எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, November 13, 2016

அன்னாபிஷேகம்

 ***ஐப்பசி பௌர்ணமியில் நிறைய அன்னம் வடித்து அவரவர் ஊரில் உள்ள சுயம்பு லிங்கத்திற்கு அன்னத்தால் காப்பிட்டு சிகப்பு நிற நறுமண மலர்களால் 1008 முறை (கனகாம்பரம் , ஐவ்வந்தி கூடாது) அர்ச்சித்து வழிபடுதல் வேண்டும்.., பிரசாதப் பூக்களின் மேல் இரு கைகளையும் மலர வைத்து விரித்து உள்ளங்கை ரேகையை மலர்களின் மேல் நன்கு படர வைத்து ....,

“ஹ்ருதய ஆகாச ஹ்ருதய புஷ்ப மாளயம்
ஹ்ருதய குலஸூமாஞ்சலி
ஹ்ருதயாலீஸ்வரர் இதம் சுகம் பதமாஸ்ரயம் “

*** என்று ஓதி புஷ்ப ரேகா யோக பாவனம் பூனுதல் வேண்டும்.., பிறகு இந்த மலர்களை பசுக்கள் , காளைகள் , மாடுகளுக்கு புல் , தழைகளோடு அவை உண்ணும் வரை அளித்திடுக .., மீதமுள்ள புஷ்பங்களை நந்தவனம் , பூத்தாவரங்களின் வேர்ப் பகுதியில் மேல் மண்ணோடு சேர்க்கவும்...!!

*** சித்த மருத்துவ , ஆயுர்வேத நாட்டு மருந்து கடையில் அன்னபேதி சிந்தூரம் என்ற ஒரு மருந்து கிட்டும்.  நிறைய மூலிகைகள் மற்றும் உலோக சக்திகள்  நிறந்ததாக , ரத்த விருத்திக்கு இது மிகவும் உதவுவது ...,

*** ஐப்பசி பௌர்ணமியில் இதனைச் சிறிதளவேனும் வாங்கி , கங்கை , காவிரி போன்ற புனித நீரில் கரைத்து  மா , பலா , வாழை , தென்னை ,பனை ஆகிய ஐந்து தாவரங்களின் நுனித் தண்டுப் பகுதியிலிருந்து ஆரம்பித்து மெதுவாக வேர்ப் பகுதி வரை சுற்றி ஊற்றி வருதல் வேண்டும்..


*** “விருட்ச தேவதைகளே , நல்ல மனோ வைராக்கிய சீர்மைக்கான அன்னச்சாரச் சிந்தூரச் சக்திகளை அனுகிரகம் செய்து அளிப்பீர்களாக! என்று உளமாற வேண்டிடுக..,


*** ஐப்பசிப் பௌர்ணமியில் வடிக்கப் பெறும் அன்னத்திற்கு விமலச் சோறு அதாவது தோஷங்களே இல்லாத அன்னம் என்று பெயர்..,

*** அன்னத்திற்க்கு ஐந்து வகை தெய்வாம்சங்கள் உண்டு..., தான்ய சக்தி , ஜலசக்தி ,  அக்னி சக்தி , அமிர்தப் பரவெளி சக்தி (அன்னம் வெந்த நறுமண வாசனை ) , ஆகாச சக்தி என்பதாக பஞ்சபூத சக்திகளைப் போல பஞ்சாத்மாகார தெய்வீக சக்திகளைக் கொண்டதே அன்னமாகும்..

-- More infoz @ ஸ்ரீஅகஸ்திய விஜயம்  அக்டோபர் 2004 


No comments:

Post a Comment