எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, December 3, 2014

(உறக்கம்)…. (கனவு)-பாகம் -- (2)

••• இரவு உறங்கச் செல்லும் முன் நித்ரா தேவி காயத்ரி துதியையும் .. ராத்திரீ சூக்தத் துதியை [படத்தை காண்க] ஓதி விட்டு....., 

••• படுக்கையில் படுத்துவிட்டு ..., ஒவ்வொருவரும் அன்றைய நிகழ்ச்சிகளை , காலையில் எழுந்தது முதல் .... தன் மனக்கண் முன் ஒவ்வொன்றாகக் கொணர்தல் வேண்டும் . 

••• அது தினசரி நிகழ்ச்சிகளாக , கடமையாக , பல் துலக்குதல் , நீராடுதல் , பேப்பர் படித்தல் போன்றவையாக இருந்தாலும் கூட , அன்றைய நிகழ்ச்சிகளை மனக்கண் முன் தத்ரூபமாக அப்படியே கொணரும் போதுதான் ,

••• அவரவர் உருவம் , மனதினுள் நன்கு புலப்படலாகும் .. இந்த சயதேவவள தரிசனப் பாங்கையே “மனக்கண்ணாடிப் படனம் “ என்பர் ...

••• ஒவ்வொருவரும் தன் உருவத்தைக் கண்ணாடி இன்றித் தன்னுள் நன்றாகப் பார்க்க வல்ல யோகசக்திகளைப் பெறவும் [இவ்] ஆத்ம விசாரம் உதவிகின்றது...,

••• ஒருவர் தன்னுடைய அன்றாட நிகழ்ச்சிகளை மனக்கண் முன் கொணரும் போது , சில நிகழ்ச்சிக்கான காரணத்தை தன்னுள்ளேயே காணத் தொடங்குவதும் ஆத்ம விசாரமே!

••• இவ்வாறு அன்றன்றைய நிகழ்ச்சிகளை அன்றே ஆராய்கையில் தாம் , இறைச் சிந்தனையே இல்லாத இயந்திரமாக , அறிவுப் பாங்காய் , இயங்காத இயந்திர கதியாக , அலைபாயும் மனத்திடன் இயங்கியதைக் கண்டு அவரவர் வியப்பர் , வருந்துவர் , திருந்த முயல்வர்...

--- ஸ்ரீஅகஸ்திய விஜயம் அக்டோபர் 2003 , பக்கம் 46
==========================================================
••• june 24 பதிவை பார்த்தால் இத் துதியும் மேலும் . இவ் ஆத்ம விசாரமும் ஏன் முக்கியம் என்பது புனலாகும்....
••• [ https://www.facebook.com/photo.php?fbid=252989164905665&set=a.139784576226125.1073741828.100005837491824&type=1 ]



or in  ••• http://pulipanisithar.blogspot.in/2014/07/blog-post_683.html
=========================================================


••• மேலும் மிகச் சமீபத்தில் சென்ற ஜுலை20 ஆம் தேதி தஞ்சை “ஜீவ அருள் நாடி” “பொது” சத்சங்கம் பெங்களுருவில் நடந்த பொழுது. அடியென் அகத்தியெம் பிரானிடம் இக் கேள்வியை தான் கேட்டோம் ...,

••• “ ஐயா! வணக்கம் உத்தம ஆன்மீக நிலைகளில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒன்பது உடல்கள் உள்ளதாக ஒரு உத்தம குருவாய் மொழியை படித்தேன் . மேதாவி மகரிஷி கூட இந்த ஒன்பது உடல்களை பற்றி கூறியுள்ளார் ...,

ஒவ்வொரு மனிதரு அவர்-ருடைய தினசரி வாழிவில் இந்த ஒன்பது உடல்களிலும் மாறி மாறி வாழ்வதாக சொல்லப்படுது . அபந்த வாழ்க்கை எனப்படும் கனவு நிலை லோகங்களில் மனிதருடைய கர்ம பரிபாலனம் நடந்துட்டு இருக்குனு சொல்றாங்க .. சில நிலைகளில் இதே பூலோகத்தில் சில உடல்கள் உலாவுவதாகவும் . அவர்ரவர்க்குரித்தா கர்மபரிபாலனப்படி சில லோகங்களில் பல உடல்கள் உலவுவதாகவும் சொல்லப்படுது... இது பற்றின விளக்கம்

••• இதற்க்கு அகத்தியெம்பிரான் அளித்த விடை....,

••• தேகம் .., தேகத்திற்க்குள் இருக்கின்ற உயிர் அல்லது ஆத்மா இது தொடர்பாக மனிதன் தாம் தாம் உணர்ந்தவற்றை அவ்வவ்பொது கூறிவிட்டு செல்கிறான் .

••• அவைகளில் அனைத்தும் உண்மை என்றோ . அல்லது அனைத்தும் பொய் என்றோ எம்மால் கூற இயலாது..., சில உண்மைகளும் உண்டு .. சில உண்மைக்கு மாறான கருத்துக்களும் உண்டு...,

••• ஏனென்றால் அந்தந்த ஆத்மா எந்த அளவுக்கு அதனை புரிந்து கொண்டதோ அதனையே பிறருக்கு போதித்திருக்கிறது...,

••• எனினும் கூட நீ கூறியது போல அந்த எண்ணிகை நவத்தை (9) தாண்டிக் கூட தேகத்தின் பரிணாமம் இருக்கிறதப்பா .

••• அவையெல்லாம் பலவிதமான சூட்சும தேகம் என்று அழைக்கப்படுகிறது... அவை ஆத்மாவின் விதவிதமான வடிவங்கள் என்று சுறுக்கமாக நீ இத்தருணம் வைத்துக் கொள் .

••• இதுகுறித்து விளக்கமாக தக்க காலத்தில் கூறுவோம்....

No comments:

Post a Comment