எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, December 11, 2014

மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்

••• இப்பாடல் இன்றைய உலகின் ஒவ்வொரு விநாடி நடைமுறை நிகழ்வுகள் அனைத்திற்க்கும் நற்காரண விளக்கத்தைப் பொழிவது...!!!

••• பல தெய்வ தரிசனங்களைப் பெற்ற மஹாகவி பாரதியார் பிரபஞ்சத்தைக் காக்கும் அதர்வண வேத மந்திரங்களின் சாரத்தை இவ்வாறு விளக்குகின்றார்..!!!

••• “யாதுமாகி நின்றாய் காளீ எங்கும் நீ நிறைந்தாய் தீது ,
நன்மை எல்லாம் உந்தன் செயல்கள் அன்றி இல்லை....”

•••  -என்ற பாசுரத்தில் பலத்த ஆன்ம சக்தியுடன் உலகம் , ஜீவன்களின் படைப்பின் சாரத்தை ரத்தினச் சுருக்கமாய் பாரதியார் பெய்கின்றார்..

••• சூக்குமப் பிரளயம் பற்றிய நுண்ணிய விளக்கங்கள் , பாரதியாரின் இந்த அதர்வண வேதசக்தி கீதத்தில் நிறைந்துள்ளன .

••• ஆனால் இந்த அதர்வண வேதசக்தி கீதத்தின் சத்தியச் சாரத்தை உண்மையாப் புரிந்து கொள்ள வல்லார் யார் ???

     ---- ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஆகஸ்ட்2013 பக்கம்46

=======================================================

••• கலயுகத்தின் மகத்தான தீர்கதரிசியும் , காளி பக்தரும் , ராஜராஜசோழன் , பாஸ்கரராயர் போன்று காளியிடம் , பகவானிடம் , பகவதியிடம் நேருக்கு நேர் பேசும் பவித்ரப் புனிதங் கொழிக்கும் ஆன்மீக ஆற்றலைக் கொண்டவருமான ,மஹாகவி பாரதியாரும் ....,

••• “யாதுமாகி நின்றாய் காளீ எங்கும் நீ நிறைந்தாய் தீது ,
நன்மை எல்லாம்உந்தன் செயல்கள் அன்றி இல்லை....”

••• என்று தெய்வீக ஐஸ்வர்யமான அத்வைதத்தை , ரத்தினச் சுருக்கமாய் உரைத்தார் ...இந்த அற்புதமான சக்தித் துதியை முழுவதுமாக எழுதி வைத்து , படித்து , மனனம் செய்து , குறைந்தபட்சம்

••• வெள்ளி தோறும் மற்றும் நவராத்திரி தினங்களில் தினமும் 108முறை ஓதுதல் , பக்தியை விருத்தி செய்யும் ,,..

•••  வாழ்வில் நல்ல தெளிவு கிட்டும் ...குழந்தைகளுக்கு சாசுவதமான தேவியின் ரட்சைக் காப்பையும் அளிக்கும்...!!!
                  
 ••• ஸ்ரீஅகஸ்திய விஜயம் செப்டம்பர் 2014

=========================================================

••• மஹாகவி பாரதியார் ,தெய்வத் தீந்தமிழில் அருமையான “சங்கல்ப மந்திரம்” ஒன்றை அளித்துள்ளார் என்பது எவ்வுளவு பேருக்குத் தெரியும் ?இதனை எல்லாப் பூஜைகளிலும் ஓதிடலாம்..

••• கிருஷ்ண தரிசனத்தைப் பெற்றுத்தான் மஹாகவி பாரதியார் , அமுதினும் இனிய “காக்கைச் சிறகினிலே ........ கண்ணம்மா போன்ற திவ்யமான பாசுரங்களையும் பாடினார் என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியம் ..

•••பாரதி எனபது கலைவாணியாம் சரஸ்வதிக்கு உரித்தான திருநாமம் அல்லவா.

••• இவ்வாறு சித்தர்களின் போற்றல் முற்றத்தில் பரிமளிப்பவர். கலைமகளின் கடாட்சத்தைப் பெற்றவர் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்.
  
 •••   ஸ்ரீஅகஸ்திய விஜயம் நவம்பர் 2014


உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம் •••

செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்:
“வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே, வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை, அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல் , இளங்கோவைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை ,வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ; ஒரு சொற்கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!!!

---மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்

No comments:

Post a Comment