எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, July 8, 2026

Ramanujar-5

ஏழு மலைகளின் பெயர்கள்:

சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி

ஏழுமலையான் ஏழு பெயர்கள்:

சீனிவாசன், வெங்கடாசலபதி, பாலாஜி, கோவிந்தன், மலையப்பர், ஸ்ரீநிவாசன்,

திருவேங்கடமுடையான்!

ஏழு தீர்த்தங்கள்: குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி வராஹ புஷ்கரணி!

நம் முன்னோர்களான வேதகால ரிஷிகளும், தமிழ்நாட்டுச் சித்தர்கள், அகஸ்தியர் போன்றவர்களும் இவர் யார், சிவனா, விஷ்ணுவா, சக்தியா, முருகக் கடவுளா என்று தெரியாமல் வியந்திருக்கிறார்கள்.

தாளப்பாக்கம் அன்னமய்யா, இவர் பேரில் 32,000 பாடல்களைப் பாடினார். அப்பேர்ப்பட்ட அவருக்கே திருவேங்கடமுடையான் யார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

எச்.எம்-.வி. கேசட் நிறுவனத்தார் 'பாலாஜி பஞ்சரத்னம்' என்ற கேஸட் வெளியிட்டார்கள் முதன்முதலாக எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தாளப்பாக்கம் அன்னமய்யா பாடல்களை அதில் பாடினார்கள். அதில் ஒன்றான 'எந்த மாத்ரமு' பாடலின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த அளவுக்கு யார் உன்னை நினைத்தால் அந்த அளவுக்கு மட்டும்தான் நீ

உள்ளுக்குள்ளே எண்ணிப் பார்த்தால் மாவுக்குத் தகுந்த அப்பளம் இருக்கும்!

வைஷ்ணவர்கள் உன்னை அன்புடன் விஷ்ணுவாக நினைப்பார்கள்;

வேதாந்திகள் உன்னைப் பரப்பிரம்மமாகச் சொல்லுவார்கள்;

சைவர்கள் சிவனென்று நினைப்பர்,

ஆதி பைரவர் என்று காபாலிகர்கள் அடித்துச் சொல்வார்கள்;

சாக்தர்கள் நீ சக்தி ரூபம் என்று நினைப்பார்கள்

தர்சனமார்க்கத்தில் வந்தவர்கள் அவர்கள் எண்ணப்படி துதிப்பார்கள்

இதே மாதிரிதான் திருவையாறு தியாகய்யர், பூர்விகல்யாணி ராகத்தில் 'நீ யார்? சிவனா, விஷ்ணுவா, சக்தியா – யாரென்று தெரியவில்லையே' என்று திருவேங்கடமுடையானைத் தரிசனம் செய்தபிறகு பாடி இருக்கிறார். ஆகவே மற்ற தெய்வங்கள் மாதிரி இவருக்குத் தனிப்பெயர் கிடையாது.

சிவன், விஷ்ணு அம்சங்கள் தவிர, திருவேங்கடமுடையானின் திருமேனியில் அம்பாள் அம்சங்களும் உள்ளன. சிம்ம வலாடம், யோக முத்திரை, போக முத்திரை, வரத முத்திரை, கட்டிய விலம்பித முத்திரைகள், பாதத்தில் மெட்டி, கொலு-சு, தண்டை ஆகியவையெல்லாம் இருக்கின்றன. இவை யாவும் ஸ்ரீ அலர்மேல் மங்கையின் அடையாளங்கள். கட்டிய விலம்பித ஹஸ்தம் அம்பாளுக்கே உரியது. விஷ்ணுவு-க்கு கிடையாது. காஞ்சி காமாட்சி, திருவிடை மருதூர் மூகாம்பிகை, கன்னியாகுமரி பகவதி அம்மன், திருவையாறு தர்மசம்வர்தினி, மயிலாடுதுறை மூகாம்பிகை ஆகிய தெய்வச் சிலைகளில் கட்டிய விலம்பித ஹஸ்த முத்திரையைக் காணலாம். கேரளாவின், பாரதபுழா ஆற்றின் கரையில் உள்ள பகவதி அம்மன் சிலை அப்படியே திருவேங்கடமுடையான் மாதிரி தோற்றமளிக்கிறது.

திருவேங்கடமுடையானின் திருமேனியிலுள்ள இந்தப் பெண் அம்சங்களை யாரும் மறுக்க முடியாது. மறைக்க முடியாது. நம் கண்களால் பார்க்கலாம். தவிர சில பூஜைகளும் அம்பாள் கோயில் பூஜை முறைகளை ஒத்திருக்கிறது. திருவேங்கடமுடையானுக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம். வஸ்திரம் 21 முழம் புடவை, மஞ்சள் அபிஷேகம், நவராத்திரியில் பிரும்மோற்சவம் முதலியன நடத்தப்படுகின்றன. பிரதி வெள்ளிக்கிழமைகளில் வில்வம் அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது மார்கழி மாத அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.




pdf credit : gopalavallidasar

text credit :- https://isatsang.blogspot.com/

No comments:

Post a Comment