எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

ஹோம விதிகள்


••• டிசம்பர் 3, 1984 அன்று மத்தியப் பிரதேசம் போபால் என்ற ஊரில் நடந்த விஷ வாயு தாக்கத்தினால் எண்ணற்ற மாந்தர் உயிர் இழந்ததும், கூண், குருடு, செவிடு என உறுப்புக்களை இழந்து வாடியதும் உலகம் அறிந்த உண்மை. யூனியன் கார்பைடு என்ற ஒரு அந்நிய முதலீட்டாளரின் ஆலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கழிவு பற்பல மக்களின் உயிரை பறித்தது.

••• பத்து கி.மீ. தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் பாதிக்கப்பட இந்த ஆலையின் மிக அருகாமையில், சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்குள் உள்ள திரு. சோகன் லால், எஸ். குஷ்வாஹா மற்றும் எம்.எல். ரத்தோர் என்பவரின் குடும்பம் மட்டும் தப்பிப் பிழைத்தது. எப்படி? அன்று அவர்கள் அக்கினி ஹோத்திரம் மற்றும் மகா சுதர்சன யாகம் செய்து கொண்டிருந்தனர். மே மாதம் 4ந் தேதி 1985ம் தேதியிட்ட The Hindu நாளிதழில், “Vedic Way to beat pollution”

என்ற தலைப்பில் இச்செய்தி வெளிவந்தமை காண்க.

••• ஆக ஹோமம் என்பது மக்களின் மேன்மைக் காகவும் முன்னேற்றத்திற்கான காரணத்திற்காகவும் நமது சித்தர்கள் சொல்லிப் போந்தனர் என்பது உண்மை. 

சண்டி ஹோமம்:

“மேன்மைகள் பெற்றே மேலோனாய்
நிற்கலாங் கண்டீர் -- இந்திர சந்திரா
யனுமடங்க கண்டோமே; கலை
யடு ஞான விருத்தியமடங்க விதுவே
வித்தாமென கொங்கணயாமுஞ் சத்தியஞ்
செய்வோமே”

••• கொங்கண சித்தரின் இப்பாடல் பொருள் புதைந்தது. ஒரு மனிதன் மிக உயர்ந்த நிலை அடையவும். கீர்த்தி மிகுந்து பெறவும், பெரிய பெரிய பதவிகளை எட்டவும் இந்த சண்டி ஹோமம் செய்யவேணும். அசுவமேத யாகத்திற்கு இணை இது என்பர் சித்தர். இந்திரன், சந்திரன், பிரமன் உள்ளிட்ட தேவர்களின் அருள் சேரும் என்றும், ஞானம், கல்வி, தேர்ச்சி கிடைக்கும் என்றும் பொருள் கொண்ட இந்தப் பாடலினால், இந்த ஹோமத்தின் மேன்மையை அறியலாம்.

--- kaviyam.in [ 2014மார்ச் மாத இதழ் ]
===============================================


குறிப்பு :-

•••ஆனால் தற்போதைய ஹோமங்கள் எல்லாம் பூரண ஹோமங்கள் ஆவதில்லை..., ஹோமத்திற்கு சமித்துக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் ., கட்டைகளை எக்காரணம் கொண்டும் பயன் படுத்துதல் கூடவேகூடாது...., 

••• தினமும் அனைவரும் எளிய மந்திரங்கள் கூறி ஒரு 15 நிமிடத்தில் சிறு ஹோமத்தை அவரவர் இல்லதிலேயே செய்யலாம் ..., 

••• ஹோம விதிகள் பற்றி சித்தர்கள் முறை முழு விளக்கங்களை ஸ்ரீ அகஸ்திய விஜயம் வெளியீடான ... அருகம்புல் அற்புதனின் அருள் பெரும் வழி [ சதுர்த்தி ஹோம மஹிமை ] புத்தகத்தில் காணலாம்..

No comments:

Post a Comment