••• அக்கல்லின் மீது ஏறினாலும் , அசைத்தாலும் அசையுமேயொழிய ஒரு போதும் உருளுவதில்லை அதைச் சுற்றிலும் தரையிலிருந்து பாறை அமைந்துள்ளது ....
••• கல்லின் மீது ஏறி ஈசான மூலை பார்க்க ஒரு வட்ட மரத்தினடியில் ஒரு மகான் நிட்டையில் இருப்பதையும் அருகில் ஒரு முலிகைச் செடியையும் காணலாம்....
••• போகரென்று சொல்லவென்றால் லோகந்தன்னில்
பொங்கமுடன் கண்டவர்கள் தானடுங்க
யோகமுடன் திக்கெல்லாம் திரண்டுமல்லோ
எந்தனையுங் காணுதற்கு வெகுஜனங்கள்
சாங்கமுடன் கண்டல்லோ யடியேனுக்கு
சட்டமுடன் சோடசோபசாரஞ்செய்து
வேகமுடன் நிதியெடுக்க எந்தனைத்தான்
மேதினியில் அழைத்தவர்கள் கோடியாமே ..!!!
---போகர் ஏழாயிரம் பாடல் எண் 4413
கைலாச ரிஷிகள்முதல் மெச்சும்பாலா
விண்ணுலகில் நவகோடி ரிஷிகள்தம்மில்
விருப்பமுடன் தேர்ந்தெடுத்த வினோதபாலா
தண்ணா சுடர்மணியே சூட்சாசூட்சம் தாரிணியில்
கற்றறிந்த லோகநாதா...
வண்ணமுடன் மேதினியில் கீர்த்திபெற்ற
வைராக்கியம் போகரென்று மதித்திட்டாரே
பாடல் எண் 4480..
No comments:
Post a Comment