திண்டுக்கல் திருமலைக்கேணி கீழ் பழனி முருகன் கோயிலில் முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்தபடி நளினமாக தண்டாயுதபாணியாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து ராஜ அலங்காரம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்த கோயிலில் முருகப்பெருமான் பாலகன் என்பதால் அவருக்கு அருகில் வள்ளி-தெய்வானை கிடையாது. மேலும் கோயிலில் தனிச் சந்நதியிலும் இவர்களை காண முடியாது. முருகன் சந்நதிக்கு இருபுறமும் தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இந்த தீர்த்தங்களின் வடிவில் வள்ளி-தெய்வானை அருள் புரிவதாக நம்பப்படுகிறது. இங்கு வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது கந்தன்குடி. கும்பகோணம் - காரைக்கால்; மயிலாடுதுறை - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை அடுத்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில். வாயிலிலிருந்து நீண்ட நடுமண்டபம். அதன் மேல் விதானத்தில் அறுபடை வீடுகளையும் அழகிய சித்திரமாக வரைந்துள்ளனர். அதனருகே தெய்வானைக்கு தெற்கு நோக்கிய தனிச்சந்நதி அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் கைகளில் கிளியோடு, தவம் முடித்த அருட்களை பொலிய, சாந்தமும், நாணமும் ஒருசேரக் கலந்து அருள்கிறாள், தெய்வானை.
சிறியதாக இருந்தாலும் நின்று பார்க்க வைக்கும் தெய்வீக வசீகரம் பொலியும் திருச்சந்நதி. இவளை தரிசித்தாலே போதும் திருமணம் கைகூடும் என்பது நிதர்சனம். மகாமண்டபத்தில் நடராஜர் சபையும் அதனையடுத்து ஸ்நபன மண்டபமும் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்து கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தேவசேனாவுடன் சுப்பிரமணியசுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். சொந்த ஊருக்கு வரும் தலைமகனை எத்தனை அன்பாக உபசரிப்போமோ அதுபோல கந்தனை சகல உபசாரங்களோடும் அமர்வித்துள்ளனர்.
சந்தனக் காப்பு, விபூதிக் காப்பு, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம் என வேளைக்கொரு அபிஷேகமும், அலங்காரமுமாக செய்து மகிழ்கிறார்கள். கருவறையை நெருங்கும்போது ஆனந்த ஊற்று அகத்தில் கொப்பளிக்கிறது. இதற்கா இவ்வளவு பயந்தோம் என்ற ஆன்ம பலம் சேர, நாள்பட்ட துயரங்கள் எல்லாம் தூசாகப் பறந்து போகின்றன. வள்ளியும், தெய்வானையும் கந்தனின் ஆட்கொள்ளும் அதிசயத்துக்கு அந்தரங்க சாட்சியாகக் காட்சி தருகிறார்கள். இந்த கந்தவேளை அருணகிரிநாதர் பரவசமாகப் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ள ஊர் தெற்கு கருங்குளம். இங்கு ‘பூ’ சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர பெருவிழாவில் ஆண்களே தயாரித்து ஆண்டவனுக்குப் படைக்கும் கொழுக்கட்டை வழிபாடு பிரபலம். இந்த ஆலயத்தில் அதிசய மரம் ஒன்று உள்ளது. பங்குனி உத்திர நாளை ஒட்டி சில நாட்கள் மட்டுமே இந்த மரம் பூத்துக் குலுங்கும். இந்த பூ மரத்தின் நிழலில் தான் இங்குள்ள சாஸ்தா அருள்பாலிக்கிறார். இந்த மரத்தின் மலர்களைச் சேகரித்து தேங்காய் எண்ணெயில் போட்டால் அது சிவப்பு நிறமுடைய மணமிக்க எண்ணெயாக மாறும். இந்த எண்ணெய், தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து. அத்துடன் அதனை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக கருகருவென வளருமாம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது உசிலம்பட்டி கிராமம். இங்குள்ளது உசிலை வனநாதர் ஆலயம். இறைவி சொர்ணரேகா. உசிலை மரங்கள் நிறைந்த தோப்பில் அருள்பாலித்து வரும் இந்த ஆலய இறைவனின் மேனி உளி படாத திருமேனி. இறைவனின் திருமேனியில் பல வியக்கத்தக்க அதிசயங்கள் உள்ளன. இறைவனின் தலையில் இடதுபக்கம் சந்திரபிறை போன்ற பள்ளம் உள்ளது. தலைப்பகுதியின் பின்பக்கம் சடை போன்ற வரிகள் உள்ளன. இறைவனின் நெற்றியில் விபூதி பட்டை போல் மூன்று பட்டையான கோடுகள் உள்ளன. இறைவனின் இடையைச் சுற்றி தங்கரேகை போன்ற அமைப்பு உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பாளின் சின்னமான திரிசூலம் போன்ற அமைப்பும் உள்ளது. இப்படி அமைப்பு உள்ள லிங்கத் திருமேனி வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
திருச்சி, பழையாறைக்கு அருகே 'பஞ்சவன்மாதேவீசுவரம்' என்றொரு கோவில் உள்ளது. முதலாம் இராஜேந்திரன் தன் தாய் பஞ்சவன் மாதேவிக்காக எழுப்பிய 'பள்ளிப்படை கோவில்' இது. தாய் ஒருத்திக்காக கட்டப்பட்ட ஒரே கோவில் தமிழகத்தில் இது மட்டும்தான்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது அருள்மிகு குஞ்சாயம்மன் ஆலயம். கருவறையில் குஞ்சாயம்மன் மற்றும் கண்ணடச்சி அம்மன் என இரு அம்மன்கள் திருவருள்பாலிக்கின்றனர். ஆடி மாதம் இங்கு நடைபெறும் ஆகாய பூஜை மிகவும் விசித்திரமானது. ஆடி 18ம் தேதி பொங்கல் வைத்து, ஆடு, பன்றி, கோழி இவைகளின் ரத்தத்தை எடுத்துக் கலந்து மண் சட்டியில் வைத்து மாசி கருப்பு எனும் கருப்பண்ண சாமிக்கு ஆகாய பூஜை நடத்தப்படும். பூஜை செய்யும் பூசாரியை சங்கிலியால் கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். பூசாரி அருள் வந்து ஆடும் போது அந்த மண்சட்டி காணாமல் போய்விடும். மறுநாள் அந்த மண் சட்டியை தேடிப் போக ஏதாவது ஒரு மரத்தடியில் இருக்கும் அந்த மண் சட்டியிலிருந்த உணவு காணாமல் போயிருக்கும். அந்த மண் சட்டியை இக்குலத்தில் பிறந்து வெளியில் திருமணமாகிச் சென்ற பெண்கள் சூடம் ஏற்றி வணங்கி விட்டு வருவர். அந்த சமயத்தில் ஆண் வாரிசு யாரும் உடன் செல்லமாட்டார்கள்.
திருச்சியிலிருந்து சமயபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது பனமங்கலம் என்ற கிராமம். இங்கு வடிவாம்பிகா சமேதவாரணபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இத்தல ஈசன் அருள்பாலிக்கும் பாணலிங்கத்தின் உய ரம் 11 அடி 3 அங்குலம். அதில் இரண்டரை அடி உயரம் ஆவுடையார் மீதும் மீதமுள்ள பகுதி ஆவுடையாரின் உள்ளேயும், ஆவுடையாருக்கு அடி யிலும் பதிக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருமேனியில் பட்டை பட்டையான பதிவுகள் காணப்படுகின்றன. உளிபடாத லிங்கத் திருமேனி இது.
சென்னை கச்சாலீஸ்வரர் கோயிலில் மூலவர் கூர்மாசனம் (ஆமை), அஷ்ட நாகாசனம் (8 நாகங்கள்), சிம்மாசனம் (சிங்கம்), யுகாசனம் (காலங்கள்), கமல - விமலாசனம் (தாமரை மலர் குவிந்தும், விரிந்தும்) என 5 இருக்கைகளில் அமர்ந்து காட்சி தருகிறார். சிவபெருமான், அனைத்து ஆலயங்களிலும் லிங்க உருவமாக தரிசனம் தருகிறார். ஆனால், இத்திருக்கோயிலில்தான் மூல லிங்கத்தின் பின்புறம் ஐந்து முகங்களுடன் சதாசிவ மூர்த்தியாக, மனோன்மணி தாயாருடன் காட்சி
தருகிறார்.
கும்பகோணம் - மயிலாடுதுறை அருகே உள்ளது நன்னிலம். இங்குள்ள ' திருகொண்டீஸ்வரர்' ஆலயத்தில் உள்ள லிங்கம் பிளவுபட்டு இருக்கும். இவ்வாலத்திலுள்ள ஜுர தேவருக்கு தீராத ஜுரம் உள்ளவர்கள் புழுங்கல் அரிசி, மிளகு ரசம் வைத்து சுவாமி நைவேத்தியம் செய்து சாப்பிட்டால் தீராத ஜுரம் விலகும் என்பது ஐதீகம்.
எத்தனையோ பெருமாள் கோவில்களுக்கு சென்றிருப்பீர்கள், அங்கெல்லாம் அமர்ந்த நிலை பெருமாள், பள்ளி கொண்ட பெருமாள், நின்ற நிலை பெருமாளையே பார்த்திருப்பீர்கள் ஆனால், எட்டு கைகளுடன், அவற்றில் ஆயுதங்கள் தரித்து கம்பீரமாய் புன்னகை தவழும் முகத்துடன் நிற்கும் பெருமாளை பார்த்திருப்பீர்கள? அப்படிப்பட்ட பெருமாளை காஞ்சிபுரம் 'அஷ்டபுஜகரம் பெருமாள் கோவி'லில் காணலாம்.
புதுகோட்டைக்கு அருகில் உள்ள பொற்பனைக் கோட்டை என்ற ஊரில் உள்ள ' பைரவர் கோவிலில் பைரவரின் உருவம் பத்து அடிக்கு மேல் உயரமுள்ளது. பைரவருக்கு ஏணி மீது ஏறியே தினமும் அபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. இவருக்கு வெள்ளிக் கிழமை சந்தனக் காப்பும், வடை மாலையும் சாத்துகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 'பராஞ்சேரி' என்ற ஊரில் உள்ள 'துர்க்கை கோவி'லில் துர்க்கை அம்மன் பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார். பள்ளிகொண்ட துர்க்கை சிலையை வேறு எங்கும் காண முடியாது.
விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முகாசபரூர் கிராமத்தில் அன்னபூரணி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிவில் பல்லவ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் கோரக்கர் சித்தர் வந்து தங்கி பூஜைகள் செய்து வந்தார். பின்னர் இங்கேயே ஜீவ சமாதி அடைந்ததாக கோரக்கர் சித்தர் எழுதிய தனிநூல் தெரிவிக்கிறது. கோயில் வளாகத்தில் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தனி சன்னதி உள்ளது. இந்த ச+-ன்னதியில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் பவுர்ணமி பூஜை சிறப்பு வாய்ந்தது.
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள 'பிள்ளைபாளையம்' என்னுமிடத்தில் உள்ள புறாக்கோவிலுள்ள சிவலிங்கம் எங்குள்ளது தெரியுமா? நட்டுநடு வயலில் சேறறுக்குள்ளே உள்ளது. இந்த சிவனுக்கு 'வன்மீக நாதர்' என்று பெயர்.
'செம்பாக்கம்' 'ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோவி'லின் தலவிருட்சம் 'நாவல் மரம்.' சூரியன், சந்திரன், புதன் முதலான ஒன்பது கிரகங்களும் இங்கு வழிபட்டது இக்கோவிலின் தனிச் சிறப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே 'மங்கலம்' எனும் கிராமத்தில் உள்ளது அரவாண்டியம்மன் கோவில். இங்கு வேறு எந்த புத்தர் சிலையிலும் காணப்படாத அழகிய மீசையுடன் கூடிய தியானக் கோலத்தில் இருக்கும் புத்தர் சிலையை காணலாம். உள்ளூர் மக்கள் இப்புத்தர் சிலையை 'செட்டியார் சாமி' என அழைத்து வழிபடுகிறார்கள்.
எந்த ஓர் ஆலயத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு தலவிருட்சங்கள்தான் இருக்கும். ஆனால் தென்காசியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆய்க்குடி எனும் கிராமத்தில் உள்ள 'ஸ்ரீ பாலசுப்ரமண்யர் ஆலய'த்தில் ஐந்து தலவிருட்சங்கள் உள்ளன. அவை அரசு, வேம்பு, மா, மாதுளை, கறிவேப்பிலை.
காஞ்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் அருகிலுள்ள 'சோமங்கல சோமநாதர் கோவில்.' இங்குள்ள நடராஜர் எங்குமில்லாத சதுர தாண்டவ கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலும் கோவிலைச் சுற்றி வேலி போன்று 12 எல்லைக் கோவில்களுடன் சரியான சதுர அமைப்பில் சதுர்வேதியாக அமைந்துள்ளது. எங்குமே காண இயலாததாகும். இதனாலேயே இக்கோவில் ' சதுர்வேதி ' என்றும் ' சதுர தாண்டவ ஆலயம் ' என்றும் கூறப்படுகிறது. இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரம்.
சென்னையிலுள்ள 'திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில்'தான் உலகின் முதல் கோவில் என்பது ஐதீகம். இங்கே ஒரு பாதம் மட்டுமே இருக்கும் 'ஏகபாத மூர்த்தி சிலை' உள்ளது. வேறு எந்தக் கோவிலிலும் இப்படி இல்லை. இந்த ஆலயத்தின் தலவிருட்சம் 'அத்தி மரம்'.
ஜெயங்கொண்டான் அருகில் உள்ள வைரவனீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப் பயிற்சி தந்தவர். இராவணனிடம் குட்டுப் பெற்ற விநாயகர் திருக்கோகர்ணம் கோயிலில் உள்ளார். திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் அருணகிரிநாதர் வழிபட்ட விநாயகர் இருக்கிறார். பாபநாசம் அருகில் உள்ள திருக்கருவாய்க் கரைப்புத்தூரில் இருக்கும் விநாயகர் கும்ப கர்ணனை தண்டித்தவர்.
எத்தனை விநாயகர்கள்!
நவரத்தினம் - மாணிக்க விநாயகர், இரத்தின விநாயகர்.
நவகிரகம் - சூரிய விநாயகர், சந்திர விநாயகர்.
அஷ்டலட்சுமி - தனலட்சுமி விநாயகர், தான்யலட்சுமி விநாயகர்.
வண்ணம் - வெள்ளை விநாயகர், மஞ்சள் விநாயகர்.
தெய்வம் - விஷ்ணு விநாயகர், பிரம்ம விநாயகர்.
மலர்கள் - செண்பக விநாயகர், பாதிரி விநாயகர்.
திக்குகள் - இந்திர விநாயகர், குபேர விநாயகர்.
பருவங்கள் - பால விநாயகர், விருத்த விநாயகர்.
பஞ்ச பூதங்கள் - பஞ்ச பூத விநாயகர், பிருத்வி விநாயகர்.
ஊர் வலஞ்சுழி விநாயகர், மயூரேச விநாயகர்.
டிரான்ஸ்ஃபர் விநாயகர்
திருப்பூரிலிருந்து கோவை செல்லும் வழியில் உள்ள விநாயகரிடம் பணி இடம் மாறுதல் கேட்டு வேண்டி, அது கிடைப் பதால் அவரை 'டிரான்ஸ்ஃபர் விநாயகர்' என்கிறார்கள்.
மரத்தடி விநாயகர்கள்
ஆத்தி மரத்தடி விநாயகர் - சங்கரன்கோவில்
இலந்தையடி விநாயகர் - கீழ்வேளூர்
புளியமரத்தடி விநாயகர் - சென்னிமலை
ஒண்டிமரத்தடி விநாயகர் - சென்னை-திருவான்மியூர்
ஆலடி விநாயகர் - துடிசை
வன்னிமரத்தடி விநாயகர் - புத்தூர்
மந்தார மரத்தடி விநாயகர் - ஆற்றூர்
மாவடி விநாயகர் - மயிலாடுதுறை
தாலமூல(பனை மரத்தடி)
விநாயகர் திருக்கச்சூர்
பதினொரு விநாயகர்கள்
திருவள்ளூர் அருகில் உள்ள திருப்பாச்சூரில் உள்ள வாகீசுவரர் கோயிலில் மூலவருக்கு முன்னால் விநாயகர் திருச்சபை உள்ளது. இச்சபையில் வலம்புரி விநாயகர் நடுநாயகமாக வீற்றிருக்க, பத்து விநாயகர்கள் இவருக்கு இடது புறத்திலும், முன்னரும் வீற்றருள்கின்றனர். பதினொரு விநாயகர்களும் வீற்றருளும் இந்த இடம் ‘விநாயகர் சபை’
No comments:
Post a Comment