திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் அஷ்டாக்ஷர மந்திரம் கற்க வேண்டி, ராமானுஜர் சென்றார். நம்பிகளைச் சந்தித்து தன் இஷ்ட பூர்வத்தைத் தெரிவித்தார். நம்பிகள், பிறகு பார்க்கலாம் என்று ராமானுஜரை திருப்பி அனுப்பிவிட்டார். இதுபோல் 18 முறை சொல்லி, ராமானுஜரின் பொறுமையையும் உறுதியையும் சோதித்தார் நம்பிகள். ராமானுஜரும் அசராமல் திரும்பத் திரும்ப வந்து நம்பிகளைச் சந்தித்து ரஹஸ் யார்த்தத்தை கேட்டறிய விரும்பினார். இறுதியில், ராமானுஜருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டு, இந்த ரஹஸ்ய மந்திரத்தை எவருக்கும் கூறலாகாது என்றார் நம்பிகள்.
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! |அகமர்ஷணம்.! *சிவ~சக்தியே *அர்த்தநாரியே*`ஹரி~ஹரமே *சங்கர~(சத்ய)~நாராயணம்* |*சர்வமும் சிவமயம் சகலமும் சிவனருள் | மனம் ஓடி..! ஓடி..! ஓடி..!! அலைந்து திரிந்து ., இறுதியில் அறிவோடு ஒடுங்கி ., ஞானத்தை தேடிய..,இந்த பிண்டம் அண்டத்தில் விழுந்து , காலத்தை கடந்து , சம(ஆதி)யில் நிற்க, ஜோதியில் கலக்க, பற்றில் பற்றா...பாசத்தில் வழுக்கா...,காமத்தில் கரையா...கர்மத்தில் கலக்கா.. மாயையில் மயங்கா.... *ஜடாமுடிவாகி* ஆத்மாலயமாக பயணிக்கிறது.!
எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!
நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!
*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!
No comments:
Post a Comment