எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, July 28, 2016

ககோளம்

••• உலகம் படைப்பதற்கு முன்னரே தோன்றிய செம்மங்குடி கஹோளேஸ்வரச் சிவபூமி .!!!
••• செம்மங்குடி தலத்தில் ஸ்ரீசெண்பகவல்லீ தேவியை உபாசித்த மஹான் பாஸ்கரராயர், அரிய ஸ்ரீவித்யா ரகசிய மாமறைப் பொருளை உணர்த்தும் “வரிவஸ்யா ரகசியம்” எனும் கிரந்தத்தை அம்பிகையின் அருளால் இந்தக் கஹோஸ்வரச் சிவபூமியில் தான் எழுதினார்..!!!

••• பௌர்ணமி திதியை இந்தச் செம்மங்குடி தலத்தில்தான் மஹாகாலபைரவ மூர்த்தியாய் சர்வேஸ்வரன் தோன்றிச் சங்கல்பித்து சிருஷ்டித்தார் ...!!!

••• பவாநிகுரு [இமயம்] எனும் இமயமலைக்கும் , ககோளச் சிமயம் எனப்படும் இந்த செம்மங்குடி கஹோளேஸ்வரச் சிவபூமிக்கும் உள்ள தெய்வீகப் பினைப்பு அதிசூக்குமமானது.!!!


••• சிவலிங்கத்தின் தெய்வீகத்தை ., விளக்கிட எட்டு தத்துவங்கள்ள வரும் ., நிலம் ,நீர் , நெருப்பு ,காற்று ,ஆகாயம் ஆகிய பஞ்சபூத ஐந்தோடு ., சூரியத்துவம் ., சந்திரத்துவம் ,ஆன்மா[எஜமானத்துவம்] சேர்ந்து எட்டாகும் .சிவலிங்கத்தின் இந்த ஆன்மா [எஜமானத்துவம்] தத்துவ சக்தியை ககோள பவனமாய் விளக்கியவர் ககோள மகரிஷி .,
••• - மேலும் ககோளம் பற்றிய அதிமஹா த்வ்ய விளக்கங்கள் ஆகஸ்ட் ,செப்டம்பர்,அக்டோபர்2013 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழிகளில் காண்க...,
                                  
[ சர்வ லோகங்களின் அமைப்பயும் விளக்க வல்லது ககோளம் ...அத் துதியையும் 
ஸ்ரீஅகஸ்திய விஜய இதழ்களில் கண்டு ஆனந்தத்திடுக …]

ஏழு கடல்கள்.. பற்றிய மஹாதிவ்ய பூரண விளக்கங்களை…. ஆகஸ்ட்2016 ஸ்ரீஅகஸ்திய விஜய இதழிலும்… அஃது பற்றிய… ஒரு பதிவை இவ்வினணப்பில் காண்க : http://pulipanisithar.blogspot.in/2013/08/blog-post_21.html

==================================================
••• குறிப்பு :- பாஸ்கரராயர் இயற்றிய “ வரிவஸ்யா ரகசியம்” நூல் தற்போது எங்கும் கிடைப்பதே கிரி tradersலும் [giri.in] கிடைக்கும்.. படித்துப் பாருங்கள் ..




••• இந்த “வரிவஸ்யா ரகசியத்தில்” குறிப்பிடபட்டுள்ள சில நுண்ணிய விஷியங்களுக்குகான...,விடைகள் ஸ்ரீஅகஸ்திய விஜய வெளீயிடான “கலைவாணியின் மகிமை” என்ற தலைப்பில் குருமங்கள் கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவுவில் சூக்குமமாகவும் பட்டவர்த்தனமாகவும் விளங்கும்.., குறுந்தட்டை வாங்கி கேட்டுப்பாருங்கள்...!!!

No comments:

Post a Comment