எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, February 25, 2017

பஞ்ச பாஸ்கர தலங்கள்

ஆவணியாபுரம் சிம்மபுரீஸ்வரர் திருகோயில் , திருவண்ணாமலை மாவட்டம்சிம்ம ராசிக்காரர்கள் , மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய மகத்தான திருகோயில்.மிக பழமையான பச்சை நிற மரகத திருமேனி கொண்ட இத்தலத்து இறைவன் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் .பிரசித்தி பெற்ற நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ள மலை அடிவாரத்தில் இத்திருகோயில் அமைந்துள்ளது ..,(சிங்காந்தி)

திருநள்ளாறு -கொல்லுமாங்குடி சாலையில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது நெடுங்காடு எனும் கிராமம் , பிரதான சாலையிலேயே உள்ளது இக்கோயில். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் விளங்கும் இக்கோயில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட சிறப்புடைய கோயில்.நெடுங்காடு சிவன்! கோயிலை முதல் முதலாக பார்ப்பவர்கள் அசந்து போவார்கள்! சிவந்த நிறக் கற்களால் கலை நயத்தோடு கட்டப்பட்ட மிக அழகிய திருக்கோயில்! அம்மை பெயர் நெடுந் துயர் தீர்த்த நாயகி! அருள் பொங்கும் 'நம் தாயைப் போன்றே' திருமுகம்! காணப் பெற்றவர் பாக்கியம் செய்தவரே! தொல்பொருள் துறையால் நன்கு பராமரிக்கப்படும் இத்திருக்கோயிலில் இறைவனும் இறைவியும் பக்தர்களாகிய தம் பிள்ளைகள் வருகைக்காக தனிமையில் காத்திருகின்றனர்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஞாயிறு , திருசிறுகுடி ,திருபரிதிநியமம், திருமங்கலக்குடி, தலைஞாயிறு ஆகிய ஐந்தும் பஞ்ச பாஸ்கர தலங்கள் என போற்றப்படுகிறது .இவற்றில் ஞாயிறு தலம் மட்டுமே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஏனைய நான்கும் தஞ்சை மாவட்டத்திலேயே அமைந்துள்ளது .இவை அனைத்துமே சூரிய பகவானால், தனது தோஷம் நீங்குவதற்காக , வணங்கப்பட்ட திருகோயில்கள் ஆகும்.பருத்தியப்பர் திருகோயில் மூலவர் .பாஸ்கரேஸ்வரர் .தஞ்சாவூரிலிருந்து(15 கி.மீ) பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உளூரில் இறங்கி கிழக்கே 2 கி.மீ தூரத்தில் பரிதியப்பர்கோவில் உள்ளது. http://shivabelievers.blogspot.in/


அருள்மிகு திரு மணிச்சேறை உடையார் கோயில், பெரணமநல்லூர், இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம்.பழநியில் முருகனுக்கு போகர் சித்தர் நவபாஷாணத்தால் சிலை அமைத்தது போல, திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேட்டில் உள்ள திருமணிச்சேறை உடையார் கோயிலில் நவபாஷாண லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டுதான் நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது.பாம்புக்கடிக்கு சிறந்த மருந்தாக இந்த தீர்த்தம் பயன்படுகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்று பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment