இதற்கு முந்தைய பதிவில் காலம் பற்றி அறிவது மிக முக்கியம் என்று குறிப்பிடிருந்தோம் ., முடித்தால் முந்தைய பதிவில் யாம் குறிப்பட்ட இதழை படித்து பின்பு .., "கலைக் கதிர் அறிவியல்" க.மணி அவர்களது "அணு , உயிர் ,அண்டம் " புத்தகத்தில் "சார்பியல் தத்துவம் " அத்தியாத்தை மெதுவாக பொறுமையாக படித்துப் பாருங்கள் ., காலம் பற்றி நன்கு விளங்கும் ..
ஏன் காலத்தை பற்றி அறிவது முக்கியமென்றால் .., காலத்தை முறையாக அறிந்து பயன்படுத்தல் தான் ஆன்மீகத்தின் முதல் படி .., பின்பு தான் ஆன்மீகத்தை பற்றிய மெய்யான மெய்ஞானம் விளங்கும் .. பயன் படுத்துகிறோமோ இல்லையோ .. ஒரு அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை உருவாகும் .., பாதை தெளிவாகும் ..,
"அணு , உயிர் ,அண்டம் " புத்தகத்தில் அத்தியாத்தில் இருந்து சில வரிகள் :-
***இப்பிரபஞ்சம் என்றோ ஒரு காலத்தில் தோன்றியதாக எண்ணுகிறோம் .அக்காலத்திற்கு முன்பு இப்பிரபஞ்சம் என்னவாக இருந்தது ? என்ற கேள்வி உடனே எழுகிறது .நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ., காலமும் இடமும் இந்தப் பிரபஞ்சத்திற்குள் தான் இருக்கிறது . ஆனால் பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை .அதே போல் பிரபஞ்சத்திற்கு வெளியே என்று ஒரு இடமும் இல்லை ., பிரபஞ்சத்திற்கு முன்போ அல்லது மறைவுக்குப் பின்னாலோ காலமும் இல்லை , இடமும் இல்லை ., பிரபஞ்சம் தோன்றிய பிறகே காலமும் ,இடமும் தோன்றியன . இந்தப் பிரபஞ்சம் வரிந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் பொழுது எதில் வரிந்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது . பதில் பிரபஞ்சத்திற்கு வெளியே இடம் எதுவும் கிடையாது .
**** வினாடிக்கு
3லட்சம் கி .மீ வேகத்தில் ஒளி செல்கிறது ! என்பதை கற்பனை கூட செய்து
பார்க்க முடியவில்லை .அப்படிப்பட்ட வேகம் கொண்டிருந்தும் ஒளியானது நம் உலகை
வந்தடைய 8 நிமிடங்கள் பிடிக்கின்றன ! .., விண் வெளியில் உள்ள தூரங்கள்
அப்படி ! வானத்தில் கோடிகணக்கான விண் மீன்கள் உள்ளன .அவற்றுள் நமக்கு மிக
மிக அருகில் உள்ள ஒரு விண்மீனாகிய ஆல்ஃபா செண்டாரி [alpha centauri ]
யிலிருந்து ஒளி புறப்பட்டு நம் கண்களை வந்தடைய 4.5 ஆண்டுகள் பிடிக்கிறது .
ஆல்ஃபா செண்டாரிக்கு அருகிலேயே இன்னொரு விண்மீனும் இருக்கிறது . அதன் ஒளி
நம்மை வந்தடைய பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன . நாம் இரவில் மேற்குறிய இரண்டு
விண்மீன்களையும் ஒரே சமயத்தில் இரண்டு ஒளிப் புள்ளிகளாகப் பார்க்கிறோம் .
ஆனால் 4.5 ஆண்டுகளுக்கு புறப்பட்ட ஒளியையும் இன்னொன்றின் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒளியையும் பார்க்கிறோம் என்று நமக்கு தெரியவில்லை
..,
மேற்கூறிய உதாரணத்தையே மாற்றிச் சொன்னால் ,அதன் வீபரீதம்
உங்களுக்கு எளிதில் புலப்படும் . ஒருவர் ஆல்ஃபா செண்டாரியிலிருந்து கொண்டு
பூமியைப் பார்ப்பாராகில் அவருக்கு 4.5 ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில்
நடந்த விஷியங்கள் தெரியும் . பக்கத்தில் இருப்பதாகத் தோன்றும்
விண்மீனிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பின்பிருந்த
பூமி தான் தெரியும் . இராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பிரதீஸ்வரர் ஆலயத்தை
கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்வதைப் பார்க்கலாம் . நல்ல கூர்மையான தொலை
நோக்கி இருந்தால் இது சாத்தியமே காலமும் - இடமும் இப்படி தளத்திற்கு தளம்
மாறி மாறி காணப்படும் .
***கால நீட்சி எதோ கற்பனைக் கணக்கினால் ஏற்படும் வீ பரீதம் என்று நினைத்து விட வேண்டாம் . பலமுறை காலநீட்சி சோதனைச் சாலைகளில் சோதிக்கப்பட்டிருக்கிறது அணுக்கருவை உடைத்து துகள்களாக்கச் செய்யும் துகள் முடுக்கிகளில் [particle accelerator ] , துகள்கள் ஒளியின் வேகத்திற்கு கிட்டே சென்று பறக்கும் போது அவற்றின் ஆயுள் அதிகமாக நீட்டிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது . நீட்டிக்கப்பட்ட ஆயுளின் அளவு ஐன்ஸ்டின் கற்றுத்தந்த கணக்கின் படியே இருந்ததும் தெரியவந்தது .,
***ஆதி காலத்தில் இந்திய ஞானிகள் கண்ட ஒரு பிரபஞ்சம் இன்று ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவத்தால் உறுதி செய்யபடிகிறது காலமும் , வெளியும் எல்லா இடங்களிலும் சமமாக இல்லை என்பது அவர்கள் கண்டது .
**** இந்த இடத்தில அனைவருக்கும் எழும் அனைத்து கேளிவிகளுக்கும் ., அதற்க்கும் மேலான பல முதிர்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளையும் . அதன்
விளக்கங்களையும் அந்த புத்தகத்தில் எளிய தமிழ் நடையில் "சார்பியல்
தத்துவம்" அத்தியாயத்தில் காண்க..!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அகஸ்தியரின் அறவுரைகள்.!
ஆதியோடு அந்தமாய் அந்தமோடு சொந்தமாய், சொந்தமற்ற
தன்மையாய், தன்மை கொண்ட
தன்மையாய், தன்மையது தரும்
நன்மையாய், நன்மை நல்கும் செழுமையாய், செழுமையோடு
உயர் பண்பதாய், பண்பதோடு உயர் நலமதாய், நலமோடு உயிருக்கு
உயிரான பலமனதாய் பலமோடு என்றென்றும் பரம்பொருளாய் எங்கும் நிறைந்ததாய், நிறைந்ததாய் ...!
அஃதே நிறைந்த தாய், நிறைந்ததாய் இருக்கின்ற அது உயர்ந்த தாய், அது உயர்ந்த
தாய் என்றும் உள்ள தாய், உள்ளதாய் பெற்றதாய் யாரும் பெறாத தாய். இஃதொப்ப
வந்ததாய் போனதாய் இருக்கின்ற உயிர்க்கூட்டம் அங்கு சென்று இருப்பதாய் இருப்பதை உணர்ந்ததாய்
இருக்குங்கால் அத்தருணமே அத்தாய் எத்தாய் ? என நிறைவதாய் புரிந்துகொள்ளும் தன்மையதாய் இருக்குந்தாய்.
எனவே கண்டதாய், காணாததாய்
இருக்கின்ற அத்தாய் அதுவே என்றும் பெற்றாய் என்று உணரக்கூடிய ஒரு தாய். இஃதொப்ப உளதாய், இலதாய் என்று ( அருண ) கிரி பாடினாலும் அது உள்ளதாய் அது நல்லதாய் அத்தாய்
பரம்பொருள் தன்னை வணங்கி போற்றி இயம்புகிறோம் சில்வாக்கு இத்தருணம். தருணமதில் நவமாய் அமர்ந்து நலமாய் வாக்கறிய வந்திருக்கும் அனைவருக்கும் நலமாய்
வாழ்வு உயர யாம் இத்தருணம் இறையருள் கொண்டு நல்லாசி வழங்குகிறோம். இஃதொப்ப பல்வேறு தருணங்களில் மாந்தர்களுக்கு பல்வேறு ஐயங்கள் எது குறித்தும்
எழுந்துகொண்டே இருக்கும். இயம்பிடுவோம் அஃதொப்ப ஒருவன் நல்லவனோ,
நல்லவன் அல்லாதவனோ அவன் மனதிலே ஒரு வினா இருந்துகொண்டே இருக்கும்.
அஃதொப்ப இஃதொப்ப நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் எங்கும் வியாபித்து
எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி ஆண்டுகொண்டிருப்பது உண்மையென்றால் அதன் தன்மை,
பராக்கிரமம் கட்டாயம் உயர்ந்ததாக இருக்கும். அப்படி
உயர்ந்ததாக இருக்கக்கூடிய அந்த பரம்பொருள் உண்மையில் உயர்ந்ததாகவும் இருக்கும்.
அப்படி உயர், உயர், உயர்
பெருமைகளை, உயர், உயர், உயர் பண்புகளையெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள அந்த பரம்பொருள் அதன் அளக்கவொட்டா
பெரும் சக்தியைக்கொண்டு படைத்திட்ட உயிர்களில் மட்டும் ஏன் இத்தனை பேதங்கள்?
இஃதோடு மட்டுமல்லாமல் இஃதொப்ப ஜீவ அருள் ஓலை மூலம் மகான்கள் வாக்கினை
கூறுகின்ற தருணம் ஜீவ அருள் ஓலை மூலம் வாக்குகளை அறிந்துகொண்டே வருகின்ற மனிதர்கள்
ஜீவ அருள் நாடியிலே சித்தர்களின் அருளாசியைப் பெற்றதாலோ அல்லது பூர்வ புண்ணியத்தாலோ
மகான்களின் கருணை மிகுந்த வாக்குகளை பெற்றுக்கொண்டே வருகிறார்கள். மகான்களும் அஃதொப்ப மனிதன் வந்தால் வாக்குகளை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனாலும் அஃதொப்ப மனிதனின் அந்தரங்கம் என்பது பல்வேறு தருணங்களில் சராசரி
மனிதராலோ ஏன்? நல்ல ஒழுக்கம் மிகுந்த மனிதராலோ ஏற்றுக்கொள்ள முடியாமல்
இருக்கிறது.
No comments:
Post a Comment