எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

UFO (UNIDENTIFIED FLYING OBJECT)


••• பறக்கும் தட்டைப் பார்த்தேன்-. ஏதோ ஒன்று வானில் வேகமாக மிதந்து வந்தது. பிறகு அது மறைந்து விட்டது என்று பாமரர்கள்கூட பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இதனை ஆங்கிலேயர்கள் UFO (UNIDENTIFIED FLYING OBJECT) என்று அழைப்பர். 

••• இதற்கு கண்டுபிடிக்கமுடியாத பறக்கும் தன்மை உடைய பொருள் என்பதாம் பொருள். விண்வெளியில் உறையும் கோடிக்கணக்கான கோள்களில், ஒரு சிலவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றன என்கின்றனர் நம் சித்தர்கள். வான்வெளியில் உறையும் சில கோள்களில் மருத்துவ சக்தி படைத்த அரிய மூலிகைகளும் உள்ளன அல்லது பயிரிடப் பட்டுள்ளன என சித்தர்கள் வாக்கால் உணரலாம்.

“பாரிஜாத பூவிழியில் ஊடுருவி,
நாசமான குருதி
தசை நரம்பு மண்டலத்தை
க்ஷணத்தே சரி செய்யும் விந்தை
தெளிவீரே”
என்று கோரக்கர் என்னும் சித்தர் பேசுகின்றார். 



••• ஒரு முறை அருணகிரிநாதர், திரு அண்ணாமலையில் இருந்து கிளி வடிவமாக மாறி, வானில் பறந்து வேறு கிரகத்துக்குச் சென்று, பாரிஜாத மலரைக் கொணர்ந்து, பார்வை பறிபோன மன்னவரின் கண்களுக்கு ஒளியைக் காட்டினார், என அறிகிறோம். அப்படியானால், மாற்றுக் கிரகத் தில், இப்படிப்பட்ட அரிய முலிகை கள் பயிரிடப்பட்டுள்ளன- அல்லது தானே விளைந்துள்ளது என்று தானே பொருள். இது எல்லாம் புராணம், கதை என்று ஒதுக் கினாலும், பின்பு சித்தர்கள் பாடல் களை ஆய்வோம்.

••• “கண்டோம்- கணக்கிலடங்காத் தொலையில் கபிலமுனி கண்ட கோளைக் கண்டோம். புவியுலுறை மாந்தரை யப்ப, ஆங்கும் மங்கைய ரொடு மாந்தரும் பாலருமாடி நிற்க, மெலிந்த வடிவாம்- காண திகைக்கவே செயும் சீவ ராசியும் கண்μக்கழகான சோலையுங் கண்டோமே”

••• எனப் பேசுகின்றார் திருமூலர். கணக்கில் அடங்கா தூரத்தில் இருக்கும் முனிவரால் கண்டு பிடிக்கப்பட்ட கிரகம் இதனில் மனிதர்கள், உயிரினங்கள், அழகிய சோலைகள் உள்ளன என பாடல் பொருளைத் தருகின்றது.

••• விஞ்ஞானிகளும் இந்தக் கூற்றை ஒரு சதம் ஏற்று கொண்டுள்ளனர். அண்மையில் NASA என்ற அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம், கப்லர் 62 E, கப்லர் 62 F என்ற இரண்டு கோள் களை வான்வெளியில் கண்டது. இது பூமியில் இருந்து 1200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக் கின்றது என்று ஆராய்ந்து கண்டனர். ஒளி ஒரு நொடியில் ஒரு லட்சத்து எண்பத்து ஆறாயிரம் மைல் செல்லும். இந்த வேகத்தில் ஒர் ஆண்டு எத்துனை தூரம் செல்ல முடியுமோ அதனை 1200 மடங்காகப் பெருக்க வரும் தொலைவில் இந்த கப்லர் கோள் உள்ளது. இது NASA விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது. நமது முன்னோர்கள், இதனைக் கணக்கிலடங்கா தொலை என்றனர். தூர திருஷ்டிக் கருவி (TELESCOPE) முலம் ஆராய்ந்ததில், கப்லர் 62 E - ல் நீர் நிறைய இருக்கிறது என்றும், தட்பவெப்பநிலை பூமிக்கு சமமாக இருக்கிறது, உயிரினங்கள் வாழ போதுமான வசதி உண்டு என ஒத்துக்கொள் கின்றனர். 

கபிலர் என்னும் சித்தர் தனது பாடலில்,

“பஞ்சம் கோளது பூமிக்கு நிழலச்சில்
பகுதியில் பான் ஏகஞ்சரிய ---- புவிக்கு
இணையான பகுதிப் பாகம் கூடிட
விளங்குமச்சு மூர்த்தியரெண்ணிக்
கையாலறுக்கு நாளுங் காணலாமே” 

மெய் ஞானம், விஞ்ஞானத்தை வென்றது என்றே இப்பாடல் நமக்கு உணர்த்துகின்றது. 

••• சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள AXIS 45 டிகிரி சாய்ந்து இருக்கவேண்டும் என்றும், கப்லர் 62 E என்ற கோள் பூமியின் குறுக்களவைவிட ஒன்றரை பகுதிக்குச் சற்றுக்கூட, என்ற வரிகளை, விஞ்ஞானிகள் மிகச் சரியான அளவு குறுக்களவு, பூமியைவிட 1.61 மடங்கு அதிகமானது என் கின்றனர். அதாவது பூமியைவிட இந்த கோள் அறுபது சதவீதம் பெரியது என்பது தெளிவாகிறது. ஒர் ஆண்டு என்பது பூமியில் இருப்பதைவிட மூன்றில் ஒரு பங்காக இருக்கும் என்கிறது சித்தர் தம் பாடல். விஞ்ஞானிகள் 122 நாட்கள் கொண்டது இந்த கப்லர் 62 E கோளின் ஓராண்டு எண்ணிக்கை என்கின்றனர்.

“ மங்களமான கோளும் மனிதர்
உறைய கண்டோமே”

என்ற அழுகணி சித்தர் வாக்கில் இருந்து செவ்வாய் என்ற கோளில் மனிதர்கள் வாழ்கின்றனர் என்ற செய்தி கிடைக்கின்றது. 

••• பூமியைப் போன்ற அண்டத்தில் பற்பல கோள்கள் உள்ளன என சித்தர் பெருமக்கள் பாடிப் போயுள்ளனர். கீரர் எனுஞ் சித்தர், “புவியை யத்த ஈரேழு லோகமிருக்க, பாலுண்ண நிலை புகவே கோளுமுறைதலைக் கணக்கிட்டு காண்பரே- ஆவிக்கன்பனாக கிடக்க கலிசும் விளங்கப் பாரே” என்பதில் ஆவிக்கன்பனாக என்ற பதத்திற்கு TWO LIFE-FRIENDLY PLANETS என்ற பொருள்படு வதை அறியலாம். கப்லர் என்ற கபிலமுனி கண்ட கோளை, KEPLER 62 மீ என்றும் ரிணிறிலிணிஸி 62 E எனவும் விஞ்ஞானிகள் குறிக்கின்றனர். கலிசு என்ற சித்தரின் பெயராலேயே நிலிமிணிஷிணி என்ற நான்கு வேறு,வேறு கோள்களை விஞ்ஞானிகள் கண்டு இவையாவும் பூமியை ஒத்து இருக்கின்றன என பேசுகின்றனர். 

••• ஒளவையார், தனது பாடலில் “...தானமும் தவமும் தாம் செய்வராயின் வானவர் நாடு வழி திறந்துவிடுமே” என்று பேசுவதில் இருந்து வானவர்கள் அண்டத்தில் தமக்கு என்று ஒரு நாட்டை அல்லது கோளை வைத்துள்ளனர் என்பது தெளி வாகிறது. ஆவி உலகம் என்பதைப் பற்றியும் நமது சாத்திரங்கள் பேசுகின்றன. ஆக, வான்வெளியில் பற்பல கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தெளிவாகின்றது.

மீண்டும் சித்தர்கள் ஒர் அதிசயத்தைப் பேசுகின்றனர்.
“திரவமொன்றை தேடி எடுக்க அது சக்தியையுங்
காக்குமென்றறிவீரே- மூலமது முன்மாதிரி காட்ட
ஒளியை கக்காது உள்ளடக்க கண்டோமே”

என்ற அகத்தியர் பாடல் கவனிக்கத்தக்கது. 

••• விஞ் ஞானிகள் வருங்காலத்தில் ஒரு திரவம் ஒன்றைக் கண்டுபிடிப்பார்களாம். அது வர்ணமற்றது. மூல முன் மாதிரியானது. அதாவது PROTO TYPE என்பது. இதுவரை வெப்பம், வெளிச்சம், மின் சாரம் போன்றவற்றைச் சேமித்துப் பாதுகாத்து வைக்க முடியாது அன்றோ? ஆனால் இனி விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் திரவம் இது வெப்பம், குளிர், மின்சாரம், ஒளி போன்றவற்றை சேமித்து வைத்துக்கொள்ளும். எந்தவிதமான எரி பொருளும் இன்றி வேண்டும்பொழுது இதனை உபயோகித்துக் கொள்ளமுடியும் என்கின்றனர் சித்தர்கள். இந்த திரவத்தை சித்தர்கள் “பீஷ்” என்றனர். இன்று “றிலிகிஷிவிகி” என்று ஒரு மூலக்கூறுவை உற்பத்தி செய்துள்ளனர். இன்றும் வேறு கோள் களில் வாழும் மனிதர்கள் இவ்வகையிலேயே சக்தியைச் சேகரித்து வைக்கின்றனர், பயனடை கின்றனர் என்கின்றார் அகத்தியர். 

“வானோருக்கு பீசும திரவமே துணையாக, வெப்பத்தோடு வேண்டுவன உள்ளடக்குந்தன்மை கலியில் யுறைவோருணருங்காலம் வருமே. அண்டத்து உறைவோர் பூவுலகிலிருப்போருக்கு மெய் ஞானங் கற்றுத் தருங் காலமும் வருமே” 

••• என்ற வரியில் இருந்து “PLASMA” என்ற பீஷ்ம திரவத்தால் நம் சந்ததியினர் பெருத்த மேன்மை அடைவர். வானிலிருந்து வந்து நமக்கு “சத்ய போதனை” செய்பவர் இருப்பர் என்றும் தெரிகின்றது. விஞ்ஞான முன்னேற்றம் சித்தர்கள் வாக்கு எவ்வளவு அர்த்தமுடையது என்பதனை எடுத்துக் காட்டுகிறதன்றோ?

==============================================
Source Taken from : kaviyam.in ஜுன் 2013, மாத இதழ்
===============================================

••• இஃதே போல் "அறிவியலும் போகர் ஏழாயிரமும்" என்ற ஓரு பதிவை அடியெனின் இந்த வலைப்பூ இனணப்பில் காணவும் ..., ஏதேற்ச்சியாக அமைந்த பதிவு ஆனால் நம் சித்தர்களின் அறிவியலுக்கு மிக மிக இன்றியமையாத எடுத்துக்காட்டான பதிவு. .., நேரமிருப்பின் படித்துப் பாருங்கள் pulipanisithar.blogspot.in/2013/08/blog-post_21.html

No comments:

Post a Comment