அகத்தியப் பெருமான் தங்கி வழிபட்ட கோவில்கள்!!!
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில் -காஞ்சிபுரம்
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில் -திருவொற்றியூர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-தண்டையார்பேட்டை, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-நல்லூர் கிராமம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-சோழி பாளையம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-கொளத்தூர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-நுங்கம்பாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர்,திருவேள்வீசுவரர் திருக்கோவில்-வளசரவாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-வேலப்பன் சாவடி, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-சித்தாலபாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-வேங்கடமங்கலம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-வில்லிவாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-மிட்டனமல்லி,ஆவடி, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பொழிச்சலுர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பூந்தன்டலம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-கொளப்பாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பவுஞ்சூர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-அணைக் கட்டு சேரி, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-குரோம்பேட்டை, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பழைய பெருங்களத்தூர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-நெடுங்குன்றம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-சோனலூர்,மாம்பாக்கம், சென்னை.
அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவில்-திருவான்மியூர், சென்னை
------------------------------------------------------------------------------------------------
பேரளம் செல்லும் வழியில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் மிகப்பழமையானது. இந்த திருத்தலத்தில் பல மகிமைகள் கொண்டதாக அமைந்திருக்கிறது.
இருதயக்கோளாறு உடையவர்கள் இந்த ஆலயம் சென்று வந்தால் பரிபூரண குணம் கிடைக்கிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதோர் இங்கு உள்ள மரத்தின் காய்களை மஞ்சல் துணியில் முடிந்து கட்டி பிரார்த்தனை செய்தால் பலிதம் ஆகாறது.
பத்திரபதிவில் பிரச்சினை உள்ளவர்கள் இங்குள்ள அகதீஸ்வர்ரை வழிபட கை மேல் பலன் உண்டு.
வெளிநாடு செல்வோர்கள் இங்கு வந்து சென்று நல்ல பலனை அடைகின்றனர்.
உலகத்திலேயே இந்த ஆலயத்தில் தான் இராசி மண்டலத்தின் மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி ,ஒருபுறம் அகத்தியரும், மறுபுறம் கோரக்கரும் இருக்க தென்முகமாக அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.
ஜோதிட பெருமக்கள் , வைத்தியர்கள் இங்கு சென்று வழிபட சாஸ்திர புலமை அடையலாம்.
அனைவரும் இந்த ஆலயம் சென்று வழிபட்டு பலனும் பயனும் அடைய வாழ்த்துக்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
இந்த கோவில் ஆச்சாரிய பெருமக்கள் முத்துக்குமரன், ராஜா பட்டர்.
செல். 9443672182
பூதக்கல் ஸ்ரீ சர்ப சித்தர் பீடம் !!!
கண்ணை மூடி உட்கார்ந்தால் ஒளி அதிர்வாக காட்சி அளிக்கும் 1200 வருட சக்தி வாய்ந்த பழமையான சித்தர், (ஜீவ சமாதி-பூதக்கல் ஸ்ரீ சர்ப சித்தர் பீடம்
1200 வருடத்திற்கும் பழமையான ஜீவ சமாதி இருக்கும் இடம் அசிரிரி மூலம் சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் போன ஜென்மத்தில், சித்தர் தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே தேடி சென்று பார்க்க கூடிய ஜீவா சமாதி என்பதால் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது. மற்ற ஜீவா சமாதிகள் போல் அல்லாமல் பூதக்கல் போல் காட்சி அளிக்கும் இந்த சமாதியை சுற்றி பாம்புகள் வருமாம், மேலும் இவை மக்களை இதுவரை எதுவும் செய்ததில்லை.

இந்த சமாதியின் மேல் உள்ள பூதக்கல் பஞ்சபூத சக்திகளை கட்டுபடுத்தும் ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளதால் சகல வித தோஷங்களை போக்கும் சக்தி வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது. இன்னுமொரு அற்புதம் என்னவென்றால் சமாதி அருகே கண்ணை மூடி தவம் செய்தால், ஒளி உருவமாக சித்தர் காட்சி அளித்து வருகிறார். இந்த சித்தர் காளஹஸ்தியில் இருந்து வந்தாக கண்டறியப்பட்டுள்ளது. 1200 வருடங்களுக்கு முன் உருவான சமாதி என்பதால் பல இயற்கை சீற்றங்களை தாண்டி இன்றும் நிலையாக உள்ளது, முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக இருந்துள்ளது. 15 நாட்கள் ஒரு புறம் சாய்ந்தும் 15 நாட்கள் ஒரு புறம் சாய்ந்தவாறும் காட்சி அளிப்பது அற்புதத்தின் எல்லை என்றே கூறலாம், பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த பதிவை படிக்கவும், இந்த சமாதிக்கு செல்ல முடியும் என்பது சித்தர் வாக்கு. பஞ்ச பூதங்களை கட்டுபடுத்தும் கல் என்பதால் எந்த சேதமும் இன்றி இன்றும் நிலையாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் அம்மன் அருகே உள்ள சிலை, அசிரிரி மூலம் கனவு வந்ததன் மூலம் ஏரியில் இருந்து எடுக்கப்பட்டது, இந்த கல்வெட்டிலும், அற்புத விஷயங்கள் அடங்கி இருப்பது ஆச்சர்யமே! நேரில் சென்று பார்த்தால் அற்புதத்தை உணர முடியும். பிராதான அல்லது சமாதியாக காட்சி அளிக்கும் கல்வெட்டில், மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் உள்ளது இதற்கு அடியில் தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார் அந்த லிங்கத்தின் மீது சந்திரன் /சூரியன் உருவம் பதிக்க பட்டு உள்ளது பிரணவ மந்திரம் பதிக்க பட்டு உள்ளது பஞ்ச பூதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது நியாயமாக எதை வேண்டியதை தரும் சர்ப சித்தரை காண கீழ் கொண்ட முகவரிக்கு செல்லவும். சமாதிக்கு செல்லும் பொது முகவரியை விலாவரியாக எழுதி கொண்டு எடுத்து செல்லுங்கள்.
ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்
கோவிந்தராஜ் நகர், மாங்காடு,
சென்னை-122.
கைப்பேசி எண்:9789826263.
மாங்காடு தாண்டி செல்லும் போது பட்டு மாங்காடு ரோடு இடது புறமாக வரும், உள்ளே சென்று வலப்புறத்தில் வாழை தோப்பை ஒட்டிய சிமெண்ட் ரோடு(கோவிந்தராஜ நகர் ) உள்ளே செல்லவும், அங்கு இருப்பவர்களிடம் ஜீவ சமாதி என கேட்டால் வழி சொல்லுவார்கள்
----------------------------------------------------------------------------------------------------
- சித்தவட மடத்தில் உள்ள சிவன் கோயில்.
பண்ருட்டி, மார்ச் 15: அலைபாயும் மனதை இறைவன்பால் செலுத்தி சிந்தனையை ஒருநிலைப்படுத்துபவர்கள் சித்தர்கள் என்று பெயர் பெற்றனர். அவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களே இன்று சித்தர் பீடங்களாக உலகில் போற்றப்படுகின்றன. இவற்றில் ஒருசில சித்தர் பீடங்கள் புகழ்பெற்றும், பல சித்தர் பீடங்கள் சுவடுகளே தெரியாமல் புகழ் மறைந்து போய்விட்டன. இவற்றில் சித்தவட மடத்தை தன் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன்.
இந்த சித்தவட மட சித்தர் பீடத்தை பற்றி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறியதாவது: தன்னலமின்றி பொதுநலத்துக்காகச் சிந்திப்பவர்கள் உலகில் உன்னதமான பிறவிகளாகப் போற்றப்படுகின்றனர்.
வள்ளல் ராமலிங்க சுவாமிகள் குறிப்பிடுவதைப் போன்று இவர்கள் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர்கள். ஆன்மிக வாழ்வியழலை ஏற்றுக்கொண்டு சித்தம் என்கிற மனத்தை அடக்கி ஆள்பவர்கள் சித்தர்கள் என்ற பேற்றினைப் பெற்றார்கள்.
சித்தர்கள் பெரிதும் தனிமையை விரும்புபவர்கள். இவர்கள் ஒன்றுகூடி வாழ்ந்ததாக வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் கூடி இருந்து மக்களுக்கு நன்மைகள் புரிந்தனர். எனவே பிற்கால வரலாற்றில் இந்த இடம் சித்தவட மடம் என பெயர் பெற்றது.
வழக்கு சொல்லில் கோட்லாம்பாக்கம் என்று கூறப்படும் இந்தப்பகுதிக்குள் மிகப்பெரிய அளவில் இருந்த சித்தவட மடம் மறைந்து இப்போது சிவன் கோயிலாகக் காட்சி அளிக்கிறது. இவ்வூர் திருவதிகை கல்வெட்டில் கொட்டிளம்பாக்கம் என்று கூறப்பட்டுள்ளது. இறைவன் சிதம்பரேசுவரர், அம்மை சிவகாமிசுந்தரி எனும் பெயரால் வணங்கப் பெறுகின்றனர்.
தமிழகத்துக் கோயில்கள் அனைத்தும் கிழக்கு திசை நோக்கியே இருக்கும். மேற்கு நோக்கிய கோயில்களை குறைந்த அளவிலேயே காணமுடியும். இவற்றில் கோயிலும் சந்நிதியும் மேற்கு நோக்கி அமைந்துள்ள கோயில் இதுவாகும். காரணம் இது சித்தர்களின் ஜீவசமாதிகளாகும்.
கி.பி.8-ம் நூற்றாண்டில் இந்த இடம் சித்தர்கள் மடமாக இருந்த காலத்தில் திருவதிகை வீரட்டானேசுவரரைத் தரிசிக்க வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென ஒரு சிந்தனை உதித்தது. திருவதிகையில் திருநாவுக்கரசர் தனது திருக்கரங்களால் உழவாரத் திருப்பணி செய்த வீரட்டானத் திருத்தலத்தை தனது கால்களால் மிதிக்கக்கூடாது என்கிற பக்தியின் மேலீட்டால் வீரட்டானத்தைத் தூர இருந்தே தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது சுந்தரர் சிவபெருமானை தரிசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமே சித்தவட மடமாகும்.
சுந்தரர் இம்மடத்தில் தங்கியிருந்த சித்தர்களோடு ஒரு பக்தராக வந்து இரவில் தங்கியிருந்தபோது சிவபெருமான், தனது திருத்தொண்டரான திருநாவுக்கரசருக்கு மதிப்பளித்த சுந்தரருக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார். முதுமை நிறைந்த கிழவராக சிவபெருமான் வடிவெடுத்து, அங்கு உறங்கிக்கொண்டிருந்த சுந்தரர் தலைமீது தமது கால்கள் படுமாறு படுத்துக்கொண்டார். சுந்தரர் அந்த கிழவர் உறங்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்று படுத்தபோது, அங்கும் சென்று தலைமீது கால்படும்படி செய்தார்.
சுந்தரர் எழுந்து அய்யா பெரியவரே ஏன் இப்படி மீண்டும் மீண்டும் செய்கிறீர் என்று கேட்க, நீ வேண்டும் வேண்டும் என்பதால்தான் என்றார் கிழவர். தாங்கள் யார் எந்த ஊர் என்ற சுந்தரரிடம், நான் ஒரு சித்தன் - நீ எனது பித்தன் எனக் கூறி சிவபெருமான் மறைந்ததாக வரலாறு. அங்கு சிவபெருமானைப் போற்றி தம்மானை அறியாத சாதியா ருளரே எனத் தொடங்கும் பதிகம் பாடினார். இப்பதிகம் தேவாரத் திருமுறை வரிசையில் 7-ம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. இப்பதிகம் திருவதிகை வீரட்டானத்தைப் பற்றியதாக இருந்தாலும் பாடல் பிறந்த இடம் சித்தவட மடமாகும்.
இம்மடத்தில் சுந்தரர் தங்கியிருந்தபோது அவரை உபசரித்து வழியனுப்பி வைத்த சிதம்பரச் சடையனார் என்ற சித்தர் சுந்தரரின் அன்பை பெற்றவர். அவர் (சிதம்பரச் சடையனார்) சித்தியான இடத்தில் இன்று கோயில் கருவறையில் சிவலிங்கமாக (சிதம்பரேசுவரர்) காட்சியளிக்கிறது.
வட திசையில் சிதம்பரச் சடையனாரின் சீடரான சித்தாண்டி சுவாமிகள் சித்தியடைந்த இடம் கிழக்கு நோக்கி (தனி சந்நிதியாக) கோயில் கொண்டுள்ளது. கிழக்கு திசையில் சித்தி பெற்று கோயில் கொண்டுள்ள மற்றொரு சித்தரின் பெயர் அறியக் கிடைக்கவில்லை.
தென் திசையில் தட்சிணாமூர்த்தி சந்நிதியின் அடியில் உள்ள கல்வெட்டு ஒன்றைப் படித்தபோது ஓர் உண்மை கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டில் திருவதிகை ராச்சியம் நாட்டுக் கணக்கு சந்தியப்பன் சர்வ சித்தி என்று பொறிக்கப்பட்டிருப்பதால் கி.பி.15-ம் நூற்றாண்டில் திருவதிகை என்ற ஊர் ராச்சியம் என்ற மதிப்பை பெற்றிருந்ததும், இந்த ராச்சியத்தின் கணக்காளராக இருந்த சந்தியப்பன் என்ற பெயர் கொண்ட சிவயோகியார் இந்த இடத்தில் சித்தி அடைந்தார் என்பதும் கண்டறியப்பட்டது.
இதுபோன்று பற்பல காலங்களில் இம்மடத்தில் வாழ்ந்து மறைந்த சித்தர்களின் வரலாற்றுப் புகழை அறிந்த சோழ மன்னர்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சுதையால் கி.பி. 9-ம் நூற்றாண்டில் இங்கு கோயில் எழுப்பினர். அதன் பிறகு கி.பி.13-ம் நூற்றாண்டில் அரசுபுரிந்த சேந்தமங்கல அரசன் கோப்பெருஞ்சிங்கக் காடவராயன் தனது 24-ம் ஆட்சி ஆண்டில் (1267) கருவறைப் பகுதியை கருங்கற்களால் மாற்றி அமைத்ததாக இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது.
கோயில் வாயிலின் மேற்புறத்தில் கி.பி.16-ம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் காணப்படும் கல்வெட்டில் சிவகாமி அம்மையின் சந்நிதிக்கு தினந்தோறும் பூமாலை அளிப்பதற்கான தானக் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோயில் கருவறையைச் சுற்றிலும் உள்ள விநாயகர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, பைரவர், சூரியன் ஆகியோரது சிற்பங்கள் சோழர் காலம் மற்றும் கி.பி.13-ம் நூற்றாண்டின் கலைத்திறனை எடுத்துக் காட்டுகின்றன.
சுந்தரருக்கு சிவபெருமான் தம் திருவடியைச் சூட்டியதும் (திருவடி தீட்சை), ஞானசித்தர்களும், மோன முனிவர்களும் இறவாப் புகழுடன் வாழும் சித்தவட மடத்தில் கோயில் கொண்டுள்ள சிவகாமி உடனுறை சிதம்பரேசுவரர் கோயில் பற்பல காலக்கட்டங்களில் திருப்பணிகளைப் பெற்றிருந்தாலும் மீண்டும் ஒரு திருப்பணியையும், குடமுழுக்கையும் எதிர்நோக்கியுள்ளது. இத்தலம் பண்ருட்டிக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் புதுப்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment