எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, April 24, 2017

திருஅண்ணாமலை சித்தர்கள் - 1

••• மிகவும் பிரபலமான ஜீவ நாடி திரு.ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தியில் தொடராய் எழுதிய “அருள் தரும் திருஅண்ணாமலை சித்தர்கள்” பற்றி…சென்ற வருடம் பெங்களுருவில் நடந்த தஞ்சை ஜீவ அருள் நாடி சத்சங்க பொது வாக்குரையில் ஒரு அன்பர்.. கீழ் காணும் மாறு கேட்ட கேள்வியும் ..அதற்க்கு அகத்தியம் பெருமான் கூறிய பதிலும்..

==========================================================

••• அடியார் கேள்வி : தங்கள் அருளாசியால் 35 (திருவண்ணாமலை) சித்தர்களின் வரலாறு, விளையாடல்களை வெளியிட மட்டுமே அருள் செய்தீர்கள். மீதியுள்ளவற்றையும்  வெளியிட தங்களின் ஆசி வேண்டும்
.••• அகத்தியெம் பெருமான் : இறைவன் கருணையாலே இறைவன் அருளாணையிட மீண்டும் ஏனைய மகான்களின் விளையாடல்கள், இறையோடு தொடர்புடைய,

••• அஃதொப்ப திருகிரி தொடர்புடைய நிகழ்வுகள், மனிதர்களுக்கு, தேவைப்படும் மனிதர்களுக்கு, நம்பக்கூடிய மனிதர்களுக்கு இந்த வெளி உலகத்தில் தெரிய வருமப்பா.
================================================================
•••அனனத்து மகான்களும் , சித்தர்களும் கூறுவது : நம்பிக்கை

..••• திருஅண்ணாமலை சித்தர்கள் பற்றிய தொகுப்பு இவ் வலைப்பூவில்http://annamalaisiththarkal.blogspot.in கால் பாகம் வந்துள்ளது.. வேறு வலைத்தளத்தில் எங்கும் காணக்கிடக்கவில்லை...
••• தொடர்பதிவாக இங்கு அளிக்கிறேன்...
••• நம்புகின்ற அடியார்கள் மட்டும் படித்தால் அது மதி..., வீண் விவாதம் செய்தல் வேண்டாம்....,


பதினெண் சித்தர்கள் நித்தம் பூஜை செய்யும் எல்லாம் வல்ல கனி கணபதிக்கு முதல் வணக்கம்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

No comments:

Post a Comment