எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, July 30, 2013

அடிப்படை ஆன்மிகம் - 1

முன்னுரையும் ,  முடிவுரையும் இல்லா  - பொருளுரை  !!!!!!!!!

     ஏகம் ஏன்? அனேகமானது  . அதாவது இறை என்னும் ஏகப் பரம்பொருளாகிய பரமாத்மாவில் இருந்து ஏன்? ஜீவாத்மா வந்தது .., வந்தாலும் முதலில் மாயை உயிரை ஏன்? எதற்கு? பற்றவேண்டும்  .., ஆன்மா அசுத்தம் அற்றது  ,   இவையல்லாம் ஏன் ?, எதற்கு? ,

எதனால் மனம் , அறிவு .,  ஆத்மா ., இவை இனைந்து  உடம்பில்  கலக்கிறது / ஏன் கலக்க வேண்டும் ? . உலகியலில் பரிநாமவளர்ச்சி அடைந்துகொண்டேபோகிறது .,  ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ., அறிவோடு ஒடுங்கி ஞானத்தை தேடி ., ஜோதியில் கலக்கிறது ., மீண்டும் ஜோதியில் இருந்து தெரித்து ., ஆன்மாவில் மீண்டும்   .....


தானாயிருக்கும் பிரமத்தின்
     தன்செயல் தன்னை அறிந்தாக்கால்
வானாகி நின்று மறைபொருள்
     ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ?
                                       - ஏகநாதர் 

சொல்லமுடியாது தான் .. இருந்தாலும் முயற்சிக்கிறோம், முடிந்தவரை இறையருளால் புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள் ., கந்த குரு கவசத்தில் வரும் அதி திவ்ய வாசகம் " அறிவை எல்லாம் அறியும் அவ்வறிவை கொடுத்தது யார் ? இதற்க்கு ஸ்ரீ கந்த குரு கவசத்தில் வரும்  அடுத்த வரிகள விளக்குகின்றன .., " நல்லதும் ., கேட்டதும் ., நான் என்பதும் மறக்கவேண்டும் - நான் யார் என்பதை அறிவதை விட "நான்" என்பதை மறத்தலே சிறப்பு .., எண்ணங்கள் அற்ற நிலை . இதுவே ஆன்மாவின் உச்ச நிலை ..,  இதுவே ஆன்மாவின் பரிபுரன நிலை .இதை அறிவின் துணை கொண்டு அடையவேண்டும்   இந்த எண்ணங்கள் அற்ற நிலை தான் காலம் நிதர்சனமாகும் ,.., [ இந்த காலம் பற்றி சொல்கையில் . முக்காலத்தையும் கடந்த கடக்க வல்லவர்கள் சித்தர்கள் என்பார்கள் . சக்திய உண்மைதான் . இந்த காலத்தை கடத்தல் என்பதில்  சிருஷ்டி படைப்பு பற்றிய  சிதம்பர ரகசியத்தின் திறவுகோள் ., உள்ளது .. 


சித்தம் பலத்திலச் சிதம்பர 
வித்தையைத் தேறித் தெளிந்தேதான் 
சத்தம் பிறந்திட வாசி 
அறிந்து தானும் நடந்தேன் .
            --- ஏக நாதர் 

[ ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் காலம் பற்றி குறிப்பிடுகையில் "நடந்ததே நடப்பனவாய் நடந்து கொண்டிருகின்றன " என்ற வாசகத்தை குறிபிடுவார்கள் .., இந்த வாசகத்தில் காலத்தை  பற்றி நன்கு விளங்கும் .., மேலும் காலத்தை கடத்தல் பற்றி அதிதிவ்யமாக அறிய விரும்பினால் 2002 செப்டம்பர்  மாத இதழ் அடிமை கண்ட ஆனந்தத்தை படித்து பாருங்கள்  ஆழ்ந்த  நம்பிக்கையோடு  படித்தால் .,முக்காலத்தையும் கடந்த ., கடக்கும் ., கடக்க ., வல்ல  பேரானந்த குரு குல வாச அனுபூதி .., ] 

சரி ., விசயதிற்கு வருவோம் .., "எண்ணங்கள் அற்ற நிலை" ., இதுவே ஆத்மாவின் உச்ச நிலை . மாயை பற்றாத கர்மா அற்ற நிலை  ., இதை இறைவன்  கொடுத்த அறிவை கொண்டு அடைவோம் .., இதற்கு என்ன செய்ய வேண்டும் .., "அடிப்படை ஆன்மிகம் தான் " வேறேதுவும் தேவைவில்லை . அடிப்படை ஆன்மிகம் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன்...,  படித்ததை .,கேட்டதை ,  உணர்ந்ததை ஏதோ யம் அறிவுக்கு எட்டியதை  .., நன்றி .!.

-------------------------------------------------------------------------------------------------------------------------------


அகஸ்தியரின் அறவுரைகள் !

ஒரு மனிதன் மன அழுத்தமில்லாமல் வாழ அவன்தான் பயிற்சி எடுக்கவேண்டும். ஒரு மனிதனின் ஹ்ருதயமானது நான் இந்த கூட்டுக்குள் இருக்கிறேன். எனக்கு சத்துள்ள உணவை இந்த மனிதன் இன்று கொடுக்கவில்லை. எனவே நான் இயங்க மாட்டேன் என்று கூறினால் என்னவாகும் ? ஒரு மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் போராடி, போராடி ஜீவித்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறதா ? சரியான உணவை இந்த மனிதன் தந்தாலும், தராவிட்டாலும் போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கு இருக்கிறது. சிந்தனா சக்தியில்லாமல் வெறும் இயந்திரகதியில் இயங்குகின்ற உறுப்புகளே அவ்வாறு இயங்கும்போது சிந்தனையாற்றல் கொண்ட மனிதனானவன் இதனால் நான் இதனை செய்யவில்லை. இந்த பிரச்சினை இருப்பதால் நான் இன்று பூஜை செய்யவில்லை. இந்த கஷ்டம் வந்துவிட்டதால் நான் இன்று அதிகாலை எழவில்லை. இப்படியொரு சிக்கலான சூழல் இருப்பதால் நான் இன்று ஆலயம் செல்லவில்லை. இப்படியொரு கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால் நான் தர்மம் செய்யவில்லை என்று காரண, காரியங்களை அடுக்கிக்கொண்டே செல்லாமல் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகவும் அதி விரைவாக அவன் கடமைகளை செய்வதோடு யாங்கள் காட்டுகின்ற பாதையில் செல்லவேண்டும்.

எனவே ஒரு மனிதன் எந்தவொரு நிலையிலும் தன்னுடைய குடும்பக் கடமைகளை தவறவிடக்கூடாது. ஆனால் பற்றும், பாசமும் அற்ற நிலையில் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு நாங்கள் அடிக்கடி கூறுவதுபோல மிக விலை உயர்ந்த வாகனத்தை ஒரு தனவான் வாங்கி அதை அவன் இயக்கத் தெரியாமல் இன்னொரு மனிதனை ஊதியத்திற்கு அமர்த்தி இயக்கும்பொழுது, விலையுயர்ந்த வாகனத்தை இயக்கும் பொறுப்பு மட்டும்தான் நமது. ஆனால் நம்முடைய கடமை அதோடு முடிந்துவிட்டது. இந்த வாகனத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என்ற நிலை தெரிந்தே அந்த வாகனத்தை அவன் இயக்குகிறானோ அதைப்போல் குடும்ப பொறுப்புகளையும், மற்ற பொறுப்புகளையும் ஒரு மனிதன் ஏற்றுக்கொண்டு, கடமையை ஆற்றுவது என்பது வேறு, கடமையிலேயே ஆழ்ந்து கிடப்பது என்பது வேறு. எதிர்காலம் குறித்து திட்டமிடுதல் என்பது வேறு, எதிர்காலம் குறித்து கவலைப்படுவது என்பது வேறு. கடந்த காலத்தை எண்ணி இனி சற்று விழிப்போடு இருக்கவேண்டும் என்று உணர்ந்து கொள்வது என்பது வேறு, அதிலேயே உழன்று கிடப்பது என்பது வேறு. எனவே இந்தக் கருத்துக்களை மீண்டும், மீண்டும் அசைபோடு. நன்மை உண்டு. நாழிகை பின்பு மீண்டும் வாக்கு உரைப்போம். ஆசிகள்.

1.   எனவே மனதை திடமாக, உறுதியாக, நம்பிக்கையாக, இறை பக்தியாக வைத்துக்கொண்டிட வேண்டும். அவனவன் சக்திக்குட்பட்டு தர்மகாரியங்களை செய்யலாம்.

2.   அடுத்ததாக இறைவழிபாடு, அதிலும் அதிகாலை எழுந்து செய்யவேண்டிய வழிபாடு என்ற ஒன்று இருக்கிறது. கால, தேச, வர்த்தமான சூழலால் மனிதனின் வாழ்க்கைமுறை மாறி அதிகாலை துயில் எழுதல் என்பதே மனிதனுக்கு மிகப்பெரிய பாரமாகி விட்டது. முதலிலே ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். காலம், நாழிகை, பருவம் எல்லாம் எதற்கு பொருந்தும் ? மனிதனுக்குப் பொருந்தும், மனிதன் வசிக்கின்ற இந்த பூமிக்குப் பொருந்தும். இந்தப் புவி மண்டலத்தைத் தாண்டிவிட்டால் அப்பொழுது ஏது இரவு ? ஏது பகல் ? அண்ட சராசரங்களையும் தாண்டி செல்லும்பொழுது அங்கே எல்லாம் ஒன்றுதான். இந்தப் புவியிலே இந்த வளிமண்டல அழுத்தத்திலே கீழே பார்க்கின்ற மனிதன் எவ்வாறு நீரின் அழுத்தத்திலே மீன் வாழ்கிறதோ, மற்ற நீர்வாழ் உயிர்கள் வாழ்கிறதோ, அதைப்போல் காற்று மண்டலத்தின் அழுத்தத்திலே மனிதனும், மற்ற உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அழுத்தம் மனித உடல் மீது எப்பொழுதும் ஒரே கதியில் இருப்பதில்லை. அந்த அழுத்தத்தின் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் மனித உடலை வினைக்கேற்ப பாதிக்கும். உயர்வைத் தரும்.

3.   எனவே முதலில் பக்தியை விட்டுத்தள்ளினாலும் கூட ஒரு மனிதன் வாழும்வரை தேக நலத்துடன் வாழவேண்டும். அதற்கு, இந்தப் பகுதியிலே இந்த வளிமண்டலத்திற்குள் வாழ்கின்ற உயிர்கள் அனைத்தும் சூரியன் உதிக்கும் முன்னால் துயில் களைந்தால்தான் நல்ல பலன் கிட்டும். குறிப்பாக கடைவரையில் விழி, கூர்மையாக இருக்கவேண்டும், சுலோச்சனம் போடக்கூடாது என்று எண்ணக்கூடியவர்கள் யாரும் சூரியன் விழித்த பிறகு விழிக்கக்கூடாது. ஒரு பிணி வந்துவிட்டால் போதும், உடலின் முக்கியத்துவம் மனிதனுக்குப் புரிந்துவிடுகிறது. ஆரோக்யத்தின் அவசியம் புரிந்துவிடுகிறது.

4.   எனவே ஒரு மனிதனுக்கு பக்தி, இறை நம்பிக்கை ஒருபுறமிருந்தாலும் தன்னுடைய பொன்னான உடலை பாதுகாக்கும் வண்ணம், இருக்கும் வரை உடல் தொல்லை தராமல் இருக்கவேண்டும் என்றால் மிக, மிக அதிகாலையிலே எழுந்து வழிபாடு செய்யவேண்டும் என்ற எண்ணத்திற்கு வரவேண்டும். வழிபாடு செய்யாவிட்டாலும், உடலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலாவது அதிகாலை துயில் எழ பழக வேண்டும். இதற்காக ஒரு மனிதனானவன் முன் இரவிலே விரைந்து துயில் கொள்ளப் பழகவேண்டும். ஏனென்றால் ஒரு மனிதனின் ஆரோக்யத்தில் குறுக்கிட இன்னொரு மனிதனுக்கு அதிகாரமில்லை.

5.   இந்த ஆரோக்யத்தின் அடிப்படையில்தான் யாம் ஒத்த முனிவர்கள் எல்லோரும் அதிகாலை துயில் களைதல் முக்கியம் என்று வலியுறுத்துகிறோம். அதன் பிறகு பக்தி, வழிபாடு, தியானம், யோகாசனம் எல்லாம். முதலில் எழுதல் என்பதே முக்கியம். இஃதொப்ப நிலையிலே ஒரு மனிதனானவன் எழுந்து, எழுந்து பழகிவிட்டால் அதிகாலை துயில் களைதல் என்பது எளிமையான விஷயம் ஆகிவிடும். அடுத்ததாக மன அழுத்தத்தில் மாட்டிக்கொள்கின்ற மனிதன் அதனால் சரியான துயில் இல்லாமல், உறக்கம் வராமல் இருக்கிறான். இந்த மன அழுத்தத்தை ஒரு மனிதன் எப்படி பார்க்கவேண்டும் ? என்றால் ஆனது ஆகிவிட்டது. இப்பொழுது சயனத்திலே படுத்துக்கொண்டு காலையில் என்ன நடக்குமோ?  என்று கவலைப்படுவதாலோ அல்லது இன்று அதிகாலையில் இப்படி நடந்துவிட்டதே ? என்று வருத்தப்படுவதாலோ, இரண்டையும் அவனால் மாற்றிவிடப் போவதில்லை

இப்பொழுது என்ன வேலை ? சயனம் கொள்ளவேண்டிய வேலை. விழிகளை மூடி இறைவா ! உன் அருளால் இன்றைய தினம் ஓரளவு நன்றாக சென்றுவிட்டது. நாளைய தினம் நன்றாக இருக்கவேண்டும். நான் தரை மார்க்கத்தில் வெற்றி பெறுவதற்காக உழைக்கிறேனோ இல்லையோ, இறை மார்க்கத்தில் வெற்றி பெற அன்றாடம் உழைக்க வேண்டும். அதற்கு வேண்டிய உந்து சக்தியை, உத்வேகத்தை கொடு என்று எண்ணி இறை நாமாவளியை மனதிற்குள் மெல்ல, மெல்ல சொன்னால் அந்த மன அழுத்தம், மன பாரம் குறைந்து உறக்கம் என்பது மெல்ல வரும்.

6.   எனவே இஃதொப்ப நிலையிலே ஒரு மனிதன் மன அழுத்தமில்லாமல் வாழ அவன்தான் பயிற்சி எடுக்கவேண்டும். ஒரு மனிதனின் ஹ்ருதயமானது நான் இந்த கூட்டுக்குள் இருக்கிறேன். எனக்கு சத்துள்ள உணவை இந்த மனிதன் இன்று கொடுக்கவில்லை. எனவே நான் இயங்க மாட்டேன் என்று கூறினால் என்னவாகும் ? ஒரு மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் போராடி, போராடி ஜீவித்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறதா ? சரியான உணவை இந்த மனிதன் தந்தாலும், தராவிட்டாலும் போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கு இருக்கிறது. சிந்தனா சக்தியில்லாமல் வெறும் இயந்திரகதியில் இயங்குகின்ற உறுப்புகளே அவ்வாறு இயங்கும்போது சிந்தனையாற்றல் கொண்ட மனிதனானவன் இதனால் நான் இதனை செய்யவில்லை. இந்த பிரச்சினை இருப்பதால் நான் இன்று பூஜை செய்யவில்லை. இந்த கஷ்டம் வந்துவிட்டதால் நான் இன்று அதிகாலை எழவில்லை. இப்படியொரு சிக்கலான சூழல் இருப்பதால் நான் இன்று ஆலயம் செல்லவில்லை. இப்படியொரு கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால் நான் தர்மம் செய்யவில்லை என்று காரண, காரியங்களை அடுக்கிக்கொண்டே செல்லாமல் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகவும் அதி விரைவாக அவன் கடமைகளை செய்வதோடு யாங்கள் காட்டுகின்ற பாதையில் செல்லவேண்டும்.

இஃதொப்ப கூறும்பொழுது பலருக்கும் பல்வேறுவிதமான ஐயம் ஏற்படும். ஒருவேளை அகத்தியனையோ அல்லது ஏனைய சித்தர்களையோ சதாசர்வகாலம் துதி செய்து கொண்டிருந்தாலும், இறைவனின் நாமாவளியை சொல்லி துதி செய்து கொண்டிருந்தாலும் மட்டும்தான் இறைவனோ, சித்தர்களோ ஒரு மனிதனுக்கு அருள்வார்கள் என்று. இது மிக, மிக தப்பிதமான கருத்தாகும். இறைவனையோ அல்லது எம்மையோ புகழ் பாடுவதால் மட்டும் ஒரு மனிதன் வாழ்க்கையிலே முன்னேற்றம் வந்துவிடுமா என்ன ? அப்படியல்ல. எங்கெல்லாம் நேர்மை, சத்தியம் பின்பற்றப்படுகிறதோ, தர்மம் தடையின்றி நடக்கிறதோ, எங்கெல்லாம் பெருந்தன்மை கொடிகட்டிப் பறக்கிறதோ, எங்கெல்லாம் இரக்க சுபாவம் பொங்கி எழுகிறதோ, அதுபோன்ற மனிதர்கள் எம்மைத் தேடினாலும், தேடாவிட்டாலும் யாம் அஃதொப்ப ஆத்மாக்களை இனம் கண்டு எம்மால் முடிந்த அருளாசியை செய்து கொண்டிருக்கிறோம்..!

இறைவன் அருளால், ஒரு மலர் மலர்வதை என்றாவது மனிதக் கண்ணால் உணர முடியுமா ? ஒரு மனிதனின் வளர்ச்சியை அந்தந்த கணம் ஒரு மனிதனால் உணர முடியுமா ? குழந்தை வளர்ந்திருக்கிறது என்று தெரியும். ஆனால் அந்த வளர்கின்ற தன்மையை தாய் கூட பார்க்க முடியாது. அதேபோல் தேர்வை எழுதிவிட்டு ஆசிரியரைப் பார்த்து நான் எந்தளவு மதிப்பெண் பெறுவேன் ? நான் சற்று முன்பின்னாக எழுதியிருந்தாலும் மன்னித்து உயர்ந்த மதிப்பெண்களை போடுங்கள் என்று கூறினால் அது ஏற்புடையதாக இருக்குமா ? எனவே எப்படி வளர்ந்து இருக்கிறோம் ? என்று கேட்பதைவிட, வளரவேண்டும் என்ற எண்ணம் இன்னும் உறுதியாக ஆழமாக பதிந்து நாங்கள் கூறுவதை பின்பற்றினால் போதும் கட்டாயம் வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மை.
-ஜீவ அருள் நாடி.

No comments:

Post a Comment