எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, July 5, 2014

பாலியல் துன்பங்கள் ...,

••• பொதுவாய் , குழந்தைகளுக்கு , சிறுவர் , சிறுமியருக்கு தற்காலத்தில் ஏற்படும் வெளிச் சொல்ல இயலாத இன்னல்கள் , கொடுமையான பாலியில் துன்பங்கள் முற்றிலுமாய் உலகச் சமுதாயத்தை விட்டே அகன்றாக வேண்டும் ..,

••• இவைப் பற்றி செய்திதாளில் படித்து விட்டு ஒன்றுமே செய்யாது வெறுமனே மனதால் வேதனைப் படுவதை விட ., “ நமக்கென்ன வந்த்து?” என்று எண்ணி ஒதுங்குவதை விட , இதனைச் சமுதாயப் பெரு நோயாய் , பெருங்ககேடாய்க் கொண்டு முற்றிலுமாய் இதனைக் களைந்திட இத்தகைய வழிபாடுகளை ஒவ்வொரு பெற்றோரும் ஆற்றி வர வேண்டும்...,

••• நடப்பு உலகில் குழந்தை , சிறுவர் , சிறுமியர் குலத்திற்கு ஏற்படும் கொடுமையான இன்னல்களை வேறோடு களைவதற்கு – மதுரை – அரசரடியில் உள்ள மஹான் ஸ்ரீகுழந்தையானந்த சுவாமி ஜீவாலயத்தில் பாலில் தேன் கலந்து அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி வர வேண்டும்.

••• உலகெங்கும் உள்ள குழந்தைக் குலமானது தக்க காப்பு சக்திகளை அடைவதற்கு ஒவ்வொரு பெற்றோரும் தம் வாழ்க்கைக் கடமையாய் குடவாசல் அருகே காப்பனாமங்கலம் , மயிலாடுதுறை ஆடுதுறை அருகே உள்ள வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பேச்சியம்மன் மற்றும் மன்னார்குடி அருகே மதுக்கூர் பிரமையா சித்தர் ஜீவாலயத்தில் தகுந்த படையல் வழிபாடுகளை ஆற்றி வரவும்..

••• தற்கால உலகச் சமுதாயத்தில் சிறு பிள்ளைக் குலத்திற்கு இழைக்கப் பெறும் அவலமான பாலியில் துன்பங்களை அகற்றுவதற்கும் , பிள்ளைகள் நன்முறையில் உலகச் சமுதாயத்தில் பண்புடன் வளர்வதற்கும் உச்சிஷ்ட கணபதிக்கு சிதறுகாய் உடைத்தல் ,நிறைய அபிஷேக ஆராதனைகள் ,

••• சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் , ஆலயத்தில் உரலில் மாவு இடித்து மாவிளக்குப் பூஜை ஆற்றுதல் , வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் ஆற்றுதல் , பாடைக் காவடி எடுத்தல் போன்றவற்றைச் சமுதாய நலவள இறைப் பணிகளாய் ஆற்றிடவும்..
.


••• இதற்காய் பாலாம்பிகை , பாலாம்பாள் , உச்சிஷ்ட கணபதி , கருப்பண்ண சுவாமி , பேச்சியம்மன் மூர்த்திகளுக்கு விஷேமான வகையில் – பரிசுத்த நாளும் , புத்திகாரகரான புதன் கிரகத்துக்கு உரித்தான – புதன் கிழமை தோறும் வெண்ணைக் காப்பு சார்த்தி , சங்காபிஷேகப் பூஜைகளை அடிக்கடி நிகழ்த்தி திரட்டுப் பால படைத்து தானமளித்தும் வர வேண்டும்.

--- ஸ்ரீஅகஸ்திய விஜயம் பிப்ரவரி 2014 ,

=====================================

No comments:

Post a Comment