இதுவரை : அசுரர்களால்
பாதாள லோகத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட மச்சமுனிவர் வண்டாக மாறி தப்பி வந்தார்.
இனி :- 10. இளமை தரும்
மூலிகை
‘மச்சமுனி இங்கே வா.....‘
என்று கோரக்கர் குரல் கொடுத்த உடனே, சுக்ராச்சாரியின் ஜடா முடியில் இருந்து
குதித்து வந்த மச்சமுனியைக் கண்டு அங்குள்ள அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
திகைத்துப்போன
சுககிராச்சாரியார்., இனிமேல் இந்தக் கூட்டத்தில் இருப்பது நல்லதில்லை என்று
உணர்ந்தா. தனது ‘துறவி’‘ வேடத்தைக் கலைத்தார். அடுத்த விநாடியே யார் கண்ணிலும்
படாமல் சட்டென்று மறைந்து போனார்.
தங்களது தலைவனே பயந்து மறைந்து போனதைக் கண்ட போலி ரிஷிகள்
வேடத்தில் இருந்த மற்ற அரக்கர்களும், ஒருவர் பின் ஒருவராக காணாமல் போனார்கள்.!
அருணாச்சலேஸ்வரர்
இதைக்கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார்., பிறகு கோரக்கர் பக்கம் திரும்பினார்.
“மச்சமுனியைக் கண்டு
பிடித்துக் கொடுத்த இந்த ஒரு செயலே போதும், தாங்கள் எப்பேர்ப்பட்ட சித்தர்
என்பதைக் கண்டு கொண்டேன்., இதற்காக என் மனமுவந்த பாராட்டுகள்“ என்றார்
அருணாச்சலேஸ்வரர்..
“அப்படியென்றால் எனது
மற்ற சித்துக்களை தாங்கள் பார்க்கப் போவதில்லையா?“ என்று கேள்வி எழுப்பினார்
கோரக்கர்.
“நிச்சயமாக காணப்போகிறேன்..“
“பல ஆண்டு காலமாக கடுமையாக
ஆராய்ந்து ஏகப்பட்ட உயிர்காக்கும் மூலிகை செடிகளைக் கண்டுபிடித்தேன். அவற்றுள்
நான்கு மூலிகைச் செடிகளின் மகிமையை மேலோட்டமாக நான் இங்கு காட்டப்போகிறேன் .
இதோ... இந்த செடி
இருக்கிறதே, இதுதான் மஞ்சள் பூதை வேளை மூலிகை. இன்னொன்று செங்கற்றாழை, மூன்றாவது
செந்நாயுருவி. நான்காவது அமுதவல்லிச் செடி., இந்த நான்குக்கும் நானூறு வகையான
குணங்கள் உண்டு...”“ என்று தன் கையில் வைத்திருந்த நான்கு மூலிகைச் செடிகளையும்
காண்பித்தார் கோரக்கர்.
அவற்றை பாக்கும்போது
அண்ணாமலை எங்கும் கந்தர்வ மணம் வீசியது. எல்லோருடைய கண்களும் ஆச்சரியத்தோடு அந்த
மூலிகைகளைப் பார்த்தன.,
அந்த மூலிகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்., அப்படியே பதினாறு
வயது இளைஞர்களைப் போல் சட்டென்று மாறி விட்டார்கள், அனைவருக்கும் திடீர் இன்ப
அதிர்ச்சி..,
கோரக்கர் கண்டு பிடித்தது
மூலிகையா? இல்லை மந்திரத்தால் ஏற்பட்ட மாயமா? எப்படி நடந்தது இந்த அதிசயம்? என்று
பிரம்ம தேவரே தன்னை ஒரு முறைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.,
இந்த நான்கு மூலிகைகளை வைத்துக் கொண்டு வயதானவர்களை எல்லாம்
இளைஞராக மாற்றி விடலாம் என்றால், இனி மேல் படைப்புத் தொழிலை தான் செய்ய வேண்டியது
இருக்கரதோ என்று பிரம்மா யோசிக்கவும் செய்தார்.
இன்னும் கோரக்கர் அந்த
முலிகைகளின் உள் ரகசியங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. இதைப் பார்த்தாலே
முதுமை, இளமையாகிறது .. இதை உண்டால் இன்னும் என்னென்ன நடக்குமோ? என்று எல்லோரும்
ஆச்சரியப்பட்டு யோசிக்கும்போது கோரக்கரே வாய் திறந்தார்..
“பிரம்மதேவரே.. தாங்கள் பயப்பட வேண்டாம் . ஒரு
போதும் யாம், தங்கள் படைப்புத் தொழிலை மாற்றவோ, உள்ளே புகவோ மாட்டோம். மூலிகையைக்
கொண்டு மனித சமுதாயத்திற்கு ஏதேனும் சில நல்ல காரியங்களைச் செய்யலாமே என்று
எண்ணினேன். அவ்வளவுதான்!
இப்போது வயதான ரிஷிகள், முனிவர்கள் எல்லோரும்
பதினாறு வயது இளைஞர்களாக மாறியது அமுதவல்லிச் செடியின் நறுமணத்தை வைத்துத்தான்..
இந்த காட்சி ஒரு நாழிகைக்குத்தான் நீடிக்கும். அதற்குப் பிறகு மீண்டும் இவர்கள்
பழையபடி முதியவர்களாக மாறி விடுவார்கள்....“ என்றார் கோரக்கர்.
“அமுதவல்லிச் செடிக்கே
இத்தனை சக்தியா ?“
“ஆமாம்! இந்த செடியின் சாற்றைப் பிழிந்து,
அதில் செந்தூரம் கலந்து, கூடவே பூமிக்கடியில் தோன்றும் பாதரசத்தில் கடுகளவு
எடுத்து, வேம்பு மரப்பொந்தில் 48 நாட்கள் அடைகாத்து, பசுஞ்சாணியின் துணையோடு
கையில் எடுத்து, ஓர் பவுர்ணமி அன்று பவுர்ணமி உதிக்கும்பொழுது கிழக்குப் பக்கம்
அமர்ந்து உண்டால் ஆயுட்காலம் மேலும் நீடிக்கும், இதில் எல்லாவித சூட்சுமங்களையும்
நால் சொல்லவில்லை. ஒன்றிரண்டைத் தான் லேசாக மேலெழுந்த வாரியாகச் சொல்லி
இருக்கிறேன் ..“ என்று பொடி வைத்துப் பேசினார்.
‘இன்னும் அமுதவல்லிச்
செடியில் சூட்சும ரகசியம் இருக்கிறதா? என்று அங்கிருந்தவர்கள் வாயைப் பிளந்த போது,
கோரக்கர் மஞ்சள் பூதவேளை மூலிகையை மட்டும் கையில் எடுத்துக் காட்டினார்.
அந்த மூலிகையின் நிழல் பட்ட இடமெல்லாம் மஞ்சள் நிறமாக மாறியது.
அதோடு மட்டுமின்றி, அந்த இடம் ஒரு நாழிகை வரை மஞ்சள் தகடாக பொன்னிறத்தில்
மின்னியது.
திடீரென்று பூமி
பொன்னிறமாக மாறியைதக் கண்ட அங்கிருந்த பிற சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள்
ஆகியோர், கோரக்கர் ஏதோ ரசவாதம் செய்து, பூமியை தங்கமாக மாற்றி விட்டார் என்று
எண்ணி, அதைப் பார்க்க ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடினர்.
தங்கம் என்று ஓடிய எல்லோரும்,., அந்த பொன்னிற பூமியைத் தடவி
விட்டு, அது தங்கமல்ல என்று தெரிந்த பிறகு மெதுவாக பின்னோக்கி நகர்ந்தார்கள்.
அப்போது –
“இங்கே உள்ள அனைவரும் ஞானத்தை
அடைந்தவர்கள்., பொறுமையோடு தங்கள் இருப்பிடத்தில் சென்று அமருங்கள்“ என்றார்
அகத்தியர்.
“அகத்தியரே! தாங்கள்
சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் சித்தர்கள் எதற்காக ‘ரசவாதம்’‘ செய்து
மூலிகையைக் கொண்டு தங்கத்தை உண்டாக்குகிறார்கள்? அவர்களும் ஞானத்தைப் பெற்றவர்கள்
தானே.. ?“ என்று ஒரு முனிவர் நேரடியாக அகத்தியரிடம் கேட்டார்.
“எங்களுக்கெல்லாம்
தங்கத்தின் மீது ஆசையில்லை. கோரக்கர் காட்டிய அந்த அதிசய பூமி எப்படி தங்கம் போல்
ஜொலிக்கிறது என்பதைப் பார்க்கத்தான் போனோமே தவிர, ஆசையோடு அல்ல’‘ என்று துர்வாசர்
சற்று கோபத்தோடே சொன்னார்.
“சரி.....சரி... நமக்குள் விவாதம் வேண்டாம்....
கோரக்கரே இதற்கு நல்ல விளக்கம் சொல்வார்....“ என்று போகர்., துர்வாசரை
சமாதானப்படுத்தினார்.
எல்லோரும் அவரவர்
இருப்பிடத்தை அடைந்ததும் கோரக்கர் அந்த மஞ்சள் பூதைவேளை மூலிகையைப் பற்றி
மேலோட்டமாக விளக்க ஆரம்பித்தார்.
“இது என்னுடைய புதிய கண்டுபிடிப்பு, மனித குலம்
நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பல நூற்றாண்டுகளாகப் போராடி
ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தேன். ‘ரத்தம்’‘ எங்கு இருக்கிறதோ அங்கு நோயும்
உண்டாகும். இனி, இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் விஞ்ஞான ரீதியாக
கண்டுபிடிக்கலாம்.
ஆனால், எந்த மனிதனும்,
எந்த விஞ்ஞானியும் தனியாக “ரத்தத்தை“ உற்பத்தி செய்ய முடியாது. அந்த ரத்தம் நன்றாக
இருக்கும் வரையில் நோய் நொடிகளை வரவிடாது.
ஆனால்....
காலம் போக போக ரத்தம் கெட்டுப்
போகும். அப்படி ரத்தம் கெட்டுப் போனால் உடல் ஆரோக்கியம் கெடும். ஆரோக்கியம் கெட்டால்
ஆயுள் பலம் குறையும். இதைத் தடுக்கத்தான் இந்த மஞ்சள் பூதை வேளை மூலிகையைக்
கண்டுபிடித்தேன்.. இதன் சாற்றை எடுத்து ஒரு குடுவைக்குள் காற்று புகாமல் இறுக்க மூடி,
மூன்று நாட்கள் பூமியில் உள்ள ‘சகதி‘ மண்ணுக்குள் புதைத்து, பின்பு இந்த சாற்றை
உடலில் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று பூசிக்கொண்டால் போதும்.
ரத்தம் கெட்டுப் போகாது,
கெட்டியாகப் போகாது, நரம்பு மண்டலத்தில் இருந்து உடைந்து ரத்தம் வெளியில்
கொட்டினாலும் அதை இந்த மூலிகைச் சாறு காய்ந்து போக வைத்து விடும். சிறு சிறு
பூச்சிகளால், புழுக்களால், எலி, கரப்பான், போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகளுக்கும்
முற்றுப்புள்ளி வைத்துவிடும்...“ என்று
ஒரு புதிய செய்தியை அருணாச்சலேஸ்வரர் முன்பு சமர்பித்துக் காட்டினார் கோரக்கர். ,
“அதுசரி.... ஒரு
செவ்வாய்க்கிழமை அன்று சொன்னீர்களே.... அது எப்போது என்று சொல்லவில்லையே...?“
என்றார் ஒரு முனிவர்.
“இன்னும் கலியுகம் ஆரம்பிக்கவில்லை. மனிதர்களில்
சிலர் விண்ணுலக ஆராய்ச்சி செய்வார்கள். விண்ணில் உலா வரும் சூரியனை முதன்மையாகக்
கொண்டு அதைப் பகலவன் தினம் என்றும்,
சந்திரனை வைத்து திங்கள் அல்லது மதிநாள் என்றும் கண்க்கிடுவர். இதற்கு
மூன்றாம் நாள் அன்று மங்களத்தோன் தினம் என்று பிற்காலத்தில் வழங்கப்படும். இந்த
மங்களத்தோன் நாளைத்தான் அடியேன் செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிட்டேன்“ என்று
கோரக்கர் விளக்கம் கொடுத்தார்.
பிற்காலத்தில்
என்னவெல்லாம் பூமியில் நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்த கோரக்கரின் ஆற்றலைப்
பற்றி அருணாச்சலேஸ்வரர் அறிந்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது.. –
ஒரு பிரம்மாண்டமான கழுகு ஒன்று திடீரென்று அந்த
மலை உச்சியில் தோன்றியது. இது எப்படி இங்கு வந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ளும்
முன்னரே, சட்டென்று அது கோரக்கரை தன் கால்களால் கவ்விக் கொண்டு ஆகாயத்தை நோக்கி
படுவேகமாகப் பறந்தது.
சற்று முன்னர் மச்சமுனியைக் காப்பாற்றி
ஆச்சரியப்பட்ட கோரக்கரை, மிகப்பெரிய கழுகு கால்களால் தூக்கிக் கொண்டு, சட்டென்று
பறந்ததைக் கண்டு அண்ணாமலையே அதிர்ந்தது..
அகத்தியர், அருணாச்சலேஸ்வரரை, நோக்கி
பதற்றத்தோடு சென்றபோது , அவர் அகத்தியரை தட்டிக்கொடுத்து புன்னகையோடு,
“பொறுமையாக
ஆகாயத்தைப் பார் ...”“ என்றார்,!
-
சித்தர்கள்
வருவார்கள்.!
ரகசியம் ரகசியம் ரகசியம்
ReplyDelete