எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, July 31, 2018

மூலிகைகளும் அதன் சத்துக்களும்..

1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்

12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கால்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய் – அயோடின்.
35. நுணா – தாமிரச்சத்து

அடிக்கடி மலம் கழிதலுக்கு மூலிகை மருத்துவம்-!!!!
உணவு உண்டவுடன், மலம் கழிவதை குணப்படுத்த....
* கறிவேப்பிலை- 100 கிராம்
* நுணா இலை( மஞ்சனத்தி இலை)- 100 கிராம்
* வேப்பிலை- 100 கிராம்
இம்மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை,
மலை நெல்லிக்காய் அளவு எடுத்து,
வெறும் வயிற்றில்,
காலை வேளையில்,
மோர் அல்லது தயிரில் கலந்து,
மூன்று நாள் அருந்த,
உணவு உண்டவுடன் மலம் கழியும் கழிச்சல் அடியோடு நின்று போகும்.

முதுமையை விரட்டும் ஒரு இனிய மருந்து !!!
தேவை:
– 10 பூண்டு பற்கள்
– 10 எலுமிச்சை பழச்சாறு
– 1 கிலோ ஆர்கானிக் தேன்
செய்முறை:
பூண்டை பொடியாக நறுக்கி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறுடன் நன்றாக கலக்கவும். இதை ஒரு சுத்தமான கண்ணாடி ஜாடியில் மாற்றி 8-10 நாட்கள் ஊறவிடவும். நன்றாக ஊறியவுடன் தினமும் 1 டீஸ்பூன் வீதம் காலை வெறும் வயிற்றிலும், மாலை உணவுக்கு முன்பும் சாப்பிடவும்.திபேத்தியர்களின் இந்த ரகசிய கலவை நீண்ட ஆயுளுக்கும், முதுமை அடைவதை தாமதப்படுத்தவும் உதவும் ஒரு அற்புத மருந்து.

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்:-

அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை
அதிகரிக்கும்

வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு
சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய் சாறு - அழகு தரும் மருந்து.

துளசி சாறு - சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது.

அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.

கடுக்காய் சாறு - முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு
நல்லது

கல்யாண முருங்கை சாறு - உடல் எடை குறைக்க உதவும். இதை
வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக
மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

தூதுவளை சாறு - சளி தொல்லை நீங்கும்

ஆடாதோடா சாறு - ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வைக்கு நல்லது,
முடி வளர்ச்சிக்கு நல்லது.



No comments:

Post a Comment