எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, April 7, 2015

• சித்தர் உடல் தத்துவம் - திருமந்திரம்

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்

கெட்டேன் இம்மாயையின் கீழ்மை அவ்வாறே
••• மனைவியின் கர்ப்பத்தில் கருவை விதைத்தவனும் அறிவதில்லை .,
அதை ஏற்றுக் கொண்டவளும் அறிவதில்லை .., 
அக் கருவின் தன்மைகளை உண்ர்ந்த இறைவனும் யாருக்கும் உரைப்பதில்லை ..,
••• ஆயினும் அக்கர்ப்பத்தில் பரமேஸ்வரனும் உள்ளான் .,
•••இதை உணராமல் செய்யும் மாயையின் இழிந்த தன்மையை எவ்வாறு உரைப்பேன்…,
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொண்புற நாடிநின் றோதலு மாமே -- திருமந்திரம்

••• இன்பம் அடைய விரும்பிய இரண்டு பேர் சந்தித்துத் துன்பமயமாகிய பாசப் பினணப்பில் சிக்குண்டதால் தோன்றிய சிசு வளர்ந்தபின் தான் மேன்மை பெற விரும்பி தொன்மையிலும் தொன்மையான இறைவனை வாழ்த்தி வணங்கும்.

இன்புறு காலத்து இருவர் முன்பூறிய
துன்புற பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத் தொழிந்தனனே – திருமந்திரம் 453

•••கணவனும் மனைவியும் கலந்து இன்புறும் காலத்தில் [கருவாக உருவாகப் போகும் ] அந்தச் சீவன் முன்பு விட்டுச் சென்ற வினையை அனுபவிப்பதற்கான காலமும் ..,
••• அது எடுக்கும் பிறவியில் பக்குவம் அடைவதற்கான காலத்தையும் .,
அது பூமியில் தங்க வேண்டிய கால அளவையும் அப்பொழுதே அமைத்து விடுகிறான்..,
நூல் – சித்தர் உடல் தத்துவம் 
ஆசிரியர் : எஸ்.பி. இராமச்சந்திரன்

No comments:

Post a Comment