எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

அதிசியங்களை சுமந்து நிற்கும் அக்னீஸ்வரர் -1


அதிசியங்களை சுமந்து நிற்கும் அக்னீஸ்வரர் - 1

அன்பர்களே ,இரண்டு வருடங்களுக்கு முன்பு திரிசக்தி இதழில் ஒரு அக்னீஸ்வரர் ஆலயத்தை பற்றி படித்தது இங்கே பகிர்ந்து கொள்கிறேன் :- 

இதோ திரிசக்தி இதழில்யிருந்து அந்த திவ்ய (அக்னீஸ்வரர்) பூக்கிறார் அக்னி பூஷ்ப்பமாக.....,

*** “எண்ணற்ற சித்த புருஷர்கள் இங்கே வாசம் செய்வதாகவும் , குறிப்பாக - கருவூர்த் தேவரும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரும் தினமும் இங்கே வந்து பூஜிப்பதாகவும் பிரஸ்னத்தில் சொல்லப்பட்டிருக்கிறது .சித்தர்கள் வண்டு மற்றும் சர்ப்ப உருவில் உலவுவதாகவும் பிரஸ்னம் சொல்கிறது .இதை மெய்ப்பிப்பது போல் தீடீரென ஒரு நாள் ஆயிரக்கணக்கான வண்டுகள் பெரும் ஆவேசத்துடன் புறப்பட்டு வந்து இதே (கோயில்) கல்லால மரத்தில் அடங்கி இருக்கின்றன .

***லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டபோதே புத்தம் புதிது போல் பளபளப்பாக இருந்திருக்கிறது இது ஒன்றை வைத்தே . இந்த திருமேனியை சித்த புருஷ்ர்கள் வழிபட்டு வந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.

***இந்த (அக்னீஸ்வரர் )ஆலயம் வெளிப்பட்ட நிகழ்வை முதலில் பார்ப்போமா?

*** 2004-ஆம் வருடம் அக்டோபர் மாதம் தான் இந்த அக்னீஸ்வரர் வெளி உலகுக்குத் தெரிய வந்திருக்கிறார் அதற்கு முன் வரை எத்தனை நூற்றாண்டு காலத்துக்கு செடி கொடிகள் அடர்ந்த பகுதியில் வாசம் செய்து வந்திருக்கிறார் ., என்பது தெரியவில்லை . சென்னை இளைஞர்கள் இரண்டு பேர் பூண்டியில் இருக்கும் ஸ்ரீஊன்றீஸ்வரரைத் தரிசனம் செய்வதற்காக வந்தார்கள் .அங்கே தரிசனம் செய்து திரும்ப முற்படும் போது ஒரு சிறுவன் தீடிரெனத் தோன்றி “அருகே நெய்வேலியில் ஒரு காட்டுப் பகுதியில் இருக்கும் சிவனையும் தரிசனம் செய்து விட்டு போகலாமே? என்று கூறி விட்டு அவர்களின் கண் எதிரிலேயே மறைந்து விட்டான் . இளைஞர்களுக்கு அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியம் ....... (தொடரும்) 




===============================================
ஒரு வேலை வந்தது படத்தில் உள்ள சிறுவனாக இருக்குமோ…!! யாரரிவார் சிவபராபரமே உம் திருலீலையை….

No comments:

Post a Comment