எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, December 3, 2014

உடலில் பதிந்திருக்கும் வேதபோதி சக்திகள்



                                                               
கூறுவேன் சடலமது என்னவென்றால்
........., !
குருபரனே எலும்பதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்கு துவாரமிட்டு
வண்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலா யி(இ)ரத்தமதை உள்ளே ஊத்தி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் ஆவிதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.!!!

...........................
சொரூபமுள்ள நூலிதுதான் அதர்வணந்தான் ,
சூட்டினேன் லோகபதி மாண்பருக்கே

        ---    அகஸ்தியர் மாந்திரிக காவியம்

••• தாமரை நூலக வெளீயிடு (thamarainoolagam.com) எனைய அனெக பதிப்பகங்களிலும் கிடைக்கிறது...., படித்துப் பாருங்கள்....,

------------------------------------------------------------------------------------------------------
ஜய தமிழ் ஆண்டின் அருணாசல தீபத்தில் உற்பவிக்கும் வேதாக்னி கலசம்

•••ஜய தமிழ் ஆண்டின் அருணாசல மஹாகார்த்திகை தீபஜோதி பிரகாசத்தில் , அகத்தியகுலச் சித்தர்களின் திருவாய்மொழிப்படி , சூக்குமமான “வேத கலசம் தோன்றுவதாம் ....!!!

••• வேதஜோதிப் பிரகாசங்களைத் தாங்கி வரும் வேதாக்னிச் செம்புக் கலசம் இது. . தற்போது உலகில் பெரிதும் மறைந்து வருவது அதர்வண வேதம்..

••• இதற்க்குச் சூத்திர விளக்கங்களை எழுதிய அதர்வணர் , கௌஷீக ரிஷிகள் , அருணாசல தீபத்தில் தோன்றும் வேதஜோதி கலசத்தை வேதமாதா ஸ்ரீமஹாகாயத்திரீ தேவி தாங்கிட , 

••• மஹாகார்த்திகை தீபத்திரு நாளில் , “வேதமதி ஜோதிகலசம் “ என்றும் போற்றப் பெறும் இந்த அக்னிக் குடத்தை பூலோக ஜீவன்கள் சார்பாய்ப் பூஜிக்கின்றார்கள் அருணாசல தீபஜோதி சக்திகள் நிரவும் .

•••இஃதோடு , வேதங்களுக்குச் சூத்திரங்களை நல்கிய வேதமதி ரிஷிகள் , யுகயுகமாய் ஓதி வரும் வேதத்துதிப் பலன்களையும் தாங்கி வரும் அருணாசல தீபத்தை தரிசித்து , வேதசக்திமிகுந்த நல்வரங்களைப் பெற்றிடவும்...!!!


 ஜய தமிழ் வருடத்தின் தீபோத்சவத்தின் ஒவ்வொரு நாளுக்குமான

•வேதவகை •வேதமஹரிஷி •வேதபீஜம் •வேதத்தீர்த்தம் •வேதக்கோலம் •வேத மந்திரம் •வேதசமித்து •வேதநூல் •வேதத்தைலம் •வேத நட்சத்திரம் •வேதபட்சி •வேதபுஷ்பம் •வேதமுலிகை •வேதவிதி •வேதநாடி •வேதப்ரசாதம் •வேதாக்னி •வேதகோத்திரம் •வேதவாசி •வேதகோஷம் •வேதவதி போன்ற இருபத்தோரு •வேத கலாந்தரங்கள்• அளிக்கப்பட்டுள்ளன ..

••• இவையாவும் அவரவர் உடலில் பதிந்திருக்கும் வேதபோதி சக்திகளைக் குறிப்பவை .இவற்றில் பலவும் வேத ரகசியமானதால் விளக்கப் பெறவில்லை ....அந்தந்த தீபோத்சவ தினத்துக்கான இருபத்தோரு வேதபோதி சக்தி விளக்கங்களையும் படித்து வருவதும் .., நித்திய வேதசக்தி , நித்திய அருணாசலப் பூஜையே தவமே ...!!!

••• ஸ்ரீஅகஸ்திய விஜயம் டிசம்பர் 2014 பிரதி விலை 30/-.. இவ்வினைப்பில் காணும் இடங்களில் ஸ்ரீஅகஸ்திய விஜய மாத இதழை பெறலாம்... !!! http://www.agasthiar.org/store.htm

No comments:

Post a Comment