v
முப்பு ., குண்டலினி ,
வாசிக்கலை குறித்து பல்வேறு ஆய்வுகள் கருத்துக்கள்., குழப்பங்கள்..., பலர் தங்கள்
வாழ்க்கை முழுவதுமாக அர்ப்பணிக்கின்றனர்...,பலர் இந்த சித்தர் குழப்புகின்றார்...,
அந்த சித்தர் தெளிவாக கூறுகின்றார்.. என கருதுகின்றனர்., யாம் இதுவரை முப்பு , குண்டலினி , வாசி குறித்து இதுவரை அறிந்ததை
பகிர்ந்துள்ளேன்..., அவ்வுளவே..,
* உண்மையில் உத்தம
சற்குருவாய்க்காமல்.. தொட்டுக்காட்டாமல்.. எதனனயும் அறிவது கடினம்.., அறிந்தாலும்
குருவருளில்லாமல்... எதனையும் அனுபூதிக்க முடியாது..!!!! ஆதலால் குருவை தேடும்
முயற்ச்சியாக.. இறைவனிடம் சதாசர்வகாலமும்...., எமக்குரிய சற்குருவை
காட்டியருள்வீர்களாக இறைவா... என வேண்டுவதே உத்தம பிராத்தனை..சதாசர்வகாலமும்...,
சற்குருவிற்க்காக ஏங்குவதே உத்தம் தவம்...
*எந்த இறை அற்புதத்தையோ
.., சக்தியையோ ., சித்தியையோ..., அனுபூதிக்கும் முன்..., பரிபூரணமாக தகைமை குணம் ., தாராளமான மனம்..,
சரவஜீவராசிகளுக்காக ஜீவன்களின் நலன்களுக்காக.., பிரதிபலன் பாராது சேவை செய்யும்
மாண்பு .., பரிபூரண நம்பிக்கை... இவை அனைத்தும் அவசியம்...,, ஆதலால் தான் ஒரு
மந்திரத்தை சித்தி செய்ய இத்தனை லட்சம் மந்திர ஜபத்தில் இத்தனை பங்கு ஹோமம் ..,
இத்தனை பங்கு தானம் என விதித்துள்ளார்கள். .., மந்திர சித்தி என்பது வேறு.. மந்திர
ஜபத்தின் பலன் என்பது வேறு என்பதை அறியவும்...!!!
*முருகப்பேராளியில் ஆன்மா எளிதில் ஐக்கியமாக வல்லதாம்.!!!
ஆதலால் முப்பு ரகசியத்தில் ..... போன்ற சில தலங்களில் முருகப்பெருமான்
அருள்கின்றார்.., அவரை முறையாக வணங்கி .., கண்மூடித்தனமான இறை ,குரு நம்பிக்கை
வளர்ந்தால்.. முறையாக முப்பு ரகசியம் பற்றி அறியலாகும்..., “முப்பு ரகசியத்தை
இன்னும் எளிதாக்கி தான் சார் சரவணபவ ஜோதியாக ஆவினன்குடியில் அருளிகின்றார்”.. என்ற உத்தம் குருவாக்கியம் கிட்டியது..,
* மேலும்முப்பு
பற்றி அறிந்தால் தான் ஏதையுமே சாதிக்க முடியுமா ? ஏனெனில் அனைத்து சித்தர்கள்
பாடல்களிலும் முப்பு பற்றி பிரதானமாக வருகிறதே என அகத்தியெம்பிரானிடன் ஜீவநாடியில்
வினவியபோது.., கூட “தற்போதைய காலகட்ட சூழலில் அஃது அவசியமில்லை “ என்று
கூறினார்.,, முப்புதன்மை பற்றி ஓரளவு மெய்ய அறியவந்தாலே..., அந்த
அருள்வெளியில் நம் ஆத்மா கரைகிறது...,,
Ø
அடுத்து .. சூரியகலை ,சந்திரகலை சுவாசங்கள் / வாசிக்கலை பிராணாயமம்
* “பஞ்சபூத்தை பற்றி அகத்தியபிரான கூறும் போது ., மனிதன்
பார்க்கவேண்டிய காற்று ,அக்னி,வாயு, நீர், நிலம் இதுவல்ல .., வேறப்பா .., மனிதன்
உணர வேண்டிய பஞ்சபூதம் இதுவல்ல அதுவேரப்பா என்றார்..., “
*நம் உள் செல்லும் சுவாசம் நம் உடம்பில் எந்த இடத்தில்
சென்று முடிகிறது .,என உணர வேண்டும்...., இது தெரியாமல் யாரும் முச்சை கும்பகம்
செய்ய கூடாது...., சுவாச நிலைகளை பரிபூரணமாக உய்த்துணர்ந்து..., குரு இன்னது தான்
.., சூரியகலை , சந்திரகலை இஃதே சுழிமுனை ...! தொட்டுகாட்டும் வரை யாரும் எக்காரணம்
கொண்டும் கும்பகம் செய்ய வேண்டாம்.!!
v
“இடபிங்கலையின் எழுத்தறிவித்து....” என.., ஔவையார் கூறிகின்ற எழுத்தறிய வேண்டும்..., ஒவ்வொரு கலைக்கும்..., பஞ்சபூத சுவாசங்கள்
உண்டு..., சூரியகலையில் சுவாசம்
சென்றால்..., அது எந்த பூதத்தில் ஓடுகிறது
தெரிய வேண்டும்.., உதாரணமாக சூரியகலை ஓடும் போது.. அது அப்புபூதத்தில் செல்லிகிறதா.., அல்லது வாயு பூததி செல்கிறதா என்றரிய
வேண்டும்..., இதன்பின் அந்த்ந்த பூதசுவாசங்களை நிலை நிறுத்த வேண்டும் ..,
பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியில் முதுநிலையாகத் திகழ்வதே பிருத்வி, அக்னி முதலான பூதங்களை பிராணனில் நிலை நிறுத்துதலாகும். இந்த முதுநிலைப் பயிற்சியே தியானத்திற்கு அடிப்படையாகத் திகழ்வதால் பிராணாயாமத்தைத் தக்க சற்குரு மூலமாகப் பயின்றவர்களே தியானத்திற்குத் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்..!!!
*எல்லாவற்றையும் விட நம் உடம்பில்
உள்ள ஒவ்வொரு இடத்திலும் சூரியகலை சந்திரகலை உண்டு..., நம் உடம்பிலுள்ள ஒவ்வொரு
ரோமமும் சூரிய , சந்திர கலையில் சுவாசிக்கின்றன..!!!
*இதுவே
வாசிக்கலை..., உண்மையில் வாசிக்கலை சித்திப்பதற்க்கு அகத்தியெம்பிரான் ஜீவ
நாடியில் நீண்ட விளக்கத்தை தந்து....,
இந்த தகுதிகள்யெல்லாம் இல்லாதவரை எவனுக்கும் வாசிசித்திக்காதடா என
பெங்களூர் சத்சங்கத்தில் கூறினார்.. வலைப்பூவில் தேடி..அந்த ஒலி நாடாவை கேட்டறிக....!!
அடுத்து குண்டலினி...,
*காகபுஜண்டர் “முக்கோண நிலையிதாமே என்கிறார்” .., முதலில் முக்கோண நிலைஎது என அறிய...வேண்டும்... ஐயா...!!
பாவங்களே அற்ற நிலையில் தான்...குண்டலினி சக்தி
பூரணமாக எழும்பி அடுத்தடுத்த ஆதாரங்கள் கடந்து சகஸ்ராரத்தை அடைந்து அமுததாரனண
நிகழும்...!!!
Ø
அடுத்து வாலை .
*அனனத்து சித்தர்களும் மெச்சும் கொங்கணர்
.., அகத்தியெம்பிரான் கூட கொங்கணர் பெருமை பற்றி கூறும் போது... அந்த சிவனையே தன்
ஜடா முடிக்குள் கொணர்ந்தவனடா ., என பெருமையாக கூறுவார்.... அத்தகு பெருமைபெற்ற கொங்கணர்..., “ வாலையும்
ஐந்தாம் எழுத்துக்குள்ளே என்கிறார்”.. கொங்கணரின் வாலைக்கும்மியை
படியுங்கள்....,ஐம்பத்தொரு அட்சரமும் .., எட்டெழுத்தும் .., பேசும் எழுத்து...,
ஊமை எழுத்து என அனனத்தையும்... ஐந்ததெழுத்தாம் நமசிவாயத்தால்
அறியலாம் அடையலாம்..!!! சகலகோடி சாத்திரத்தையும் மந்திரங்களையும்... சித்தி , பக்தி , முக்தி... அனனத்தும்..
பஞ்சாட்சரத்துள் அடக்கம்...
*சாக்க்ஷோபநிசத்து என்னும் துதியை
ஓதிவந்தால்.. பகலிலேயே நட்சத்திரங்களை
பார்க்கும் அளவுக்கு கண் பார்வை பெருகும் என்று கூறுகிறார்கள் ஐயா.. [சாக்க்ஷோபநிசத்து
ஓதிய பின் தானே விஷ்ணுவின் விஸ்வருபத்தை காணும் (கண்கள் தாங்கும்) சக்தியை பிஷ்மர்
பெற்றார் ]...ஆனால் அதை படிப்பதற்க்கு சிரமமாக உள்ளது.. இதன் தமிழ் ஆக்கம்
நுண்கண்பண்ணாயிரம் என உள்ளதென்றும் .,
அதன் முதல் வரி கூட “ ஏழெட்டு கௌதமரை ஏவலாய் வைத்திருந்தேன்
ஆஎனும் அன்புமகன் அடிமையாய் ஆக்கிவிட்டான்””" என வருவதாக உத்தம குருவாய் மொழி
கிட்டியது ஐயா.. என அகத்தியெம் பிரானிடம் ஜீவ நாடியில் வினவுயபோது.... அனைத்தும்
இறையருளால் உண்மைதானப்பா ..,ஆனால் அனைத்தும் பஞ்சாட்சரத்துள் அடங்கும்... எனவே வடகிழக்கு
திசை நோக்கி அமர்ந்து பஞ்சாட்சரத்தை ஜபி
அனனத்தையும் அறியலாகும் .., என்றார்...
*அன்பர்களே அதையே தங்களுக்கும்
இக்கட்டுரையின் முடிவாக கூறுகிறேன்... வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து பஞ்சாட்சரத்தை ஜபியுங்கள்....,
முப்பு , வாலை , சித்தி , குண்டலினி , வாசி... என அனைத்தையும் அறியலாம்...அடுத்ததாக
தினசரி தங்களால் முடிந்த அளவு குறைந்தபட்ச அன்னதானம் ..., பட்சிகளுக்கு உணவளியுங்கள்...
*இறைவனின் கல்யாண குணங்களைப் பற்றி
பேசுவதாலோ , வாதிடுவதாலோ எந்தவிதமான பலனும் விளையப்போவதில்லை... இறைவனுக்காக நாம்
செய்யும் திருப்பணியே எல்லாவற்றையும்விட உயர்ந்தது..!!
*வெறும் வார்த்தைகளால் எந்தப்
பயனும் விளைவதில்லை . உடல் , பொருள் , ஆவி என அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து
இயற்றும் சேவையே முக்கியமானது..!!
*எந்த அளவுக்கு ஒரு மனிதன்
இறைவனுக்கான , இறை அடியார்களுக்கான சேவையில் தன்னுடைய உடல் ,பொருள் , ஆவியைச்
செலவழிக்கின்றானோ , அர்ப்பணிக்கின்றானோ அந்த அளவுக்கு அவனுடைய வாசி தூய்மை
பெறும்..., விரிவடையும்...!!
*அதே போல் மலைதலங்களுக்கு
சென்று... அவற்றின் புனிதத்தை மாசுபடுத்துவது.....,தவறு ..,வெள்ளியங்கிரி
.., கொல்லிமலை .., பொதியமலை இடங்களுக்கு மட்டும்..., குருஅனுமதி .., சித்தர்கள்..
அறிவுருத்துல் இல்லாமல்.. தான் தோன்றிதனமாக செல்வது தவறு.!! அதுவும் பொதியமலையில்
சித்தர்கள் அழைப்பில்லாமல் கல்யாண அருவி தாண்டி செல்ல மனிதர்களுக்கு அனுமதி அரவே
கிடையாது ..., கல்யாண தீர்த்தம் வரை தான்
நரன்களின் எல்லை! மீறி சென்று சந்தனத்தில் குளிக்க போய் சேற்றை பூசிக்க
கொண்ட கதையாகிவிடக்கூடாது...!
*சதுரகிரி .. பர்வதமலை போன்ற மலைதலங்களுக்கு செல்கையில்
ஆவாரவாரம்... ஆட்டம்பாட்டம் இல்லாமல்... கெக்கபக்க செக்கபக்க என
சிரித்துக்கொண்டு... கத்திக்கொண்டும் விண் விவாதங்கள் செய்து கொண்டும்...
தேவையில்லாமல்.. இலைதலை கிள்ளிக்கொண்டும்.. செல்லாமல் முடிந்தால் இறை நாமக்களை
கூறிக்கொண்டு இல்லாவிட்டால் மௌனமாக மலையேறி தரிசனம் செய்து திரும்புவதே உத்தமம்...
!!!அங்கிருந்து... அனாவிசியமாக.. எதையும் எடுத்துக்கொண்டு வரக்கூடாது...!!
*ஓரே ஒரு இளம் தளிரான இலையைக்கொய்தால்.. ஆயிரம் சிசுஹத்தி
செய்யபாவம் ஒரு மனிதனை பீடிக்குமப்பா...! ஓரே ஒரு மலர்மொட்டை ஒருவன் கொய்தால்
பத்தாயிரத்தெட்டு பிறந்த குழந்தைகளை கொன்றதுக்கு சமம் .. என்று சாதாரண மரம்
,செடிகளுக்கு சொல்கிறார்.. அப்பொழுது மலைத்தலங்களின் மூலிகைகளின் சாபங்களை
என்னவென்றுரைப்பது ???
o இந்த மலையில் இந்த குகையில் இன்ன ஆஸ்ரம பெயர்கொண்டு இத்தனை சித்தர்கள் வாழ்கிறார்கள்... என பல
சித்தர்கள் பாடல்களில் வரும் இதைபடித்து கொண்டு மலைகளில் மயங்கி அலையவேண்டாம். மக்களுக்குகாக சித்தர்கள் அனனரும் வணங்கும்
படியான ஆலயங்களில் உள்ளனர் என போகர் தம் ஜெனனசாகரதில்.... கீழ்கண்டவாறு
கூறுகிறார்.
.
மானென்ற மைந்தனே மலையிற்றானு
மயங்கி நீயலையாதே யொன்றுகேளே
கேளப்பா மூலவர்க்க மதிமாகுங்
கிடையாத சித்தியெல்லா மிவர்க்கேயெய்தும்
வாளப்பா விந்தவர்க்க மசடோவில்லை
வல்லதொரு மூலமதை வழுத்தக்கேளு
ஆட்டமுடன் பதினெட்டு சித்தரெல்லா
மஷ்டாங்க யோகத்தா லெட்டெட்டாகீ
கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்
குவலயத்தில் லிங்கமதாய் முளைத்தார்பாரே...!!!
ü- என்கிறார் முடிந்தபொழுதெல்லாம் குருவருள்.. குருதரிசனம் வேண்டி ஸ்தல யாத்திரை செய்யுங்கள்... ஆலயத்தை பிரதட்சணம் செய்யுங்கள்.... ...,
காலகடுக்கும் வரை நீங்கள் பிரதட்சணம் செய்தால்..., பிரதட்சயமாக சித்தர்கள். தரிசனம் தருவார்கள்..!
அஃதே உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்! தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கமே.!
சிவசக்தி ஜக்கியமே!
பூமியை மதி(நிலா) சுற்றுகிறது... அதுவே பட்சம் தோறும் மதிமயக்கமாம்... பூரண
வாசியாம் அம்மாவாசியில் நின்றாலோ ஜக்கியமே.!
பூமி சூரியனை சுற்றுகிறது.... (ஜீவாத்மா (நாமாகிய சர்வ ஜீவன்கள்... ஒளியாகிய
இறையனை அடைய ... அத்துடன் நம் (கர்மாக்களும் ) கோள்வடிவாகி.. நம்முடனே...
நவகிரகங்களாய் சுற்றுகின்றன....) எதை அவையும் பரமாத்மாவாகிய (சூரியனையே..)
அவ்வாறே அனைத்தும் பரமாத்மாவாம் (சூரியன்) மத்யஸ்தானத்தை
நோக்கி... இதுவே “அப்பர் கண்ட “மாலை மதியமாம்” காலதேசம் "(மறந்த) மறைந்த" நிலை..!
ஆக ....உடம்பால்.. அதாவது ஆ(ன்மா) இருக்கும் ஆலயத்தை கோ(யிலில்)லுள்ள
பரமாத்மாவை சுற்றினால்... ஜீவாத்மா பரமாத்மா(வை)வில் (அடையும்) ஜீவாத்மா அடங்கும்..
(ஆ –ஜிவன்களை குறிப்பது) *ஆன்மா (ஜீவாத்மா)
லயம் ஆகியுள்ள இடம்.. - - ஆலயம் .. *கோ என்றால்
இறைவன் . ... கோயில் இறைவன் உள்ள இடம்... உள்ளம் கோயிலாக வேண்டும் ஊடனும்பு ஆலயமாக
உள்ள இடத்தில்.. அதற்கு உள்ளமும் உடலும் சுத்தமாக இருக்க வேண்டுமே.... ஆக உடம்பால்
பிற ஜீவன்களுக்கு சேவை செய்தால் இறைவன் மகிழ்கிறான்.. கோயிலை சுற்றினால்..
ஜீவாத்மா பரமாத்மாவோடு கலக்க தடையாக உள்ள கர்மங்கள்.. கழியும்....
follow these 3 steps in image for athma darshan!
No comments:
Post a Comment