***சுமாராக 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரமாநிலத்தில் பரிபூர்ண ஆச்சார்ய ப்ரக்நதாம்பா என்ற பொற்கொல்லர் தம்பதியர்க்கு ஒரு சிறுகிராமத்திற்கு அருகில் அடர்ந்த காட்டில் மகனாய் பிறந்தார்.அவர் பிறந்த வருடம் கி.பி.1593.உலகத்தில் மகான்கள் அவதரிக்கும் போது வானில் புதிய பிரம்மாண்டமான ஜோதியுள்ள நட்சத்திரம் தோன்றும் என்பது ஐதீகம்.அதே போல,வீரபிரம்மம் அவதரித்தபோது வானில் ஒரு பிரம்மாண்டமான ஜோதி நட்சத்திரம் தோன்றியது
***" வீரப்பிரம்மம் "முக்காலமும் உணர்ந்தவர் இவர் எழுதிய காலஞானம் உலக புகழ் பெற்றது. எதிர் காலத்தை பற்றி இவர் எழுதிய அனைத்தும் நடந்து உள்ளது.
some normal general predictions from his sayings : -
***மூன்று வயதுடைய சிறுவன் பெரியோர்களிடம் வாதம் செய்வான்.
****பசுவின் கருவில் மனிதன் பிறப்பான்;அவன் மக்கள் இடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.(எதிர்கால ஜெனட்டிக் என் ஜினியரிங்கில் இது நடக்குமோ?)
****வயிற்றுப்பிழைப்புக்கான கலைகளையே மக்கள் கற்றுக்கொள்வார்கள்.உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்கள் நாட்டியம்,கச்சேரி,பாட்டு,நிழற்படம் என்ற மோகத்தால் கெட்டுப்போவார்கள்.
****உலகம் எங்கும் ஆண்களின் எண்ணிக்கை குறையும்;ஏழு பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதம் ஏற்படும்.
****பதிவிரதைகள் அபூர்வமாக இருப்பார்கள்.
*** ஸ்ரீ வீரப்பிரம்மம் தான் 14000 ஓலைச்சுவடிகளில் நான்கு லட்சம் தத்துவங்களை எழுதியுள்ளார்.அவைகளை ஓரிடத்தில் புதைத்து வைத்துள்ளார்.அவ்விடத்தில் ஒரு புளியமரம் வளர்ந்தது. அம்மரம் இரண்டு கிளைகளாக பிரிந்து சுமார் அறுபது அடி உயரமும்,நான்கு அடி அகலமும் வளர்ந்துள்ளது.அந்த மரம் இன்றும் அவ்விடத்தில் இருக்கிறது.அதில் காய்க்கும் காய்கள் உள்ளே கருப்பாக இருக்கும்.அதை யாரும் சாப்பிடுவது இல்லை;இம்மரத்தில் பூக்கள் ஒரே நாளில் தோன்றி ஒரே நாளில் உதிர்ந்துவிடும்.இந்த சிறப்பான நிகழ்ச்சியை இன்றும் காணலாம்.
நன்றி & மேலும் விபரமறிய:ஸ்ரீவீரப்பிரம்மம் அவர்கள் இயற்றிய கால ஞான தத்துவம்,ரூ.45/- எழுதியவர் ஜெ.ராவுஜி, கிடைக்கும் இடம்:ஸ்ரீ தேவி புத்தக நிலையம்,
===============================================
for more info www.kalagnani.com : An Official Website of Kalagnani Veerabrahmendra Swami
No comments:
Post a Comment