazhlamuthir nilayam 
R.S.Puram, Coimbatore 002
 

No comments:

Post a Comment