எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, May 23, 2017

போகர் ஜெயந்தி

சிஷ்ய பீடங்களின் தலைமைப் பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ போகர் 
சித்த மஹா பேரண்ட பிரபஞ்ச சற்குரு!

தானென்ற வாதியிலே நந்தியானேன்
தவஞ்செய்து சித்தனயன் மாலுமானேன்
வேனென்ற சுப்பிரமணிய ரூபமானேன்
விண்ணவர் சேனாபதி யிந்திரனுமானேன்
நானென்ற கிருஷ்ணவடி வாகிநின்றே
நபிரூப மாயுலக மெங்குமானேன்
வானென்ற பராபரமாய் நின்றுகொண்டேன்
மாநிலத்திற் போகரென்று வாழ்ந்திட்டேனே .
--- போகர் ஜெனனசாகரம்
------------------------------------------------------------

கண்ணான கண்மணியே போகநாதா 
கைலாச ரிஷிகள்முதல் மெச்சும்பாலா
விண்ணுலகில் நவகோடி ரிஷிகள்தம்மில் 
விருப்பமுடன் தேர்ந்தெடுத்த வினோதபாலா 
தண்ணா சுடர்மணியே சூட்சாசூட்சம்
தாரிணியில் கற்றறிந்த லோகநாதா...
வண்ணமுடன் மேதினியில் கீர்த்திபெற்ற 
வைராக்கியம் போகரென்று மதித்திட்டாரே
...........  .....
போகரென்று சொல்லவென்றால் லோகந்தன்னில்
பொங்கமுடன் கண்டவர்கள் தானடுங்க
யோகமுடன் திக்கெல்லாம் திரண்டுமல்லோ
எந்தனையுங் காணுதற்கு வெகுஜனங்கள்
சாங்கமுடன் கண்டல்லோ யடியேனுக்கு
சட்டமுடன் சோடசோபசாரஞ்செய்து
வேகமுடன் நிதியெடுக்க எந்தனைத்தான் ....
மேதினியில் அழைத்தவர்கள் கோடியாமே ..~`* மூட்டினேன் நூற்றியெட்டுச் சதுர்யுகந்தான் முடிவாக திருஷ்டிசெய்து இருந்தேன் காணே...!

2 comments: