••• அவ்விரு கோடுகளாய் ஒங்கார பீடத்தை தாங்குபவரே அகமர்ஷண மகரிஷி.....
••• அகமர்ஷண மகரிஷியை தியானித்து விநாயகர் சுழி இடுகையில் விநாயகப் பெருமானே ஆனந்தம் கொள்கிறார்...!!!!
=========================================================
••• பிள்ளையார் சுழியிட்டபின் அடியில் இரண்டு கோடுகள் இடுகின்றோமே இவ்விரு கோடுகளும் அகமர்ஷண மகரிஷியையே குறிக்கின்றன .., !!
••• பிள்ளையாரைத் தாங்கும் பெரும் பீடாதிபதி !!!
••• அனைத்துப் பீடாதிபதிகளும் தினமும் தம் பீடத்தில் அமரும் முன் வணங்கிப் போற்றும் அகமர்ஷண பீட மகரிஷி..!!
••• அனனத்து இறைத் தத்துவங்களுக்கும் முதல் அடி எடுத்துத் தருபவராக இன்றைக்கும் அகமர்ஷண மகரிஷி விளங்குகின்றார் .,
••• கும்பமேளா , மகாமகம் போன்ற பிரசித்தி பெற்ற தீர்த்த நீராடல்களில் அகஸ்தியர் உட்பட அனனத்து சித்தர்களும் , மகரிஷிகளும் , குழுமியிருக்க ,
••• முதன் முதலாக நதிக்குள் முதல் அடி எடுத்து வைத்துப் புனித நீராடலைத் துவக்குகின்றபெரும்பாக்கியத்தை , இறையருளால் பெற்றவரே ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி ஆவார்...!!
••• இவர் முதல் அடி எடுத்து வைத்தவுடன் தான் வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரும் தொடர்வர்.
••• இறைவனுடைய திருவடியையே தம்முடைய அகத்தினுள் வைத்திருப்பவரே அகமர்ஷண மகரிஷி.. ஆதலின் அவருடைய நாமம் பழுத்த குருபாத சக்திகளைக் கொண்டதாம்...!!!!
--- ஸ்ரீஅகஸ்திய விஜயம் டிசம்பர் 2003
==========================================================
••• ரிஷிபஞ்சமி சனிக்கிழமை...!!! [30-8-2014]
••• ரிஷிவந்தியத்தில் , ரிஷிபஞ்சமி நாளில் எண்ணற்றத் தவலோக அனுபூதிகள் இன்றும் என்றுமாய் நிகழ்கின்றன ..
••• திருஅண்ணாமலை அருகில் “ரிஷிவந்தியம்” என்ற சிவத் தலம் “ரிஷிகளின் கேந்திராலயம்” என்று சித்தர்களால் போற்றப்படிகின்ற – கோடானு கோடி மஹரிஷிகளின் போக்குவரத்து நிறைந்த தலம்
••• எனில் , இதனைத் தரிப்பதே பெரும் புண்ணியத்தால் வருவதன்றோ...!!!
••• மஹரிஷிகளும் , மாமுனிகளும் பூவுலகிற்கு முழுமையாக வந்தருளும் நாளே “ரிஷி பஞ்சமித் திதி” நாளாகும்...!!!
••• இத்தலத்தில் “ரிஷி பஞ்சமி” தினத்திலும் , மாதந்தோறும் பஞ்சமித் திதியிலும் அபிஷேக , ஆராதனைகள் செய்து லிங்கத்தில் தோன்றும் அம்பிகையின் ரூபத்தை மனதில் தியானித்து வந்தால் ....
••• அத்தனைக் கோடி மாமுனிகளும் பூஜித்த “சிவத் தருணம்” தத்ருபமாக உங்களுக்குள் தோன்றி ,குடும்பத்திலும் மங்கள சக்திகளை அளிக்குமே ...!!!
- ஸ்ரீஅகஸ்திய விஜயம் செப்டம்பர் 2005 இதழிலிருந்து...!!!
============================================================
••• “குருபக்தியை வளர்க்கும்” கருவளர்சேரி “குரு (பக்தி) வளர்ச்சேரியே !!!
••• சத்குருவின் பாதையிலேயே நடக்கச் செய்யும் அருட்தலம் தான் கருவளர்ச்சேரி ...,
•••இதனால் தான் கருவளர்சேரியில் குருபாத பூஜையை நிகழ்த்துவது விசேஷமான பலன்களைத் தருவதாகும் ,,,!!!
- ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஜுலை2008
No comments:
Post a Comment