எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, February 14, 2017

திருவாரூர் திருத்தலம்



    ஆரூரன் சந்நிதி போல்
   ஆருரன் ஆலயம் போல்

      ஆரூரன் பாதத்து
    அழகுபோல் – ஆரூர்

  மருவெடுத்த கஞ்சமலர்       வாவிபோல் நெஞ்சே ? 
        
     ஒருஇடத்தில் 
         உண்டோ உரை?                 -    சுவடிப்பாடல்


Ø  துவாதசாந்த மந்திர சிம்ஹாசனம் : யோக சாதனையில் சிரசுக்கு மேல் 12 அங்குலத்தில் தேகம் கடந்த தேகியை சிவம் ஸ்பரிசிக்கும்... ஸ்தானம்...,

Ø  நிலோத்பலம் புத்தம் பக்கம் – 27 [ திருவாரூர் ஷேத்திரம் பற்றிய முழுமையான நூல்.. book available in thiruvarur temple.]

Ø  குறிப்பு :  இது தான் மிருகி முத்திரையில் நிகழ்கிறது... ஆதலால் கையை முழுவதுமாக உயர்த்தி.. வணங்கிட வேண்டும்... அப்போது தான் பலன்..



Ø  அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரப் பாசுரம் 
எத்தகைய விதியையும் மாற்றி முக்தி அளிக்கும் தெய்வத் திருவடி பகவானின் திருவடிச் சின்னமே இறைவனின் திருக்கைச் சாற்றெனும் ஐயனின் கையெழுத்து


 சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்  பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்
 கால் பட்டழிந்தது இங்கென் தலை மேல் அயன் கை எழுத்தே
§  ---(கந்தர் அலங்காரம்)



Ø  இந்திர லோகத்தில் இருந்து பூலோகம் வரை ஸ்ரீபாதம்தாங்கி சித்தரிஷியின் பரிவாரமே சுமந்து வந்து , முதன் முதலாக ஏழு மூர்த்திகளையும் வைத்துப் பூஜித்த தலம் திரு நல்லூர் என்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியம்...!!!

Ø  இந்த உன்னத மகத்துவத்தாலும் , திருநல்லூர் தலத்தில் சிவபெருமான் அப்பர் சுவாமிகளை வரவழைத்து , இங்கேயே திருநல்லூரில் அப்பருக்குத் திருவடி தீட்சையைத் தந்தருளினார்...,

Ø  மேலும் , பூவுலகில் எத்தலத்தில் அகஸ்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கமானது கருவறையில் மூல லிங்கத்துடன் சேர்ந்து அகஸ்தியரால் முதன் முதலில் பூஜிக்கப் பெற்றதோ , அப்புண்ய தலத்தில் இருந்தே மஹாவிஷ்ணு , இந்திரன் பூஜித்த தியாகராஜ மூலமூர்த்தம் மற்றும் தேவசிற்பிகளான விஸ்வகர்மா , மயனால் உருவாக்க பெற்ற ஏனைய ஆறு தியாகராஜ மூர்த்தங்களுக்கும் .., பூலோகத்தின் முதல் பூஜை துவங்க வேண்டும்.., இந்த நியதியையும் தேவகுருவான பிருஹஸ்பதி ரிஷியும் ., ஸ்ரீபாதரிஷியும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு எடுத்துரைத்தனர்..!!

Ø  திருநல்லூரில் ஸ்ரீபாதரிஷியின் வடிவமும் ., முசுகுந்தர் பூசித்த லிங்கமும் உள்ளன ., இவ்வாறாய் திருநல்லம் தலத்தில் தான் சப்தவிடத் தலங்களாகிய ஏழு தலங்களிலும் உள்ள தியாகராஜ மூர்த்திகள் முதன் முதலில் இப்பூவுலகிற்கு வந்து பிறகு எல்லா தலங்களுக்கும் சென்றனர்...

 மேலும் முழு திவ்ய விளக்கங்களுக்கு ,ஜூன் 2016 ஸ்ரீஅகஸ்திய விஜயம்..!!!

அத்தனை பிறவிகளையும் தீர்த்தருளும்
அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்
சற்குரு வேங்கடராம சுவாமிகள் அருளிச் செய்த –
அங்காளி அந்தாதி பாசுரம் – 90

பாத நினைவே எனக்கென்றும் வேண்டும் வேறெது நினைவும்
காத தூரம் ஓடிட வேண்டும் நின் நினைவு என்றும்
சேதமுறாது செம்மலர்ப் பாத நின் நினைவே வேண்டும்
நின் பாதமே என் பல பிறவி அழிக்க வந்ததே!
                                                        -அங்காளி அந்தாதி

No comments:

Post a Comment