***கொஞ்சம் யோசித்தால் நமக்கு இந்தப் பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி இவற்றால் வரும் பாவம் மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்கும் கூட வராது. ஒரு ஆடோ, இரண்டு ஆடோ அங்கே உயிரை இழக்கின்றன என்றால் இங்கே ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளுக்கு இம்சை ஏற்படுகிறது.
(பெரியவா உபதேசப்படி/ உத்தரவுபடி இன்றிலிருந்து பட்டு உடுத்தி (கொள்) கொல்வதில்லை …என்ற சபதம் எடுப்போம்…) ( taken from -www.perivacharanam.com)
===============================================
**** இப்படித்தான் காஞ்சிபெரியவாளின் உண்மையாக உபதேசங்கள் எல்லாத்தையும் விட்டுவிட்டார்கள் .., வெற்று ஆரவாரம் தான் எல்லா இடத்திலும் ..., இப்படியே ரமண மஹான் , வள்ளலார் இவர்கள் சொன்னது வேறு .., இப்பொழுது அவர்கள் அவர்கள் மார்கம் என்று பிதற்றிகொண்டிருப்பதோ .., வேறு ...,
***எப்படி முதலில் முறையாக உடல் சுத்தியோடு ஆலயத்தை பிரகார வலமாக வந்து பிரகாரக தெய்வங்களை வணங்கி கொடிக்கம்பத்தில் நெஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி பக்தி மெழுகால் அடங்கி ஒடுங்கி மூலஸ்தான இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது ஆகம விதி.. ஆனால் நாம் அதையா செய்கிறோம் ...,??? இப்படித்தான் மகான்களின் அடிப்படை ஓழுகத்திற்கான கருத்துகளை பிடிக்காமல் ., அவற்றை நடைமுறைபடுத்தாமல் .., மற்ற ஆரவாரங்களை ...." செய்வதால் யாது பயன் ???
===============================================
***குறிப்பு :- சித்தர்கள்.., இறைவனுக்கு பட்டு சார்த்துவதை கூட ஏற்றதல்ல என்று தான் கூறுகிறார்கள்..., அப்படியெனில்..., மனிதர் உடுத்திடில் .. முதலில் வெளியுலக சமுதாய நோக்கில் . ரசாயன கலவை ஆற்றில் .கலந்து சுகாதார கேடு ., இப்படியே தான் இயற்க்கையாக இறக்காத எந்த விலங்குகளின் தோல் வகைளை உபயோகிப்பாதலும் .., பலத்த சாபங்களே..,
சாபங்களை விடுங்கள்.. சமுதாய நோக்கிலும் தீங்குதானே ஐயா ???
***இப்படியே தான் ஆட்டை கொன்றாலும் பாவம் தான் . மாட்டை கொன்றாலும் எந்த உயிரை எந்த விஷியதிற்காக துன்புறுத்தினாலும் பாவம் பாவம் தான் .., இதனால் தான் சித்தர்கள் எந்த உயிர்வதையினால் பாவம் ,கர்மவினை என்பதை தாண்டி “இப்பூவியின் சுழ்ற்ச்சி அமைப்பு” பாதிக்கபடும்” என்று விஞ்ஞான ரீதியிலும் விளக்கம் தருகிறார்கள் .., ஆனால் அந்த அளவிறக்கு இன்னும் இந்த விஞ்ஞானம் வளரவில்லையே . என்செய்வது ???
***அசைவ உணவு உயிர் வதையை மன்னிக்க முடியாத பாவங்களின் வரிசையில் தான் சேரும்..., உண்ட வரைக்கும் உண்டான கர்ம பதிவு தண்டனைகளை அனுவித்துதான் ஆக வேண்டும் - எற்றுகொள்வது அவரவர்கள் விருப்பம் ..., விவாதம் விதண்டாவாதம் செய்வது அவரவர்கள் இஷ்டம் ..., சொல்வது கடமை அஃதே
No comments:
Post a Comment