எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, July 5, 2014

(உறக்கம்) (கனவு...)

••• இயக்காமையில் இயங்கும் இயக்கத்தில் தாம் இறை ரகசியங்கள் புனலாகும்..!!!

••• நாம் இயக்காமல் நம்முள் தா(மே)னே !!! இயங்கும் சுவாசம் , நாடித் துடிப்பு , இமை அசைவு.., போன்றவற்றில் தான் காலத்தை கடக்கும் கால்மார்த்தண்ட ரகசியங்கள் மிளிர்கின்றன....!!!

••• இஃதே போல் மனம் , புத்தி ,செயல் , எண்ணம் .. அனனத்தும் தனி ஒரு விந்தை இயக்கமாய் நடக்கும் .. நாமாய்.. இயக்காமல்.. இயங்கும் தானியங்கியாய் நிகழ்கின்ற (உறக்கம்) (கனவு...)

===========================================================

••• ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழிலிருந்து :-

••• ஒவ்வொரு ஜீவனின் அன்றைய தூக்கத்தின் பொழுது எழ வேண்டிய கனவு என்ன என்பதை நிர்ணயிப்பதற்காகவே தனியாக ஒரு கனவு உலகமே இயங்கிவருகிறது என்றால் ., வியப்பாக இருக்கிறதல்லவா !! ஆனால் அது உண்மையே !!!

••• நம் கண்களுக்குத் தெரியக் கூடய ஸ்தூல உடலுக்குரித்தான [physical Body ] ஒன்பது விதமான வெவ்வேறு சூட்சும [ சாதாரண கண்களுக்குப் புலப்படாத ] உடல்கள் உண்டு என்பதை நாம அறிவொம் .
••• அவ்வொன்பது உடல்களுள் ஒன்றான ஸ்வரித ஸ்வப்ன அதாவது கனவுலக உடலில் நாம் சஞ்சரிக்கும், பொழுது அவ்வுடல் மூலமாக செய்யும் காரியங்களும் மற்றும் அவ்வுடலுக்கு உரித்தான சூட்சுமக் கண்களால் காணும் காட்சிகளுமே கனவுகளாகின்றன ...!!!

•••ஆகவே கனவு என்பது ஒரு சூட்சும சரீரத்தில் பிரவேசித்து , அதில் நாம் சஞ்சாரம் செய்யும் ஓர் உண்மை நிகழ்ச்சியே அன்றி இதில் எந்த விதமான கற்பனையும் இல்லை ..,

••• எவருடைய மனிதிலும் எழும் எண்ணங்களைக் கூடக் கற்பனை என்று சொல்வது தவறு ., கற்பனையும் ஒருவித சூட்சும சஞ்சாரமே என்று அறிந்திட வேண்டும் ...!!!

••• கனவுலகில் நமக்குள்ள கண்கள் வேறு , இந்தப் பூதவுடலிலுள்ள கண்கள் வேறு . கனவுலகில் உள்ள மனமும் இப்பூதவுடலுக்கான மனமும் நெருங்கிய தொடர்புடையவை ஆதலின் சில கனவுகள் நினைவிற்கு வருகின்றன ,

••• அதாவது பூலோக நிகழ்ச்சிகள் சமந்தப்பட்ட கனவுலக காரியங்கள் மட்டுமே நினைவிற்கு அனுப்பப்படுகின்றன ..,

••• நினைவிற்கு வராத எத்தனையோ ஆயிரம் நிகழ்ச்சிகள் அனைத்தும் மூளையில் உள்ள கோடிக்கணக்கான செல்களில் பதிவு செய்யப்படுகின்றன .

••• அந்தந்த நாள் , நட்சத்திரம் வளர்பிறை/தேய்பிறைக்கேற்ப கால்கட்டை விரல்களிலும் , நாபியிலும் , தலையைச் சுற்றி நெற்றிப்பட்டை போலும் , உடலைச் சுற்றி யோகப்பட்டை போலும் சிலவிதமான மூலிகைகளைக் கவசமாக அணிந்திடில்

••• கனவுகளின் நிலைமாறுவதுடன் மற்றொவருடைய கனவில் புகுந்து நற்காரியங்களை நிறைவேற்றுகின்ற வல்லமையும் கிட்டும் . இவ்வகையில் தான் யோகியர்களும் , மஹரிஷிகளும் மூலிகா பந்தன முறைப்படி பக்தர்களின் கனவில் தோன்றிப் பிராயச்சித்த முறைகளை அளிக்கின்றனர்..,

••• சயன நிலைகளை கொண்டு கனவுகளை ஆளும் முறைகளும் உண்டு . இவையெல்லாம் ஆன்மீக இரகசியங்களாகும் ..., ஏனெனில் ஒருவருடைய கனவில் பங்கேற்று சில கர்மவினைகளைக் கழிக்கும் ஆன்மீக அற்புதங்கள் பல உண்டு ...!!!!

••• கனவுகளை ஆள்வதினால் என்ன பலன்கள் ஏற்படுகின்றன ? நாம் பிறவியெடுத்தற்கான கர்மவினைகளில் பலவற்றைக் கனவுகளிலேயே கழிக்க கூடிய ஆன்மீக முறைகள் உண்டு!!

••• எவ்வாறு கனவினைப் பொய் என்று விழித்தவுடன் உணர்கின்றறோமோ அதே போல இந்த விழிப்பு நிலை வாழ்வும் ஒரு மாயையே !! இந்த விழிப்பு நிலை உண்மை என்றால் விழிப்பு நிலைச் சூழ்நிலைகள் , உறவுகள் , நேரம் , வயது அனைத்தும் கனவில் அப்படியே தொடர வேண்டுமல்லவா ???

•••இதற்கு சித்த புருஷர்கள் அளிக்கின்ற விளக்கம் என்ன ?

••• ஒருவனுடைய உண்மையான நிலையை – விழிப்பு நிலை , கனவு நிலை , இரண்டும் மாயையே – என்பதை எப்போது உணரலாம் ? இந்த தேகத்தில் உணர முடியுமா ? முடியும் !!!

1) எப்போது தூங்குகின்றோம் என்பதை அறிந்தால்
2) விழித்து எழுகின்ற அந்த கண் சிமிட்டும் நேரம் – அதாவது விழிப்பு நிலைக்கும் , கனவு நிலைக்கும் இடைப்பட்ட அந்த சிறு கால அளவு...

••• இவ்விரண்டில் எதை உணர்ந்தாலும் மாய நிலையை அறியலாம்....

••• உறங்கும் போது எல்லாருக்குமே உள்உடலும் (உள்மெய்ச் சரீரமும் ) வெளி (உலகங்களுக்குப் பூர்வ ஜன்ம வாசனைப்படி ) செல்லும் , இவ்வகையில் பிற பூமிகளில் விளையும் , அனுபவிக்கும் நிகழ்ச்சிகளே கனவுகள் ஆகின்றன , நாம் வசிக்கும் பூமிக்குள்ளும் நம் உட்டரீரப் பயணம் கனவாயும் நிகழ்வதும் உண்டு .

•••மனித வாழ்க்கையில் கிட்டத்தட்டப் பாதி காலம் உறக்கத்தில் செல்வதால் , உறங்கும் முறை , எழும் முறை , உறக்கத்தின் நிலை பற்றி அறிதலும் மனித வாழ்க்கையின் யோக இலக்கணமே ஆகும்.

•••இலக்கணம் இன்றி எம்மொழியும் சிறக்காது , யோகம் தான் மனித வாழ்வு மொழிக்கான இலக்கணம் , சுவாசம் ஓடுவதும் யோகமே ....!!!!

••• --- மேலும் ழுழு மகா திவ்ய விளக்கங்களுக்கு ஸ்ரீஅகஸ்திய விஜயம் நவம்பர்2004 ., ஜனவரி 2002 ., ஜுலை 2010 ., ஃபிப்ரவரி 1998 இதழ்களில் காண்க....,






=========================================================
••• (அடுத்த பதிவிற்க்கு முன் .., இப் பதிவின் நோக்கம் முக்கியதுவத்தை பற்றி முழுமையாக உணர அனனவரும் “INCEPTION” என்ற ஆங்கில படத்தை தமிழ் மொழிபெயர்ப்பில் பாருங்கள்...., கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் வலுக்கட்டாயமாக....)

••• உறங்கும் முன் செய்ய வேண்டிய ஆத்ம விசாரம் ராத்ரி சூக்தம் தமிழ் துதி .., மற்றும் எழுந்தவுடன் செய்ய வேண்டிய கர தரிசனம் பற்றி அடுத்த பதிவில்...,

••• உண்மையில் உண்மையான ஆன்மீகமே ஆன்மீகத்தின் ஆரம்பமே இதுதான் ..., கர்மா , மாயை , என அனனத்தையும் உணர்த்த .., உணர்விக்க வல்ல உன்னத மார்கம் ...., உணர்வார் யாரோ .. உணர்ந்து கடைபிடிப்பார் யாரோ அவர் தாமே உத்தம பாக்கியசாலிகள் ....

No comments:

Post a Comment