எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, December 11, 2014

“கனிந்த கனி” = மஹாபெரியவா

••• மிகவும் வயஸான ஒரு பாட்டிக்கு, தன் வீட்டிலும் ஹோமம் செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆசை. பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி. அப்போதெல்லாம் யாராவது தங்கள் க்ருஹத்திற்கு பெரியவாளை அழைத்தால், பெரியவாளின் திருவடிகள் அவ்வீடுகளில் கட்டாயம் பதியும். இந்தப் பாட்டியும் ஹோமத்துக்கு பெரியவாளை அழைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள்.

••• பெரியவாளிடம் வேண்டிக்கொண்டதும், "அதுக்கென்ன? வரேனே" என்று சொல்லிவிட்டார்.

••• பாட்டிக்கோ பரம சந்தோஷம்! ஹோமத்துக்கு பார்த்துப் பார்த்து ஏற்பாடு பண்ணினாள். ஆயிற்று. ஹோமம் ஆரம்பித்தாகிவிட்டது.

•••"பெரியவா இன்னும் வரலியே!.." பாட்டி வாசலுக்கும் உள்ளுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்தாள். பூர்ணாஹுதியைக் கூட கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு செய்யலாம் என்று வேத ப்ராஹ்மணர்கள் சொன்னார்கள்.

•••அப்போதும் கூட பூர்ணாஹுதி குடுக்கும் வரை பெரியவா வரவேயில்லை. பாட்டிக்கு ஒரே சோகம். ஹோமப்ரஸாதம் எடுத்துக் கொண்டு பெரியவாளை தர்சனம் பண்ணச் சென்றாள்.

••• "பெரியவா ஹோமத்துக்கு வர்றதா சொன்னேள். ஆனா, வராம இருந்துட்டேளே!" தன் ஆதங்கத்தை பெரியவாளிடம் புலம்பினாள். அழகாக சிரித்துக் கொண்டே அவள்சொல்வதைக் கேட்டார்.

••• "நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!.."

••• பாட்டிக்கு ஒண்ணும் புரியவில்லை...................... வந்தாரா?

••• "என்னது? பெரியவா வந்தேளா? நேக்கு ஒண்ணும் புரியலே..."

••• "ஹோமத்தை போட்டோ எடுத்தியா?"

••• "எடுத்தா....."

••• "அதை ப்ரிண்ட் போட்டுப் பாரு"

••• பாட்டி உடனேயே போட்டோ எடுத்தவனை அதை ப்ரிண்ட் போடத் துரத்தினாள். வந்ததும் அவைகளைப் பார்த்தபோது, அதில் ஒன்று பூர்ணாஹுதி நடந்தபோது எடுக்கப்பட்ட படம்......

••• அந்த அக்னி ஜ்வாலை ஒரு ஆள் உயரத்திற்கு எழும்பி எரிகிறது.....அந்த ஜ்வாலை ஸாக்ஷாத் பெரியவா தண்டத்துடன் நிற்பது போலவே எரிந்து கொண்டிருந்தது! அந்த போட்டோ இன்றும் சேலத்தில் உள்ள ஸ்ரீ பெரியவா க்ருஹத்தில் உள்ளது.

••• "நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!.." பெரியவா சொன்னது எத்தனை சத்யம்!! பஞ்ச பூதங்களையும் படைத்தவன் எவனோ, அவனே இங்கே அக்னிஸ்வரூபமாக ப்ரத்யக்ஷமாக நிற்கிறான்!!

••• இதில் நம்முடைய பக்தியை விட, மஹான்களின் பரம கருணை, அவ்யாஜ கருணை ஒன்றினால் மட்டுமே இம்மாதிரி நடக்கும்.



===============================================
••• இந்த மேற்க்கண்ட பதிவை Chellappan Sairam.. அவர்கள்..., பற்பல மாதங்களுக்கு முன் பதிந்திருந்தார்கள்... .. பலரிடம் கேட்டிடுந்தேன்... ,

••• ஏதேற்ச்சியாக... இரு தினங்களுக்கு முன் sage of kanchi group'sல் Saraswathi Thyagarajan என்ற அன்பர் ..யாகத்தில் .. (சித்தர்களால் “கனிந்த கனி” என்றழைக்கப்படும்) மஹாபெரியவா படத்தை... பதிந்திருந்தார்..

••• அன்னாரிடம்... மேற்கூறிய *ஹோமானுபூதியில்* கனிந்த படமா இது.. என்ற உறுதி படுத்த கேட்டபொழுது அவரும்... “ஆமாம்” ..என்றார் ..,
 
••• அஃதே நீங்கள் இங்கு ஈண்டு காண்பதாம்...!!!

••• காஞ்சிகாமாட்சி அம்மாள்.. ஆலய தரிசன விதி முறை பற்றி அறிய 

•பல(த்த)• ஆன்மீக இரகசியங்களை உள்ளடக்கிய... டிசம்பர் 1993 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழின் ..,  2ஆம் பக்கம்.. பாருங்கள்.....



ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர ஹர ஹர சங்கர....!!!

No comments:

Post a Comment