••• அருணாசல சேவை , வழிபாடு , புண்ணியம் என்றால் , அதன் மகத்துவமே தனி , இத்தலத்தில் புண்ணியத்தை அர்ப்பணித்தாலும் ., இதிலும் விஷேசமான அருள் அறுவடை ஆகும்....,
••• இது தியாகத்தால் கிட்டுவதால் , இதனை அர்ப்பணிக்கத் தேவையில்லை , அர்ப்பணிக்கவும் இயலாது . , என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய்ப் பிரகாசிக்கும் தியாக தீபங்களான அவரவருக்குரிய சத்குருவை இக்கூடுதல் அருள் சென்றடையும்...,!!!
••• “எனவே , அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணனின் சன்னதியில் “போகட்டும் கிருஷ்ணனுக்கே” என்று கிரிவலப் பலன்கள் , அனைத்தையும் மனதார அர்ப்பணித்து வருதல் , உத்தம சரணாகதிக்கு உதவும் ., இப்படி வாயால் வெறுமனே சொல்லி வந்தால் மட்டும் எல்லாமே அர்ப்பணம் ஆகிடுமா என்ற கேள்வி எழும்..
••• “என்று கிருஷ்ண பரமாத்மா சன்னதியில் இவ்வாறு அர்ப்பணிக்கையில் , இனிய குழலோசை , கேட்கின்றதோ , அன்றே இறைவனிடம் அனைத்துமே அர்ப்பணம் , ஆனதாய் ஆகும் அதுவரையில் , மனதார எதையும் அர்ப்பணிக்கவில்லை , என்றே அர்த்தம் ...!!!!
---- ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜுன் 2014
========================================================
••• மேலும் , “போகட்டும் கிருஷ்ணனுக்கே” என்ற சின்னஞ்சிறு வாக்கியமானது , தொடர்ந்து ஒவ்வொரு பூஜை , வழிபாட்டுக்குப் பின்னும் சொல்லப்பட்டும் வந்தால் ,
••• பற்பல அதியற்புத ஆன்மீகக் காட்சிகள் , ஆத்ம தரிசனங்கள் , ஆன்மார்த்த விளக்கங்கள் அவரவருக்காய் எவ்வகையிலேனும் வந்துக் கிட்டிக் கொண்டே இருக்கும் ... இதனையும் வாழ்வில் பெற்று வந்து , உண்மையான ஆனந்தத்தைப் பெறலாமே ....!!!!
••• எதையுமே சற்றேனும் கடைபிடித்துப் பார்த்தால் தானே ஐயா , அதிசிறப்பான ஆத்மானுபூதி கிட்டும் .ஒன்றுமே செய்யாமல் , வெறுமனே படித்தோ ., ஈஸிசேரில் அமர்ந்து காலாட்டிக் கொண்டு வாசித்தாலோ ஒன்றுமே விளங்காது , புரிந்தது போல் இருப்பதுவும் மறந்து விடும் ..., நடைமுறையிலும் வந்து நிறையாது....!!!
••• ஆக , இவ்வாறு தன்னைத் தானே உணர்விக்கும் ஆத்ம சங்கல்ப சூக்த சூத்திரச் சிறு மந்திரமுமே “ போகட்டும் கிருஷ்ணனுக்கே “ என்ற எளிய சங்கல்ப வாக்கிய திருமந்திரப் பிரபந்தம்...!!!
••• கிருஷ்ண பரதேசிச் சித்தரின் அருணாசல சிவகிருஷ்ணப் பாசுரம்
".......கோலோகத் திரும்புதலால் கோபரிகள் மனஞ்சோரக் கண்டனர்
மாலோலன் எங்குறைவான் யாரரிவார் என்றரிய வேண்டுவர்
சாலோகந் தந்ததிரு மாலவனைத் தேடுவார் ஓடுவார்
பாலோகப் பாசுரத்துப் பரிமளிப்பு ராதைவிழிக் கருணையால்
ஈலோக பூலோக மாலோக மாமறைகள் பரணியில்
ஓலோகக் கார்த்திகமா ரோகிணீய ஒளிச்சார சிவசுதம்
ஆலோல தாமலத்து அப்புண்ய விருட்சமது அருனணயில்
ஏலேலோ “போகட்டும் கண்ணனுக்கே” என்றவழி கோருவார்.........
விட்ணு நன்னுவார்
சிவபதமாய்ச் சாருவார் "
••• ஒவ்வொரு அருணாசல கிரிவலத்தின் நிறைவிலும் , இந்த அர்ப்பண , சமர்ப்பணப் பாசுரத்தை ஓதி மலைவலப் பலாபலன்களை “போகட்டும் பரம்பொருளுக்கே “ என்று மனதாரக் கடவுளின் திருவடிகளில் அர்ப்பணிப்பது விஷேசமானது....,
--- ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஜனவரி 2013
No comments:
Post a Comment