எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, October 25, 2016

முருகா.....

அகத்தியர் ஆறெழுத்தந்தாதி
 
சக்தித்தவ ளவன்றானா யவனவ டன்வடிவாய்
முத்தித்த பச்சைமுழுமுதலாய்ச் சண்முகவடிவாய்
அத்தித்தறு சமயந்தொழி லாறுக்கு மாறெழுத்தாய்ச்
சித்தித்தென்னாவி விளையாட லண்டத்தின் செய்கையதே

அண்டத்திலுள் ளதுபிண்டத்திலும் முண்டவ்வாறெழுத்தும்
பண்டித்தற் சதகோடி மகாசக்தி பண்ணாதற்காய்த்
துண்டத்துடலுயிராய்ப் பகைசெய்த சூத்திரத்தாற்
கண்டித்த நம சிவாய வெனயுருக் காட்டியதே

பெற்றாளும்பொய் பிறபித்தானும்பொய் பெண்டீர் பிள்ளையும்பொய்
யுற்றாரும்பொய் யுலகத்தாறும்பொய் நம்முடம்புயிர்பொய்
கற்றார் பிதற்றலும்பொய் சமயாதி கடவுளர்பொய்

முற்றாமுலைவள்ளி பங்கனெங்கோன் மெய்யன் முன்னிற்கவே

அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி

நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால்
நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும்
ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ
ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு
ஆட்டமென்ற திருநடன மங்கே யுண்டு
ஐம்பத்தோ ரெழுத்துமுத லெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா லென்ன வுண்டு
பத்திமுத்தி வைராக்கிய மாகப் பாரே.

zபாரப்பா வுலகத்தில் ஞான மென்பார்
பராபரத் தினிருப்பிடத்தை பாரார் பாரார்
சாரப்பா வுலகத்தில் யோகஞ் செய்வார்
சார்ந்திருக்கும் பரஞ்சோதி தன்னைக் காணார்
ஊரப்பா கிரியையென்றேயு ழலு வார்கள்
உத்தமனே உள்ளுயிரையறி யமாட் டார்கள்
நேரப்பா சரியையென்பார் தனக் குள்ளே
நெருப்பாருந் திருக்கோயில் கண்டி லாரே
 

பேய் பிடித்து சாஸ்திரத்தை உலகத்தோர்கள்
பேணியே படித்திடுவார் பொருளைக் காணார்
வாய் புழுத்து நாய் போலே உலகத்துள்ளோர்
வழிகள் நெறி யறியாமல் மாண்டு போனார்
நோய்பிடித்த சித்தர்தான் அனந்த முண்டு
நோக்கியே யவர்களிடம் பேச வேண்டாம்
தாயறியாப் பிள்ளையிடம் பேச வேண்டாம்

தண்மையுடன் பூரணத்தைக் காணலாமே ...

1 comment:

  1. ஐயா, பாடலின் விளக்கம் கூறவும்...

    ReplyDelete